ஜூன், 2009 க்கான தொகுப்பு

angel1சாதரணமாகவே நீ வரும்
கல்லுரி பேருந்து சற்று
கர்வத்துடன் தான்
தார்சாலை வலம் வரும்
இன்று அந்த பேருந்துக்கு
தலை கால் புரியாது

எப்போதும் ஒருவித
ஆணவத்துடனேயே
என்னை முறைத்து பார்க்கும்
உன் சுடிதார் பட்டாம்புச்சிகள்
இன்று அதற்கு என்னை கண்டால்
இன்னும் கொஞ்சம் கொழுப்பு
ஏறி தான் போகும்

இன்று நீ உடுத்த போகும்
புது உடை உன் உடல்
தீண்டின போதை தெளிய
நாளை இரவு கூட ஆகலாம்.

என்னை பார்க்க தாமதாய்
வருவது தவிர்க்க
மணி பார்க்க நீ
பயன்படுத்தும் கை கடிகாரம்
என்னமோ நீ
அதை தான் பார்ப்பதாய்
நினைத்து கொண்டு
இன்றும் என்னுடன்
சண்டைக்கு வரும்

நேற்றே என் கண்களுக்கு
பாடம் எடுத்து விட்டேன்
உன்னை கண்டதும்
உன் பின்னாடியே செல்லாமல்
சற்று நேரமாவது என் உடன் இருக்க!!!
எனக்கு நம்பிக்கை
இல்லை உன்னை கண்டதும்
எப்போது வேண்டுமானாலும்
நம்பிக்கை இல்லா தீர்மானம்
நிறைவேற்றும்.

பலூன் கடைக்காரர்
எப்போதோ சொல்லி விட்டார்
தேவதையின் பிறந்தாள்
பலூகளுக்கெல்லாம்
காசு வாங்குவதில்லை என்று !!!
உனக்காக உடைபடும்
பலூன்களுக்கு தான்
எவ்வளவு சந்தோசம்.

எனக்கு தெரியும்
இன்று உன்னை காணும்
பிரம்மிப்பு நீங்குவதற்கே
எனக்கு பல நாட்கள் ஆகும்!!!
இன்று உன்னை பார்த்தவுடன்
எனக்கே ஒரு சந்தேகம்
பிறந்த நாளன்று
உன்னை தேவதை
என்று குறைத்து மதிப்பிட்டேனோ என்று
உண்மையை சொல்
நீ தேவதைகளின் தேவதைதானே …….

If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

Advertisements

roadleaf

நான் மகிழ்ச்சியாய் இருக்கும் ஒவ்வொரு தருணமும் உன்னயே நினைத்து கொள்கிறேன், உன்னை நினைக்கும் ஒவ்வொரு தருணமும் நான் மகிழ்ச்சியாகவே இருப்பதாய் உணர்கிறேன்.

காரணமே இல்லாமல் உன்னை கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் போல் உள்ளது அதற்காக வேணும் கொஞ்சம் என்னுடன் சண்டை போடேன்.

உலகின் மிக அழகான கவிதை புத்தகம் ஒன்று என் அறையில் உள்ளது. அதில் அனைத்து பக்கத்திலும் உன் பெயரே நிறைந்து உள்ளது.

நீ போடும் கோலத்தை போல் எங்கு ஆரம்பித்து எங்கு முடிகிறது என சொல்ல முடிவதில்லை உன் முத்தமும்.

அழகு போட்டிக்கு நீ எதற்கு போகிறாய் பேசாமல் நீ சுருட்டி போட்ட உன் கூந்தல் முடியை அனுப்பு அது போதும்.

எனக்கு இருக்கும் ஆசையெல்லாம் இரண்டே இரண்டு தான்
உன்னை காதலிக்க வேண்டும் மற்றும் உன்னை
இன்னும் அதிகதிகமாய் காதலிக்க வேண்டும்.

உனக்கு மழை பிடிக்குமா இல்லை தூறல் பிடிக்குமா
என்றாய் மழை என்றேன்…
உனக்கு வானவில் பிடிக்குமா இல்லை வண்ண நிலவு பிடிக்குமா என்றாய் வானவில் என்றேன்…..
உனக்கு கவிதை பிடிக்குமா இல்லை கனவு பிடிக்குமா
என்றாய் கனவு என்றேன்….
உனக்கு மயிலிறகு பிடிக்குமா இல்லை மண்பாண்டம் பிடிக்குமா என்றாய் மண்பாண்டம் என்றேன்…
இவைகள் மட்டும் பிடிக்க காரணம் என்ன என்றாய் ???
பெரிதாக வேறொன்றும் இல்லை அனைத்துமே உன்னை நினைவு படுத்துகின்றன அதனால் தான் என்றேன்.
ஓடி வந்து இறுக கட்டிக்கொண்டு காதருகே கேட்டாய்

உனக்கு முத்தம் பிடிக்குமா இல்லை மோகம் பிடிக்குமா என்று
நான் இரண்டும் என்றேன்.

If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!