பேச்சுலர் வாழ்க்கை

Posted: ஜனவரி 22, 2009 by அடலேறு in வாழ்க்கை
குறிச்சொற்கள்:, ,

bachelor
பேச்சிலர் இந்த வார்த்தைய உச்சரிக்கும் போதே முன்னால் பேச்சிலர்களுக்கு இந்நாள் பேச்சிலர் பத்தி ஒரு பெரிய பிம்பம் விழுகும் அது என்னன்னா ( தம் , தண்ணி , தேவை இல்லமா ஊர் சுத்தறது) இப்படி அடுக்கீட்டே போவாங்க ஆனா பேச்சிலர் உண்மை நிலை என்ன?

தனக்கும் , தன்ன சுத்தி இருக்கவங்களுக்கும் தன்னால முடிஞ்ச எதாவது செய்யனும்னு தான் எல்லா பேச்சுலர்ஸ்மே ( சென்னை,மதுரை,பெங்களூர்,மும்பை, டெல்லின்னு ) வீட்ல கட்டி குடுத்த கூட்டாசோரோட ரயில் ஏறாங்க, ஆனா வெளி ஊருக்கு கிளம்பும் போது எல்லாருமே கேட்கறது இது தான் , ஏண்டா மூஞ்சிய உம்ம்முன்னு வெச்சுருக்கன்னு ? அந்த உம்முக்கு பின்னாடி பல அர்த்தங்கள் இருக்கு அத நிறைய பேரு கண்டுக்கறதே இல்ல.

அதுல முதல்ல வர்றது சின்ன வயசுல இருந்து சொல்லி சொல்லி வளந்த ” எங்க ஏரியான்னு ” நாளைல இருந்து சொல்ல முடியாது , இது வரைக்கும் கூட சுத்திட்டு இருந்த ஸ்டாலின் கூடவோ, மெளலி கூடவோ, பாலாஜி கூடவோ, இல்ல நாய் கோபாலோ கூடவோ நாளைல இருந்து சுத்த முடியாது , அதுக்கு மேல இது வரைக்கும் திருட்டு தனமாவே சைட் அடிச்ச பின்னாடி வீட்டு கார்த்தி மீனாவோ, எதிர் வீட்டு கீதாவோ, இப்படி இத்தியாதி இத்தியாதி விசயங்களை எல்லாம் நாளைல இருந்து சுத்தமா மறந்தர வேண்டியது தான்,அது எல்லாத்துக்கும் மேல அம்மாவோட அன்பு , அப்பாவோட திட்டு, அண்ணனோட சண்டை , அக்காவோ தங்கச்சியோ கைல சாப்பாடு இது எல்லாத்தியும் ஒரே நாள்ல விடனும்னா எப்படி இருக்கும், இது மாதிரி சென்னை போன நம்ம கிராமத்து (வயசான) பிரண்ட் எழுதின கடிதாசி கவிதை ரொம்ப நாளுக்கு முன்னாடி எழுதுனது இருந்தாலும் நல்லா தான் இருக்கு நீங்களும் படிச்சு பாருங்க

நித்தமும் நான் தவிச்சு இருப்ப உன்னையே தான் நினைச்சுருப்ப,

இங்க சென்னைல காலைல ஆச்சுதுன்னா வேலைக்கு தான் வண்டி வரும் ,

9 மணிநேர வேலை முடிஞ்சு திரும்பி வருகையில உன் நினைப்பும் தான் கூட வரும் ,

சரியாதான் சாப்புடற இருந்தாலும் ஒடம்பு ஏற இல்ல,

தினமும் தான் உன்ன நினைச்சுருக்க இருந்தாலும் காதல் மாற இல்ல,

அங்க உன் முரட்டு அப்பன் எப்படி இருக்கா ?

முனுகாம அழுகும் உன் அம்மாவும் எப்படி இருக்கா ?

எப்பவும் முறைச்சு பாக்கும் உன் தம்பி தான் முழுவதுமா வளந்து நிப்பா!

எப்பவுமே கண்ணுக்குள்ள வந்து நிக்கற இருந்தாலும் அங்க கூட தான் தள்ளி நிக்கற ,

மறக்காம போன் பண்ணு , வெள்ளிகிழமை ஆட்சுதுன்னா

உன் பச்சை தாவணிக்கு தான் தடை பண்ணு ,

கண்டவனும் பாத்திடுவா, காதும் காதும் வெச்சு பேசிடுவா ,

மொத்தமா உன் அழக கண்ணாலயே அளந்திடுவா,

அடுத்த திங்களுக்கு தான் வந்திடுவ, சொல்லி வெய்யு உங்க வீட்ல பந்தலிட,

அடியேய் வெளையாட்டுக்கு தான் சொல்லிபுட்ட ,வெவகாரம் ஆக்கி புடாத,

ஆனாலும் உனக்காக தான் ரயிலேருவ ஊருக்கு தான் வந்து சேர,

வந்ததும் உனக்கு காதல்ல வெளங்காத அர்த்தமெல்லாம் வெளங்க வெக்கற !!!

பேச்சுலர் வாழ்க்கைல நம்ப பேச்சுலர் லைப் ஸ்டைலே வேற! எந்த முடிவு எடுத்தாலும் அது நம்ம முடிவு தான் யாருகிட்டயும் கேட்க வேண்டியது இல்ல. எல்லாரும் பேச்சிலர் பொறுப்பு இல்லாதவன்னு தான் திட்டறாங்க ஆனா வாங்குன சம்பளம் முழுசும் வீட்டுக்கு குடுத்துட்டு மாச கடைசில ஒரு டீ தம்மோட தன்னோட ஒரு நாள் முழுசும் ஓட்டற பேச்சிலர் பத்தி எத்தன பேருக்கு தெரியும் கைல காசு இல்லாதப்ப “எங்கடா சாப்பிட போகலாம் ?” அப்படின்னு ஒரு கேள்வி வந்தா எல்லாரும் மூஞ்சிய மூஞ்சிய பாத்துட்டு கோடம்பாக்கத்துல கெளம்பி அப்படியே ஊர்ந்துபோய் டி.நகர்ல கொஞ்சநேரம் கலர் பார்த்துட்டு, ஏதாவது தள்ளுபடி கடைல வெறும் வேடிக்கை மட்டும் பாத்துட்டு மறுபடியும் பஸ்சு புடிச்சு வீட்டுக்கு 11 மணிக்கு வந்தாலும் கவலையில்லை! பசங்களுக்கு எல்லாமே ஒன்னுதான்!

இதுல்ல என்ன ஸ்பெசல்னா நம்ம இவ்ளோ சம்பாதிக்கறோம் இப்ப நம்ம கைல காசே இல்லன்னு நம்ம பசங்க ஒரு நாலு கூட நினைக்க மாட்டங்க , வீட்டுக்கு தான் எல்லாத்தையும் கொடுத்துருக்கம்ன்னு நிம்மதியா டீய மட்டும் குடிச்சுட்டு சந்தோசமா தூங்குவாங்க நம்ம பேச்சுலர்ஸ்.இருந்தாலும் ரூம் பசங்க எல்லாரும் ஊருக்கு போய்ட்டா அந்த தனிமை தான் ரொம்ப கொடுமைன்னு எல்லா பேச்சுலர்ஸ்ம் சொல்றாங்க,ஆமா அது உண்மை தான் யாருமே உணர முடியாத தனிமை எல்லா பேச்சுலர்ஸ் வாழ்கையுழும் இருக்கு , இது மட்டும் இல்ல இன்னும் எவ்வளவோ இருக்கு பேச்சுலர்ஸ் பத்தி பேச அத பத்தி விரிவா இன்னொரு பதிவு பின்னாடி போடற. இவ்ளோ தெரிஞ்சதுக்கு அப்பறமும் யாரும் பேச்சுலர்ஸ் பத்தி தப்ப பேசாதீங்க !!!

டிஸ்கி: இந்த பதிவு பொட்டி தட்டற IT பேச்சுலர்ஸ்க்கு பொருந்தாது
If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

பின்னூட்டங்கள்
 1. ஜானு சொல்கிறார்:

  அட அநியாயமே..
  IT பிரமச்சாரிகள் மாத்திரம் இல்லை ..IT குடும்பஸ்தர்களும் பாச்சுலர் வாழ்கை இல்ல வாழ்ந்துட்டு வரோம் .. இப்படி சொல்லிட்டீங்களே..எங்களையும் சேர்த்துகோங்க அடலேறு..

  கண்டம் விட்டு கண்டம் மாறி
  கட்டு கட்டா துட்டு சேர்த்தும்
  ஒத்த ரூவா எனக்கு இல்ல
  மொத்த பணமும் அனுப்பி வைப்பேன் !
  பொட்டி தட்டும் புள்ள எனக்கு
  எப்ப வேணா வேல போகும்
  என் கவலை என்னோடு
  என் பொண்டாட்டி என் புள்ளகளோடு !
  கண்ணுல வரும் கண்ணீ ரடக்கி
  பத்து டாலர் கார்டு வாங்கி
  பத்து நிமிஷம் டெய்லி பேச
  கட் பண்ணிட்டேன் ‘காலை டிபனை’
  கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி,
  என்ன புரிஞ்சுக்கத்தான் நாதி இல்ல ..!

  அன்புடன்,
  ஜானு

  • அடலேறு சொல்கிறார்:

   ஐயயோ இனி ஜானு பின்னுட்டம் போடுவாங்கன்னு ரொம்ப கவனமா தான் பதிவு போடனும்மாட்ட இருக்கே. ஜானு நானும் பொட்டி தட்டரவந்தான் என்ன நான் இந்தியால பொட்டி தட்டற நீங்க ஆஸ்திரேலியால பொட்டி தட்டறீங்க.
   கவிதை சூப்பர்ஆ இருங்குங்க ஜானு. பின்னுட்டத்திற்கு நன்றிகள்

 2. Kavitha சொல்கிறார்:

  Your Kavithai reminds me of the song…. “Unnaku Yennathan Inneram Kathuirruken….”

  Post is good………….

 3. Suresh சொல்கிறார்:

  mikavum arumai adaleru. Pinringa ponga. Ungala adika all illa. Vazhthukkal.

 4. tamilselvi சொல்கிறார்:

  hey alagana karuthu pa singam
  janu kavithai athai vida alagu

 5. Zia சொல்கிறார்:

  This is the real life style of batchleors

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s