இன்னும் கொஞ்சம் காதலி

Posted: ஜூன் 8, 2009 by அடலேறு in Adaleru, கவிதை, காதல், தமிழ், love
குறிச்சொற்கள்:, , , ,

roadleaf

நான் மகிழ்ச்சியாய் இருக்கும் ஒவ்வொரு தருணமும் உன்னயே நினைத்து கொள்கிறேன், உன்னை நினைக்கும் ஒவ்வொரு தருணமும் நான் மகிழ்ச்சியாகவே இருப்பதாய் உணர்கிறேன்.

காரணமே இல்லாமல் உன்னை கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் போல் உள்ளது அதற்காக வேணும் கொஞ்சம் என்னுடன் சண்டை போடேன்.

உலகின் மிக அழகான கவிதை புத்தகம் ஒன்று என் அறையில் உள்ளது. அதில் அனைத்து பக்கத்திலும் உன் பெயரே நிறைந்து உள்ளது.

நீ போடும் கோலத்தை போல் எங்கு ஆரம்பித்து எங்கு முடிகிறது என சொல்ல முடிவதில்லை உன் முத்தமும்.

அழகு போட்டிக்கு நீ எதற்கு போகிறாய் பேசாமல் நீ சுருட்டி போட்ட உன் கூந்தல் முடியை அனுப்பு அது போதும்.

எனக்கு இருக்கும் ஆசையெல்லாம் இரண்டே இரண்டு தான்
உன்னை காதலிக்க வேண்டும் மற்றும் உன்னை
இன்னும் அதிகதிகமாய் காதலிக்க வேண்டும்.

உனக்கு மழை பிடிக்குமா இல்லை தூறல் பிடிக்குமா
என்றாய் மழை என்றேன்…
உனக்கு வானவில் பிடிக்குமா இல்லை வண்ண நிலவு பிடிக்குமா என்றாய் வானவில் என்றேன்…..
உனக்கு கவிதை பிடிக்குமா இல்லை கனவு பிடிக்குமா
என்றாய் கனவு என்றேன்….
உனக்கு மயிலிறகு பிடிக்குமா இல்லை மண்பாண்டம் பிடிக்குமா என்றாய் மண்பாண்டம் என்றேன்…
இவைகள் மட்டும் பிடிக்க காரணம் என்ன என்றாய் ???
பெரிதாக வேறொன்றும் இல்லை அனைத்துமே உன்னை நினைவு படுத்துகின்றன அதனால் தான் என்றேன்.
ஓடி வந்து இறுக கட்டிக்கொண்டு காதருகே கேட்டாய்

உனக்கு முத்தம் பிடிக்குமா இல்லை மோகம் பிடிக்குமா என்று
நான் இரண்டும் என்றேன்.

If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

பின்னூட்டங்கள்
 1. Vani சொல்கிறார்:

  Beautiful lines 🙂

 2. அடலேறு சொல்கிறார்:

  நன்றிங்க வாணி

 3. Suresh சொல்கிறார்:

  Hi Adaleru,

  Congrats for the 10000 hits of your blog. Keep going. Very nice and beautiful lines.

  All the best.

 4. Janu சொல்கிறார்:

  Hello Adaleru,

  ரொம்ப மன்னிக்கணும். இன்னிக்கு தான் உங்க பக்கம் வர நேரம் கிடைத்ததற்கு. நாம எழுதரத்தில் இருக்கிற ஒரு பெரிய நஷ்டம், அது நம்ம நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்ரதோட மட்டும் இல்லாமல், இப்படி நல்ல எழுத்துகளை படிக்கிற வாய்ப்பையும் குறைச்சுடுது.

  உங்க ப்ளாக் பக்கம் வந்தால் , சும்மா கலக்கி இருக்கிறீங்க. பலவும் நாம இயல்பாய் அனுபவிப்பது பற்றி சுகமாய் எழுதி இருக்கீங்க ….அப்பறம் , நீங்க என்னை பார்த்து பொறாமை படறீங்களா இல்லை அனுதாபப் படறீங்களா ? எதாச்சும் ஸ்பெல்லிங் மிச்டகேஸ் சொற் குற்றம் பொருட்குற்றம் ..அல்லது இரண்டுமே !! ???? என்னை வச்சு காமெடி எதுவும் பண்ணலையே !!

  • அடலேறு சொல்கிறார்:

   வணக்கம் ஜானு, உங்க வலைபக்கதுல தான் நீங்க கலக்கோ கலக்குன்னு கலக்கறீங்க.
   //ரொம்ப மன்னிக்கணும்//
   எதுக்கு மன்னிப்பு
   //என்னை பார்த்து பொறாமை படறீங்களா இல்லை அனுதாபப் படறீங்களா //
   நிச்சயமா பொறாமை தாங்க ஜானு , என்ன எனக்கு சிறுகதை அவ்வளவா வர்றது இல்ல அது தான்.
   //என்னை வச்சு காமெடி எதுவும் பண்ணலையே //
   நீங்க நம்ம சங்கத்து ஆளு உங்கள வெச்சு காமெடியா இல்லவே இல்ல
   தங்களின் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றிங்கள், தங்கள் வலைபக்கத்தின் கடவு சொல்ல மறக்காம அனுப்பி வைங்க

 5. Janu சொல்கிறார்:

  // தங்கள் வலைபக்கத்தின் கடவு சொல்ல மறக்காம அனுப்பி வைங்க

  என்னப்பா இது ?
  கடவு சொல்லை ஏற்கனவே அனுபிட்டேனே ? மைல்சை செக் பண்ணி பாருங்க..ஸ்பாம்கு போய்டுச்சோ .. ??

  //என்ன எனக்கு சிறுகதை அவ்வளவா வர்றது இல்ல அது தான்.
  அப்ப உங்களுக்கு நல்லா வருகிற பெரிய கதை எழுதுங்க..கவிதை எழுதுங்க.. படிகரதுக்கு தான் நாங்க இருக்கோமே 🙂

  //நீங்க நம்ம சங்கத்து ஆளு உங்கள வெச்சு காமெடியா இல்லவே இல்ல
  //தங்களின் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றிங்கள்,
  சங்கத்துல சேர்துகிடீங்க ..அப்பறம் எதுக்கு நமக்குள்ளே நன்றி எல்லாம்.

  • அடலேறு சொல்கிறார்:

   ஆமா மெயில் பாத்த ஜானு வந்துருக்கு, நான் உங்கள சங்கத்துல சேக்கல ஜானு, நம்ம எல்லாரும் சேந்து தா சங்கமே ஓடுது. வாழ்த்துக்கள் ஜானு. இப்பதா கடவுசொல் கிடைச்சுருக்கு ,பதிவுகளை படிச்சுட்டு மொத்தமா பின்னுட்டம் போடற.

 6. Mohan சொல்கிறார்:

  அடலேறு, உங்க வலைப் பக்கத்தை ஆரம்பத்தில் இருந்தே படித்து வருகிறேன். நன்றாக அனுபவித்து எழுதி வருகிறீர்கள். தொடருங்கள்! மனம் கனிந்த வாழ்த்துக்கள்!

  • அடலேறு சொல்கிறார்:

   நன்றி மோகன், தொடர்ந்து வலைப்பக்கம் வாருங்கள். தங்களுடைய பதிவுகளையும் பலமுறை படித்துள்ளேன் ஆனால் பாருங்கள் கூகிள் வலைபக்கங்களுக்கு பின்னுட்டம் இடுவதில் தான் சிக்கல். எனது IDயில் எதோ குளறுபடி அதானால் தான் கூகிள் செயல் படும் எந்த வலைபக்கதிர்க்கும் பின்னுட்டம் இட முடியவில்லை உங்களுடைய வலைப்பக்கம் சேர்த்து. உங்களுடைய பதிவுகளில் காணலாம் எதார்தமான வரிகளை. வாழ்த்துக்கள். மோகன் தொடர்ந்து எழுதுங்கள். பின்னுட்டத்திற்கு நன்றிகள்.

 7. நட்புடன் ஜமால் சொல்கிறார்:

  பெரிதாக வேறொன்றும் இல்லை அனைத்துமே உன்னை நினைவு படுத்துகின்றன அதனால் தான் என்றேன்.
  ஓடி வந்து இறுக கட்டிக்கொண்டு காதருகே கேட்டாய்

  உனக்கு முத்தம் பிடிக்குமா இல்லை மோகம் பிடிக்குமா என்று
  நான் இரண்டும் என்றேன்]]

  ஆஹா! ஆஹா!

  முழுவதும் அருமை

  இவை மிகவும் இரசித்தேன்.

  எதனை படிக்கின்றோமோ அதன் தாக்கம் வாசகனுக்கு வந்து விடுகின்றது

  இப்போ வேலையில் இருக்கேன் சீக்கிரம் வீட்டுக்கு போகனும் …

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s