ஜனவரி, 2009 க்கான தொகுப்பு

tamil-letters1

வழகொடிந்து போன சில வழக்கங்களை பற்றியோ அல்லது வார்த்தைகளைப் பற்றியோ ஒரு தொடர் பதிவு எழுத அழைப்புன்னு சொல்லி “பெரிய மனதுடன் அழைப்பை ஏற்றுக்கொள்வார் என்று நம்பி அழைக்கிறேன் ” ன்னு கண்டிப்பா அழைப்பை ஏற்க்க வைத்த தோழி குந்தவைக்கு நன்றி .

நான் குந்தவை மாதிரி நிறைய யோசிக்கல ஏன்னா இங்க வழகொடிந்து போன பெயரை வெச்சு தான வலைபதிவுல பொழைப்பே நடத்துற.

இனி வழகொடிந்து போன வார்த்தைகளைப் பற்றி பாக்கலாம்

அ) அடலேறு :- அடலேறு என்றால் வலிமை மிகுந்த சிங்கம்.
அது மட்டும் இல்லாம ஜல்லிகட்டுல யாருமே அடக்க முடியாத காளைக்கு அடலேறுன்னு சொல்லுவாங்க. அதுக்குன்னு நீங்க காளையா சிங்கமான்னு கேக்க கூடாது. அது மட்டும் இல்லாம போரில் புற முதுகு காட்டாதவன் அடலேறு.
ஆனா இப்ப சிங்கத்த யாருமே அடலேறுன்னே கூப்டறது இல்ல

ஆ) சோறு : இப்ப எல்லாரும் சாப்பாடுன்னு தான் சொல்றாங்க ஆனா அதோட உண்மையான சொல் பதம் வந்து சோறு தான். அம்மா சோறு போடுங்கன்னு இப்ப யாரும் சொல்றது இல்ல , சாப்பாடு போடுங்கன்னு தான் சொல்றாங்க. சோறுங்கர
வார்த்தயே இப்போது குறைஞ்சு போயிருச்சு
இ) தமக்கை, தமையன் :- இந்த தமையன் தமக்கை மிக அழகானது தமிழ் வார்த்தை ஆனா இத எல்லாருமே மறந்துட்டாங்க.

அது மட்டும் இல்ல நம்ம மக்கள் பழமொழிய கூட தப்பா தான் அர்த்தம் கொல்றாங்க

எடுத்துக்காட்டா கீழ இருக்க பழமொழிய பாருங்க உங்களுக்கே புரியும்

திரித்த பழமொழி :- ” ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்”

திரித்த பொருள் :- ஆயிரம் பேரை வைத்தியத்தில் கொன்றால்தான் அவன் அரை வைத்தியன்

உண்மை பழமொழி :- ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன்

உண்மை பொருள் :- முதல் காலத்துல நம் தமிழனின் மருத்துவ முறை சித்த வைத்தியம், சித்த வைத்தியதிற்கு முக்கியமான பொருள் முலிகை வேர்கள் தான் , அதன் காரணமாக வந்தது தான் மேற்குறிய பழமொழி அதாவது எவன் ஒருவன் தன்னிடம் ஆயிரம் வேரை கொண்டுள்ளானோ அவன் தான் அரை வைத்தியன்னு பொருள் .

திரித்த பழமொழி :- களவும் கற்று மற

திரித்த பொருள் :- தீய பழக்கமான களவையும் நாம் கற்று மறந்து விட வேண்டும்

உண்மை பழமொழி :- களவும் கத்தும் மற

உண்மை பொருள் :- களவு – திருடுதல் கத்து- பொய் சொல்லுதல்
தீய பழக்கமான திருடுதல் பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில்
மறக்க வேண்டும் என்பதே. இப்படி நம் மக்களே பழமொழியின் அர்த்தத்தை மாற்றும் போது “வழகொடிந்து போன சில பழமொழிகள்” தலைப்புல ஒரு தொடர் பதிவு வந்தாலும் வரலாம்.

இதோட நான் முடிக்க கூடாதாம், மூன்று பேரை வேற மாட்டிவிடனுமாம். அதுக்குத் தான் நிறைய சங்கத்து மக்கள் இருக்காங்களே, அதனால

மோகன் : போன தடவ என்ன தொடர் பதிவுல மாட்டி விட்டாரு அதனால இந்த தடவ மோகன் மாட்ட வெச்சுட்ட. புதுசா இன்னொரு வலை பக்கம் அரம்பிட்சு அதிலும் கலக்குறாரு கண்டிப்பா நம்ம தொடர் பதிவுல கலந்துக்குவாரு

இனிய தோழி பிரியா : அழகான பதிவுகள் மூலமா தன்னோட வலை பக்கத்தின் எண்ணிக்கயை தாறு மாற உயர்தரவங்க நிட்சயமா இந்த அழைப்பை ஏத்துக்குவாங்கன்னு நம்பற.

உமா : குறுகிய காலத்துல அதிகமாக பதிவுகள் அனைத்தும் அவங்க புன்னகை மாதிரியே அழகான பதிவுகள் எழுதி தனக்குன்னு ஒரு ரசிகர் வட்டத்தை வெட்சுருக்கவங்க. நிச்சயமா இந்த தொடர் பதிவுல கலந்துக்குவாங்கன்னு நம்பலாம்

If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

Advertisements

பேச்சுலர் வாழ்க்கை

Posted: ஜனவரி 22, 2009 by அடலேறு in வாழ்க்கை
குறிச்சொற்கள்:, ,

bachelor
பேச்சிலர் இந்த வார்த்தைய உச்சரிக்கும் போதே முன்னால் பேச்சிலர்களுக்கு இந்நாள் பேச்சிலர் பத்தி ஒரு பெரிய பிம்பம் விழுகும் அது என்னன்னா ( தம் , தண்ணி , தேவை இல்லமா ஊர் சுத்தறது) இப்படி அடுக்கீட்டே போவாங்க ஆனா பேச்சிலர் உண்மை நிலை என்ன?

தனக்கும் , தன்ன சுத்தி இருக்கவங்களுக்கும் தன்னால முடிஞ்ச எதாவது செய்யனும்னு தான் எல்லா பேச்சுலர்ஸ்மே ( சென்னை,மதுரை,பெங்களூர்,மும்பை, டெல்லின்னு ) வீட்ல கட்டி குடுத்த கூட்டாசோரோட ரயில் ஏறாங்க, ஆனா வெளி ஊருக்கு கிளம்பும் போது எல்லாருமே கேட்கறது இது தான் , ஏண்டா மூஞ்சிய உம்ம்முன்னு வெச்சுருக்கன்னு ? அந்த உம்முக்கு பின்னாடி பல அர்த்தங்கள் இருக்கு அத நிறைய பேரு கண்டுக்கறதே இல்ல.

அதுல முதல்ல வர்றது சின்ன வயசுல இருந்து சொல்லி சொல்லி வளந்த ” எங்க ஏரியான்னு ” நாளைல இருந்து சொல்ல முடியாது , இது வரைக்கும் கூட சுத்திட்டு இருந்த ஸ்டாலின் கூடவோ, மெளலி கூடவோ, பாலாஜி கூடவோ, இல்ல நாய் கோபாலோ கூடவோ நாளைல இருந்து சுத்த முடியாது , அதுக்கு மேல இது வரைக்கும் திருட்டு தனமாவே சைட் அடிச்ச பின்னாடி வீட்டு கார்த்தி மீனாவோ, எதிர் வீட்டு கீதாவோ, இப்படி இத்தியாதி இத்தியாதி விசயங்களை எல்லாம் நாளைல இருந்து சுத்தமா மறந்தர வேண்டியது தான்,அது எல்லாத்துக்கும் மேல அம்மாவோட அன்பு , அப்பாவோட திட்டு, அண்ணனோட சண்டை , அக்காவோ தங்கச்சியோ கைல சாப்பாடு இது எல்லாத்தியும் ஒரே நாள்ல விடனும்னா எப்படி இருக்கும், இது மாதிரி சென்னை போன நம்ம கிராமத்து (வயசான) பிரண்ட் எழுதின கடிதாசி கவிதை ரொம்ப நாளுக்கு முன்னாடி எழுதுனது இருந்தாலும் நல்லா தான் இருக்கு நீங்களும் படிச்சு பாருங்க

நித்தமும் நான் தவிச்சு இருப்ப உன்னையே தான் நினைச்சுருப்ப,

இங்க சென்னைல காலைல ஆச்சுதுன்னா வேலைக்கு தான் வண்டி வரும் ,

9 மணிநேர வேலை முடிஞ்சு திரும்பி வருகையில உன் நினைப்பும் தான் கூட வரும் ,

சரியாதான் சாப்புடற இருந்தாலும் ஒடம்பு ஏற இல்ல,

தினமும் தான் உன்ன நினைச்சுருக்க இருந்தாலும் காதல் மாற இல்ல,

அங்க உன் முரட்டு அப்பன் எப்படி இருக்கா ?

முனுகாம அழுகும் உன் அம்மாவும் எப்படி இருக்கா ?

எப்பவும் முறைச்சு பாக்கும் உன் தம்பி தான் முழுவதுமா வளந்து நிப்பா!

எப்பவுமே கண்ணுக்குள்ள வந்து நிக்கற இருந்தாலும் அங்க கூட தான் தள்ளி நிக்கற ,

மறக்காம போன் பண்ணு , வெள்ளிகிழமை ஆட்சுதுன்னா

உன் பச்சை தாவணிக்கு தான் தடை பண்ணு ,

கண்டவனும் பாத்திடுவா, காதும் காதும் வெச்சு பேசிடுவா ,

மொத்தமா உன் அழக கண்ணாலயே அளந்திடுவா,

அடுத்த திங்களுக்கு தான் வந்திடுவ, சொல்லி வெய்யு உங்க வீட்ல பந்தலிட,

அடியேய் வெளையாட்டுக்கு தான் சொல்லிபுட்ட ,வெவகாரம் ஆக்கி புடாத,

ஆனாலும் உனக்காக தான் ரயிலேருவ ஊருக்கு தான் வந்து சேர,

வந்ததும் உனக்கு காதல்ல வெளங்காத அர்த்தமெல்லாம் வெளங்க வெக்கற !!!

பேச்சுலர் வாழ்க்கைல நம்ப பேச்சுலர் லைப் ஸ்டைலே வேற! எந்த முடிவு எடுத்தாலும் அது நம்ம முடிவு தான் யாருகிட்டயும் கேட்க வேண்டியது இல்ல. எல்லாரும் பேச்சிலர் பொறுப்பு இல்லாதவன்னு தான் திட்டறாங்க ஆனா வாங்குன சம்பளம் முழுசும் வீட்டுக்கு குடுத்துட்டு மாச கடைசில ஒரு டீ தம்மோட தன்னோட ஒரு நாள் முழுசும் ஓட்டற பேச்சிலர் பத்தி எத்தன பேருக்கு தெரியும் கைல காசு இல்லாதப்ப “எங்கடா சாப்பிட போகலாம் ?” அப்படின்னு ஒரு கேள்வி வந்தா எல்லாரும் மூஞ்சிய மூஞ்சிய பாத்துட்டு கோடம்பாக்கத்துல கெளம்பி அப்படியே ஊர்ந்துபோய் டி.நகர்ல கொஞ்சநேரம் கலர் பார்த்துட்டு, ஏதாவது தள்ளுபடி கடைல வெறும் வேடிக்கை மட்டும் பாத்துட்டு மறுபடியும் பஸ்சு புடிச்சு வீட்டுக்கு 11 மணிக்கு வந்தாலும் கவலையில்லை! பசங்களுக்கு எல்லாமே ஒன்னுதான்!

இதுல்ல என்ன ஸ்பெசல்னா நம்ம இவ்ளோ சம்பாதிக்கறோம் இப்ப நம்ம கைல காசே இல்லன்னு நம்ம பசங்க ஒரு நாலு கூட நினைக்க மாட்டங்க , வீட்டுக்கு தான் எல்லாத்தையும் கொடுத்துருக்கம்ன்னு நிம்மதியா டீய மட்டும் குடிச்சுட்டு சந்தோசமா தூங்குவாங்க நம்ம பேச்சுலர்ஸ்.இருந்தாலும் ரூம் பசங்க எல்லாரும் ஊருக்கு போய்ட்டா அந்த தனிமை தான் ரொம்ப கொடுமைன்னு எல்லா பேச்சுலர்ஸ்ம் சொல்றாங்க,ஆமா அது உண்மை தான் யாருமே உணர முடியாத தனிமை எல்லா பேச்சுலர்ஸ் வாழ்கையுழும் இருக்கு , இது மட்டும் இல்ல இன்னும் எவ்வளவோ இருக்கு பேச்சுலர்ஸ் பத்தி பேச அத பத்தி விரிவா இன்னொரு பதிவு பின்னாடி போடற. இவ்ளோ தெரிஞ்சதுக்கு அப்பறமும் யாரும் பேச்சுலர்ஸ் பத்தி தப்ப பேசாதீங்க !!!

டிஸ்கி: இந்த பதிவு பொட்டி தட்டற IT பேச்சுலர்ஸ்க்கு பொருந்தாது
If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!