தேவதைகளின் தேவதை பிறந்தநாள்

Posted: ஜூன் 22, 2009 by அடலேறு in கவிதை, காதல், தமிழ், நட்சத்திரப் பதிவு, வாழ்த்து, birthday, love
குறிச்சொற்கள்:, , , , ,

angel1சாதரணமாகவே நீ வரும்
கல்லுரி பேருந்து சற்று
கர்வத்துடன் தான்
தார்சாலை வலம் வரும்
இன்று அந்த பேருந்துக்கு
தலை கால் புரியாது

எப்போதும் ஒருவித
ஆணவத்துடனேயே
என்னை முறைத்து பார்க்கும்
உன் சுடிதார் பட்டாம்புச்சிகள்
இன்று அதற்கு என்னை கண்டால்
இன்னும் கொஞ்சம் கொழுப்பு
ஏறி தான் போகும்

இன்று நீ உடுத்த போகும்
புது உடை உன் உடல்
தீண்டின போதை தெளிய
நாளை இரவு கூட ஆகலாம்.

என்னை பார்க்க தாமதாய்
வருவது தவிர்க்க
மணி பார்க்க நீ
பயன்படுத்தும் கை கடிகாரம்
என்னமோ நீ
அதை தான் பார்ப்பதாய்
நினைத்து கொண்டு
இன்றும் என்னுடன்
சண்டைக்கு வரும்

நேற்றே என் கண்களுக்கு
பாடம் எடுத்து விட்டேன்
உன்னை கண்டதும்
உன் பின்னாடியே செல்லாமல்
சற்று நேரமாவது என் உடன் இருக்க!!!
எனக்கு நம்பிக்கை
இல்லை உன்னை கண்டதும்
எப்போது வேண்டுமானாலும்
நம்பிக்கை இல்லா தீர்மானம்
நிறைவேற்றும்.

பலூன் கடைக்காரர்
எப்போதோ சொல்லி விட்டார்
தேவதையின் பிறந்தாள்
பலூகளுக்கெல்லாம்
காசு வாங்குவதில்லை என்று !!!
உனக்காக உடைபடும்
பலூன்களுக்கு தான்
எவ்வளவு சந்தோசம்.

எனக்கு தெரியும்
இன்று உன்னை காணும்
பிரம்மிப்பு நீங்குவதற்கே
எனக்கு பல நாட்கள் ஆகும்!!!
இன்று உன்னை பார்த்தவுடன்
எனக்கே ஒரு சந்தேகம்
பிறந்த நாளன்று
உன்னை தேவதை
என்று குறைத்து மதிப்பிட்டேனோ என்று
உண்மையை சொல்
நீ தேவதைகளின் தேவதைதானே …….

If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. அஞ்சனா சதுர்வேதி சொல்கிறார்:

  நீங்க ரொம்ப நல்லா பதிவிடறீங்கனு சொல்லி சொல்லி அது வெகு இயல்பான வார்த்தையா போயிருச்சு.

  ஆனாலும் சொல்ற அழகான வரிகள்

  //இன்று நீ உடுத்த போகும் புது உடை உன் உடல்
  தீண்டின போதை தெளிய நாளை இரவு கூட
  ஆகலாம்.//

  Chanceless lines.
  Who is this lucky தேவதைகளின் தேவதை girl.?

  • அடலேறு சொல்கிறார்:

   நன்றிங்க அஞ்சனா சதுர்வேதி தங்களின் நீண்ட நாள் வருகைக்கு.

   //Who is this lucky தேவதைகளின் தேவதை girl.?//
   அவள் தான் தேவதைகளின் தேவதை
   ( சில்வண்டு சிக்கும் சிறுத்த சிக்காதுல) 🙂

 2. Neethu சொல்கிறார்:

  Wowwwww coooool buddy . Again you rock

 3. Ahmad சொல்கிறார்:

  After a long gap again I visit your page,
  Hey dude god gifted you nicely.

 4. பிரியன் விமலன் சொல்கிறார்:

  // தேவதை என்று குறைத்து மதிப்பிட்டேனோ என்று உண்மையை சொல் நீ தேவதைகளின் தேவதைதானே //

  அவ்ளோ அழகா உங்க காதலி.

 5. Neeja சொல்கிறார்:

  Hi adaleru,

  awasome post. how you think about this kind of words.

 6. Suresh சொல்கிறார்:

  Hi Thambu,

  Its really fantastic. All the lines are very nice. Keep posting.

 7. கை.அறிவழகன் சொல்கிறார்:

  வந்துட்டமுள்ள, நீங்க எந்த ஊரு? நம்ம ஊருப் பய புள்ளக வாசனை அடிக்குது???
  ஒங்க கவிதைகளுக்கு டிசைன் போடுற மகராசன் யாரு?? நமக்கும் கொஞ்சம் போடச் சொல்லுங்க, மதுரைக் காரப் பயக தான் இப்புடி தமிழ டவுசருக்கு உள்ளேயே வச்சிக்கிட்டு சுத்துவாங்கே……நீங்க கொஞ்சம் சமூகக் கவிதைகளும் எழுதலாமுள்ள, காதல், காதல்னு பூராத்தையும் கன்னக் கசக்க விடுவிக்க போலத் தெரியுது……

  வாழ்த்துக்கள் நண்பா, உன் வலைப்பூ மென்மேலும் சிறக்கட்டும், நெஞ்சம் நிறைய வாழ்த்துகிறேன்.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

  • அடலேறு சொல்கிறார்:

   //வந்துட்டமுள்ள//
   ரொம்ப நன்றி மாப்பி
   //நீங்க எந்த ஊரு? நம்ம ஊருப் பய புள்ளக வாசனை அடிக்குது???//
   நாங்க தான் கொங்கு நாட்டு சிங்கம்ல
   //நீங்க கொஞ்சம் சமூகக் கவிதைகளும் எழுதலாமுள்ள, காதல், காதல்னு பூராத்தையும் கன்னக் கசக்க விடுவிக்க போலத் தெரியுது……//
   என்ன பண்றது நமக்கு இது தா வருது, முயற்சி பண்ற.
   //வாழ்த்துக்கள் நண்பா, உன் வலைப்பூ மென்மேலும் சிறக்கட்டும், நெஞ்சம் நிறைய வாழ்த்துகிறேன்.//
   நன்றி நண்பா.
   உங்க பஞ்சாயத்துக்கு வருவோம்
   //((நீ விட்டுப் போன வெற்றிடத்தை…))கடலைப் போலவே என் காதலும்
   இன்னும் வற்றாமல் கிடக்கிறது//
   இதுல யாரு அந்த வெற்றிடத்த வெச்சது தங்கச்சி பேர்தா சொல்றது??? , பயபுள்ள சொல்லாமயே மறைக்குற விட்ருவமா விடமாட்டம்ள மாப்ளைய சொல்ற வரைக்கும்.

 8. Bhuvanesh சொல்கிறார்:

  //நேற்றே என் கண்களுக்கு பாடம் எடுத்து விட்டேன்
  உன்னை கண்டதும் உன் பின்னாடியே செல்லாமல்
  சற்று நேரமாவது என் உடன் இருக்க..//

  ரொம்ப அழகான வரிகள்.. ரசித்து படித்தேன்..

 9. Bhuvanesh சொல்கிறார்:

  //நாங்க தான் கொங்கு நாட்டு சிங்கம்ல//
  அட.. நானும் கொங்கு நாடு தான் !!

 10. அடலேறு சொல்கிறார்:

  மாப்ள Hexaware என்ன பண்றீங்க ?

 11. Bhuvanesh சொல்கிறார்:

  இங்க தான் மச்சி குப்ப கொட்டறேன்!! அண்ணாச்சி “சத்யம்” போல இருக்கே ?

 12. கண்ணம்மா பேட்ட குமாரு சொல்கிறார்:

  டாய் டமாரு ,
  யாருடா இந்த பொம்பல புள்ள, அதுக்கு ஜுன் 22

  பொறந்தனாளுக்கு ஒசரம் கவுஜை எளுதறையா.

  ஏரியாண்ட வா உனக்கு இருக்கு

  • அடலேறு சொல்கிறார்:

   டேய் குமாரு,
   எத்தினி தபா உன் கைல சொல்லிருக்க அத கனவுல பாத்தாலே கவிஜ கவுஜயா வருதுன்னு. நேத்து கூட தா நாஸ்ட்டா தினங்க சொல்லோ அப்பாலிக்கா ஒரு மேட்டர் இருக்குன்னு சொன்னால அது இத் தாண்டா.

 13. Bhuvanesh சொல்கிறார்:

  மச்சி நான் கோவை மாநகர்!! நான் கேட்ட கேள்விக்கும் பதில் வரல 🙂

  • அடலேறு சொல்கிறார்:

   அட ஆமாங்க மாப்ள நா சத்யம் தான். புவனேஷ் உங்களோட வலைபக்க முகவரி தெரியாததால தான் தங்களின் வலைப்பக்கம் வர முடியவில்லை. தயவு செய்து தங்களின் வலைபக்க முகவரியை கேட்பானில் தரவும்.

 14. அடலேறு சொல்கிறார்:

  யின்னமோ போ நி பிகிலு விட்டுகினே இருக்க போன்ல குமாரு . சண்டே ஏரியான்ட வா. மீட் பண்லாம்

 15. Bhuvanesh சொல்கிறார்:

  டன் மச்சி 🙂

 16. shaji சொல்கிறார்:

  nanbanin kavithaikalai padikkumpodu mulkivitukiren ennavalin ninaivukaludan nantri namba en kathalai mindum thantha tharku

  • அடலேறு சொல்கிறார்:

   நன்றி ஷாஜி ..

   //nanbanin kavithaikalai padikkumpodu mulkivitukiren ennavalin ninaivukaludan //

   நானும் முழ்கிதான் போனேன் உங்களின் பின்னுட்டம் படிக்கும் போது..

   //nantri namba en kathalai mindum thantha tharku//

   இதை விட ஒரு மிக சிறந்த ஊக்கம் ஒரு படைப்பாளிக்கு இருக்காது. உங்களுடைய காதலை நான் மீட்டு தந்தேனா

   இருக்காது, நினைவுகளை வேண்டுமானால் மீட்டு தந்திருப்பேன்.அதனால் தான் அடலேறு பக்கம் ஒரு நினைவு

   குறிப்பேடு . நன்றி நண்பா தங்களின் பின்னுட்டத்திற்கும் வருகைக்கும்.

 17. viji சொல்கிறார்:

  hi…ella linesum romba nalla irukku…..romba imaginationoda eluthina mathiri irukku …. .romba nalla nalla iruku. i like it very much.

 18. aruna சொல்கிறார்:

  எதைன்னு சொல்றது…அத்தனை வார்த்தைகளும் அருமை!!!! பூபூபூபூங்கொத்து!

 19. sathya சொல்கிறார்:

  unga poem romba nalla eruku.atha vita anna,friends..etc neraya kavithai manasuku rombavae sonthasama eruku.All the best………………..

 20. அடலேறு சொல்கிறார்:

  @ நன்றிங்க சத்யா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s