வா பெண்ணே காரணம் இல்லாமல் காதலிக்கலாம்

Posted: நவம்பர் 25, 2008 by அடலேறு in கவிதை, காதல்
குறிச்சொற்கள்:,

va-penny-karanam-illamal-kadhalikkalam
உன்னை நினைத்து உருகியது இல்லை,
உனக்காக கவிதை புனைந்ததும் இல்லை,
உன்னுடைய நினைவுகள் என்னுடைய தூக்கத்தை மறக்கடித்ததும் இல்லை !!
அழகு சிலையாம் நீ ! ஆனால் உன்னுடைய அழகு என்னை சலனப்படுத்தியது கிடையாது,
எல்லாரையும் திமிராக பார்க்குமாம் உன் சுடிதார் பட்டாம் பூச்சிகள் ! !
எனக்கு அந்த பட்டாம் பூச்சிகள் நிறம் கூட நியாபகத்தில் இல்லை,
படுக்கையில் உன்னை நினைத்து தூக்கம் வராமல் புரண்டது கிடையாது,
கனவுகளில் உன்னை தொலைத்து தேடியதும் கிடையாது,
இப்படி எந்த காரணம் இல்லாமல் வருவதற்கு பெயர் தான் காதலம்
அதனால் தான் சொல்கிறேன்
” வா பெண்ணே காரணம் இல்லாமல் காதலிக்கலாம் ”
If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. Sriram சொல்கிறார்:

  அது தானே காதலிக்க காரணம் தேவையா?

 2. அடலேறு சொல்கிறார்:

  அமாங்க காரணம் தேவை இல்லை, காரணம்

  இருந்தாலும் காதல் காதல் தான்

 3. Kavitha சொல்கிறார்:

  Super!!!!!!!!!

  At last you changed your style!!!!

 4. அடலேறு சொல்கிறார்:

  ஸ்டைல் லா இல்ல அது அன்னைக்கு இருந்த

  மனநிலை இது இன்னைக்கு இருக்கற மனநிலை

  அவ்ளோ தாங்க. பின்னுட்டத்திற்கு நன்றிங்க கவிதா.

 5. kunthavai சொல்கிறார்:

  ரெம்ப இயல்பான நடையில், அழகா எழுதியிருக்கீங்க.
  வாழ்த்துக்கள்.

 6. Arunkumar சொல்கிறார்:

  Thambi,

  Vun yeluthukkal nandaraka irukirathu,

  Neram kidaikum pothellam padikiren,

  Neeyum Thamzhilum, Munnerae mattrum Valara Valthukkal.

  Anbudan
  Annan

 7. அடலேறு சொல்கிறார்:

  நன்றிங்க குந்தவை , உங்கள் படைப்புகள் அழகா இருக்கு ,

  கண்டிப்பா ஒரு நாள் முழுதும் உங்கள் வலை பக்கத்துல

  செலவிடனும் போல இருக்கு.

 8. அடலேறு சொல்கிறார்:

  ஹாய் எங்க அண்ணா பின்னுட்டம் குடுத்துட்டாரு,

  தேங்க்ஸ் அண்ணா , தொடர்ந்து வலைப்பக்கம் வாங்க.

 9. neeja சொல்கிறார்:

  whose this feed back your fighting brother ah adaleru

 10. அடலேறு சொல்கிறார்:

  இல்ல இது எங்க அருண் அண்ணா , கொரியா ல இருக்காரு.

  அநேகமா பல வருஷம் கழிச்சு அவரு தமிழ் ல யோசிட்சு

  பின்னுட்டம் குடுதுருக்கரார்ன்னு நினைக்கற

 11. Neeja சொல்கிறார்:

  No body wont belive your brother dosen’t know tamil na,

  fast updating your site now a days good.

 12. அடலேறு சொல்கிறார்:

  நா அப்படி சொல்லுல நீஜ்ஜா தமிழ்ல அவருக்கு அவ்ளோ

  பழக்கம் இல்ல அது தான் , நீங்க தப்பா புருஞ்சுடீங்க. எங்க

  அண்ணா பாத்தாரு என்ன டா ஒரு பின்னுட்டத்துக்கு

  இவ்ளோ பிரச்சனையான்னு கேப்பாரு .

  நன்றிங்க நீஜ்ஜா பின்னுட்டத்திற்கு

 13. Manuthi சொல்கிறார்:

  அழகான வரிகள்,
  //வா பெண்ணே காரணம் இல்லாமல் காதலிக்கலாம் //
  இன்னும் நிறைய எழுதுங்க

 14. Neeja சொல்கிறார்:

  For your brother sake i will leave this fight , and one more thing your webpage appreance is look and good

 15. Stalin சொல்கிறார்:

  Nice post adaleru. keep on post

 16. அடலேறு சொல்கிறார்:

  நன்றிங்க மானுதி, நீஜ்ஜா, ஸ்டாலின்

 17. Ramya சொல்கிறார்:

  Am supposed to go through wordpress sometimes…
  Its too Good…. 🙂
  Give your best…
  Happy New Year 2009

 18. நிலவன் சொல்கிறார்:

  உறவே வணக்கம் அடலேறு என்பது இன்று வழக்கில் சில இடங்களில் பாவிக்கப்பட்டாலும் பாவிப்பது குறைவடைந்த நிலையில் தங்களது தளம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. காதற்கவிதைகள் அற்புதம், ஏன் காதலிலே வீழ்ந்துவிட்டீர்களோ அல்லது காதலால் வீழ்த்தப்பட்டு விட்டீர்களோ? ஏதோ சுமையான காதலை சுகமாகச் சுமக்கின்றீர் போல எதுவாக இருந்தாலும் கவிதைகள் அற்புதம். வரிகளில் ஓர் திடம். காதலில் என்றென்றும் நீ வடம்.

 19. நிலவன் சொல்கிறார்:

  ஆயிரம் பாயிரம் எழுதினாலும்
  அத்தனைக்கும் அர்த்தங்கள் புரியாது
  வேதிலியாய் இருந்தாலும்
  வேதங்கள் உன்னை விடாது
  காதலனாய், காதலிலே வீழ்ந்தவனாய்
  கவித எழுதுகையில் தெரியாதா உணர்ச்சிகள்?
  மாடல்ல, மரமல்ல
  மாடற்றம் மாண்புமிகும் மனிதனடா நீ!

  வீடில்லை வீடிருந்தும் வீட்டில் யாருமில்லை
  விதியதுவி வீரவிளையாட்டின் விம்பமடா தமிழன்
  காலக்கண்ணாடி உடைந்தாலும்
  காலத்தின் வழி கீறல்கள் விழுந்தாலும்
  காலமேதாழ்த்தி கவிதைவரி வடித்தாலும்
  கண்ணாடி எண்டு பொன்னாலே ஆனதல்ல
  பொடியான மண்ணாலே ஆனதடா!

  வியர்வைத்துளி தோன்றுகையில்
  தொழிலாளி நினைத்திருப்பான் ஊதியம் கிடைக்குமென்று
  பட்டு வேட்டியுடுத்து
  குடைபிடித்து வருபவனோ தின்று போகின்றான்
  தொழிலாளி மனம் ஏதோ தொலைத்ததாய் தேடுமே!
  அதுவும் காதல்தான்
  தொழிலாலே பணத்தில் உண்டான காதல்தான்

 20. நிலவன் சொல்கிறார்:

  காய்ந்த கருவாடு
  எழுதும் ஒருவீடு
  காதல் மழை நனைகையிலே
  நிலாவும் தேன்கூடு
  புகழ்ச்சிகள் தேவையில்லை
  புளகாங்கிதம் ஏதுமில்லை
  இகழ்ச்சிகள் சொன்னால்
  இஞ்சிக்காதென்மனது
  அஞ்சி இருக்கவில்லை
  ஆறுதல் வார்த்தைக்காய்
  கெஞ்சிக் கேட்கின்றேன்
  புதுக்கவிஞன் எனக்கோர்
  எழுத்தாணி பிடித்து
  எழுதப்பழக்கிடும்
  ஆசிரியராய் நீர் வேண்டும்
  ஆறுதலாய் நாலுவார்த்தை
  அன்புடனே அறிவூட்ட
  ஆனந்தக் கழிப்புடன் நண்பராய் நீர்வேண்டும்

  காய்ந்த கருவாடு – பென்சில் காய்ந்து போன கரிய வடு காரீயம்
  மாறித் தப்பான கருத்தெடுத்துவிடவேண்டாம்

 21. Neena சொல்கிறார்:

  My first visit to this site… Very nicely written… Wishes for your talents and tamil to develop… Think i would have to cling to this site for many more interesting stuff… Keep the work !!!

 22. யாழ்நிலவன் சொல்கிறார்:

  அடலேறு,

  வெற்றி பெற்றபின்னர் தோல்விகள் இல்லையென்றில்லை, வெற்றி பெறமுன்னர் இருந்ததைக்காட்டிலும் வெற்றி பெற்றபின்னர்தான் ஆழமான தோல்விகள் தோன்றும்.

  ஏதோ எனக்கு கவிதையிற் போராடப்பிடிக்கும் ஆதலால் தான் தங்களுடன் போராடலாம் அல்லது வேரோடு ஊராடலாம், உறவாடலாம் என்றெண்ணி தொடர் கவிதைகளால் அன்பு உபத்திரவம் கொடுத்தேன் ஆனால் நீங்கள் தவறாக எண்ணினீர்கள் போலும் திடீரென்று பதில்கள் போடாது நிறுத்திவிட்டீர்கள்.

  கல்வி என்பது பார்க்கப் பார்க்க வளர்வது இல்லை, போட்டி வேண்டும் பொறாமை இழந்த போட்டி வேண்டும். அதை தங்களிடம் எதிர்பார்க்கின்றேன், தொடர் தமிழ் வரிகள் தொடரிகளாக, அடரிகளாக வளரவேண்டும்…

  தமிழிழ் போர் என்றால் தமிழ் அழிவதல்ல, அதிலே புகுந்திருக்கும் வேற்றுமொழிச்சொற்களை அழிப்பது, வேரறுப்பதுவும் தமிழின் வளர்ச்சிதான். போராடுவோம் எம் தூயதமிழ் தொடரட்டும் தரணியெங்கும் ஆழட்டும்…

  • அடலேறு சொல்கிறார்:

   கண்டிப்பாக இல்லை நிலவன் , தவறாக நினைப்பதற்தோ , ஏமாற்றம் தருவதற்க்கோ என்றுமே அடலேறுக்கு மனம் ஒப்பாது. அன்று அதிகமான வேலை பளு அதன் காரணமாக தான் பின்னுட்டத்தில் மறுமொழி தர இயலவில்லை, பிழையாக கருத வேண்டாம். அடலேறு வலைப்பக்கம் என்றும் நிலவனின் நண்பன்.
   தாருங்கள் உங்கள் கவிதைகளை பின்னுட்டமாய் இருப்போம் அனைவருக்கும் ஒரு முன்னோட்டமாய்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s