வழக்கொழிந்த வார்த்தைகள்-தொடர் பதிவு

Posted: ஜனவரி 24, 2009 by அடலேறு in தமிழ், தொடர் பதிவு
குறிச்சொற்கள்:, ,

tamil-letters1

வழகொடிந்து போன சில வழக்கங்களை பற்றியோ அல்லது வார்த்தைகளைப் பற்றியோ ஒரு தொடர் பதிவு எழுத அழைப்புன்னு சொல்லி “பெரிய மனதுடன் அழைப்பை ஏற்றுக்கொள்வார் என்று நம்பி அழைக்கிறேன் ” ன்னு கண்டிப்பா அழைப்பை ஏற்க்க வைத்த தோழி குந்தவைக்கு நன்றி .

நான் குந்தவை மாதிரி நிறைய யோசிக்கல ஏன்னா இங்க வழகொடிந்து போன பெயரை வெச்சு தான வலைபதிவுல பொழைப்பே நடத்துற.

இனி வழகொடிந்து போன வார்த்தைகளைப் பற்றி பாக்கலாம்

அ) அடலேறு :- அடலேறு என்றால் வலிமை மிகுந்த சிங்கம்.
அது மட்டும் இல்லாம ஜல்லிகட்டுல யாருமே அடக்க முடியாத காளைக்கு அடலேறுன்னு சொல்லுவாங்க. அதுக்குன்னு நீங்க காளையா சிங்கமான்னு கேக்க கூடாது. அது மட்டும் இல்லாம போரில் புற முதுகு காட்டாதவன் அடலேறு.
ஆனா இப்ப சிங்கத்த யாருமே அடலேறுன்னே கூப்டறது இல்ல

ஆ) சோறு : இப்ப எல்லாரும் சாப்பாடுன்னு தான் சொல்றாங்க ஆனா அதோட உண்மையான சொல் பதம் வந்து சோறு தான். அம்மா சோறு போடுங்கன்னு இப்ப யாரும் சொல்றது இல்ல , சாப்பாடு போடுங்கன்னு தான் சொல்றாங்க. சோறுங்கர
வார்த்தயே இப்போது குறைஞ்சு போயிருச்சு
இ) தமக்கை, தமையன் :- இந்த தமையன் தமக்கை மிக அழகானது தமிழ் வார்த்தை ஆனா இத எல்லாருமே மறந்துட்டாங்க.

அது மட்டும் இல்ல நம்ம மக்கள் பழமொழிய கூட தப்பா தான் அர்த்தம் கொல்றாங்க

எடுத்துக்காட்டா கீழ இருக்க பழமொழிய பாருங்க உங்களுக்கே புரியும்

திரித்த பழமொழி :- ” ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்”

திரித்த பொருள் :- ஆயிரம் பேரை வைத்தியத்தில் கொன்றால்தான் அவன் அரை வைத்தியன்

உண்மை பழமொழி :- ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன்

உண்மை பொருள் :- முதல் காலத்துல நம் தமிழனின் மருத்துவ முறை சித்த வைத்தியம், சித்த வைத்தியதிற்கு முக்கியமான பொருள் முலிகை வேர்கள் தான் , அதன் காரணமாக வந்தது தான் மேற்குறிய பழமொழி அதாவது எவன் ஒருவன் தன்னிடம் ஆயிரம் வேரை கொண்டுள்ளானோ அவன் தான் அரை வைத்தியன்னு பொருள் .

திரித்த பழமொழி :- களவும் கற்று மற

திரித்த பொருள் :- தீய பழக்கமான களவையும் நாம் கற்று மறந்து விட வேண்டும்

உண்மை பழமொழி :- களவும் கத்தும் மற

உண்மை பொருள் :- களவு – திருடுதல் கத்து- பொய் சொல்லுதல்
தீய பழக்கமான திருடுதல் பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில்
மறக்க வேண்டும் என்பதே. இப்படி நம் மக்களே பழமொழியின் அர்த்தத்தை மாற்றும் போது “வழகொடிந்து போன சில பழமொழிகள்” தலைப்புல ஒரு தொடர் பதிவு வந்தாலும் வரலாம்.

இதோட நான் முடிக்க கூடாதாம், மூன்று பேரை வேற மாட்டிவிடனுமாம். அதுக்குத் தான் நிறைய சங்கத்து மக்கள் இருக்காங்களே, அதனால

மோகன் : போன தடவ என்ன தொடர் பதிவுல மாட்டி விட்டாரு அதனால இந்த தடவ மோகன் மாட்ட வெச்சுட்ட. புதுசா இன்னொரு வலை பக்கம் அரம்பிட்சு அதிலும் கலக்குறாரு கண்டிப்பா நம்ம தொடர் பதிவுல கலந்துக்குவாரு

இனிய தோழி பிரியா : அழகான பதிவுகள் மூலமா தன்னோட வலை பக்கத்தின் எண்ணிக்கயை தாறு மாற உயர்தரவங்க நிட்சயமா இந்த அழைப்பை ஏத்துக்குவாங்கன்னு நம்பற.

உமா : குறுகிய காலத்துல அதிகமாக பதிவுகள் அனைத்தும் அவங்க புன்னகை மாதிரியே அழகான பதிவுகள் எழுதி தனக்குன்னு ஒரு ரசிகர் வட்டத்தை வெட்சுருக்கவங்க. நிச்சயமா இந்த தொடர் பதிவுல கலந்துக்குவாங்கன்னு நம்பலாம்

If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. மோகன் சொல்கிறார்:

  அடலேறு பிரமாதம். அதுவும் வழக்கு மாறிய பழமொழிகள் விஷயம் அருமையோ அருமை. நீங்கள் இந்த மாதிரி அவ்வபொழுது இந்த மாதிரி மாறிய பொருட்களைப் பற்றி பதிவுகள் வழங்குங்கள். நான் இத்தொடர் பதிவில் கலந்துக் கொள்ள முயற்சி செய்கிறேன்.

 2. kunthavai சொல்கிறார்:

  நான் பண்ணின் ஒரே நல்ல காரியம் உங்களை கோத்துவிட்டது தான் என்று நினைக்கிறேன். எவ்வளவு நல்ல வார்த்தைகளையும் பழமொழிகளையும் நியாபகப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி தமையனாரே.
  அடலேறு அடலேறு தான்.

  ஏற்கனவே மோகன் இந்த தொடரில் இருக்கிறார் , ஆனா பதிவு தான் எழுதவில்லை

  • அடலேறு சொல்கிறார்:

   நன்றிங்க குந்தவை , என்னது மோகன் தொடர்ல இருந்தும் பதிவு எழுதுலயா, இந்தப்பா மோகன் பதிவ போடுங்க இல்லன்னா, ஆட்டோல நானும் குந்தவையும் பொருள போடவேண்டியது தான். சும்மா சிக்கிரம் பதிவ போடுங்க மோகன்.

 3. uumm சொல்கிறார்:

  அழைப்பிற்க்கு..மிக்க.நன்றி..அடலேறு.

  வழக்கொடிந்த வார்த்தைகள்..எங்கள் கோவையில்..ஏராளம்.அழகான கொங்குத்தமிழில்.பேச மறந்து(அல்லது மறுத்து) தொலைத்த வார்த்தைகள்,அவ்வப்போது..என் பேச்சில்..சரளமாய் வரும்.அதற்க்கு அர்த்தம் சொல்லி..கேளி செய்யப்பட்டது..தனிக்கதை…எனவே.ஞாபகம் வருவதை..அவ்வப்போது..எழுதுகிறேன்.

  1.வட்டில்: சாப்பிடும் தட்டு..அதற்க்கு தகுந்தாற்ப்போல்.பெரியதாய்..அகன்ற..விளிம்புடன்..இருக்கும்.

  2.

 4. Priya சொல்கிறார்:

  நிச்சயமாகவே வரவேற்க்கத்தக்க தொடர் பதிவு தான்… தங்கள் பதிவு, புதிய தகவல்களை தந்தது ( களவும் கற்று மற)

  என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி.. என்னால் முயன்றததை எழுதுகிறேன்…

 5. Jayagopal சொல்கிறார்:

  Nice Information and really it created an Idea that what is behind the proverbs.

 6. Sriram சொல்கிறார்:

  கலக்கிட்டீங்க “திரு . வலிமையான சிங்கம் ” அவர்களே…

 7. tamilselvi சொல்கிறார்:

  alagana palamozhi gal
  but we missed it
  ippo yaru pa pazhamozhi solranga
  tamil pesarathuke aalai kanom
  innum konja nalil valakuolinthu pona thonmayana mozhi nu
  topic varama eruntha santhosham

 8. சாம் சொல்கிறார்:

  உங்க அளவுக்கு எழுதலை ஆனாலும் ..
  என்னுடைய இந்த பதிவும், இதை சார்ந்தது…

  http://samuel-sammy.blogspot.com/2009/01/blog-post.html

  • அடலேறு சொல்கிறார்:

   சாம் வணக்கம், அருமையான வலை பதிவ வெட்சுகிட்டு இவ்ளோ அமைதியா இருக்கீங்க. உங்கள் கருத்து அருமை நண்பரே.
   தங்களின் வலை பக்கத்தில் பின்னுட்டம் இட முடியவில்லை, என் ஐ டீ யில் சிறிது பிரச்சனை அவ்வளவே.
   வாழ்த்துக்களுடன்
   அடலேறு

 9. kalee சொல்கிறார்:

  அடலேறு உங்கள் தமிழ் பற்று என்னை மிகவும் நன்முறையில் பாதிக்கிறது. வாழ்த்துக்கள்.

  நடைமுறை மொழி:
  பந்திக்கு முந்தி படைக்கு பிந்தி

  உண்மையான பழமொழி:
  பந்திக்கு முன் தீ படைக்கு பின் தீ
  பந்திக்கு முன் தீயிட்டு உணவை சமைப்பார்கள் ஆனால் படை வெற்றி பெற்றவுடன் தோல்வி அடைந்த நாட்டின் பிடிக்காத பகுதிகளை தீயிட்டு கொளுத்துவார்கள்.

  • Sammy சொல்கிறார்:

   ஒரு தமிழ் வாத்தியார் எனக்கு சொன்னது….
   பந்திக்கு முந்திக்கோ , படைக்கு பிந்திக்கோ..

   அதாவது நாம சாப்பிடும் போது ..கை எப்படி முகத்துக்கு முன்னாடி கொண்டு வந்து சாபிட்றோமோ … அதே மாதிரி படை மற்றும் போர்கலில் வில் வீரர்கள் தங்கள் கை நல்லா பின்னாக இழுத்து வில் எய்ய வேண்டும் என்பது தான் இதன் பொருள் .

   கப்பலே கவுந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே..

   இதை பற்றி இங்கு எழுதி உள்ளேன்.
   http://samuel-sammy.blogspot.com/2009/01/blog-post.html

 10. kalee சொல்கிறார்:

  ஞாபகத்திலிருந்து இன்னொன்று,

  நடைமுறை மொழி:
  சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
  உண்மையான பழமொழி:
  சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
  அதாவது சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் சிசு வரும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் அதற்கான வரம் வேண்டுவோர் சஷ்டியில் விரதம் இருக்க வேண்டும் என்பது ஒரு நம்பிக்கை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s