ஓகஸ்ட், 2009 க்கான தொகுப்பு

mygirltears

எனக்கும் மனைவிக்குமான அந்தரங்க பொழுதுகளில் முன்னறிவிப்பின்றி பெய்கின்ற மழையை போல சட்டென்று நுழைந்துவிடுகின்றது உன் நினைவுகள்.

எப்போதும் போல உன நினைவுகள் என்னவளுடனான இறுக்கத்தை குறைக்க எதேதோ சொல்லி அணைப்பின் இறுக்கம் தவிர்த்து வெளியேறி பால்கனி வருவேன் சிகரெட் துண்டோடு

என்னவென்று தெரியாமல் துடித்தே போவாள் என் சகர்தமினி
காலையில் தொடங்கி எனக்காக காத்திருப்பதாகவும்
சூரியனின் வெயில் பட்டு கொடியில் காயப்போட்ட துணியின்
நிழல் வாசலில் விழும் மதியத்தின் அந்தகார நேரங்களில்
தனிமை தன்னை மிகவும் இம்சிப்பதாகவும் கலங்கிய கண்களோடு
என் மேலிரண்டு சட்டை பொத்தான் கழட்டி தோழ் சாய்வாள் நின்றபடி

ஏன், இந்த உடைந்து போன இரவுகளில் உன்னையே நினைக்க தூண்டுகிறது இந்த நாளமில்லா சுரப்பிகள்

பேசாமல் உன்னிடம் மாலை நேர டியூஷன் படிக்கும் சிறுவர்களுக்கு
பாடம் சொல்லி கொடுப்பது போல எனக்கும் சொல்லி கொடுத்திருக்கலாம “முழுவதுமாய் உன்னை எப்படி மறப்பது” என்று

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements

இந்த கவிதை உயிரோசையில் வெளியாகிய என்னுடைய முதல் படைப்பு உயிரோசையில் வாசிக்க இங்கே செல்லவும்

mykitten

அரிசிக்கடை செட்டியார் வந்துவிட்டு போன மாலை நேரம்

எங்கள் அத்திலிச்சி பூனை பழுப்பு நிறத்தில் ஒன்று, வெளிர் மஞ்சள்

நிறத்தில் இரண்டு , கருப்பு நிறத்தில் ஒன்று என நான்கு குட்டிகள்

ஈன்றது வெளிர் மஞ்சள் குட்டிகளை அப்பா எப்போதும்

செம்பட்டயன் என்றே அழைப்பார்

பூனை ஐந்து குட்டிகள் போட்டது என்றும் ஒன்றை அதுவே தின்று

விட்டதாகவும் அண்ணன் சொன்னான். கோட்டாம்பட்டியில் குடி

இருக்கும் போது அம்மா சமைத்த நண்டு தொண்டையில் சிக்கி ஒரு

பூனை குட்டி இறந்து போனதாக அப்பா எப்போதும் அம்மாவை

திட்டுவார்.

அம்மா அமைதியே உருவானவள் அப்படியெல்லாம்

செய்யமாட்டாள் என்பது என் திண்ணம் .

அடுத்த நாள் லட்டு வாங்கி திரும்புகையில் இறந்த பூனைக்கு

படையல் இட்டு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற என்னிடம்,

அதற்கான தொகையாய் என் பங்கு லட்டையும்

பெற்றுக்கொண்டான் அண்ணன்.

பின்பு வந்த பிறந்தநாள் கொண்டாத்தில் மறந்தே போனோம்

செம்பட்டயன் இறுதிசடங்கை ,யாருக்கும் நினைவிருக்காது

அது இறந்தது ஆகஸ்ட் 11 , அன்று நல்ல மழை

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

ECR
காலை தொடங்கி E.C.R கடற்கரை சுற்றி

மடி மீதமர்ந்து ஐஸ் குச்சி பரிமாறி

அருகில் இருந்து I Love You SMS அனுப்பி

நேற்றே பதிவு செய்த திரைப்படம் பார்த்து

ஒரு கையில் சிகரெட்டுடன் உன் கை பற்றி

யாருமற்ற மாலை நேர கடற்கரை நடை பழகி

வினையூக்கி சொன்னது போல டிப்ளோமெடிக்காய்

புவியீர்ப்பை மீறிய முத்தம் கொடுத்து

இறுக கட்டி பிடித்த நீண்ட தூர இரு சக்கர

வாகன பயணம் முடித்து விடுதி வாசலில் இறக்கி

விட்டபின் திரும்பி பார்ப்பதில்லை என்ற தீர்மானம் மீறி

சற்றே உள்ளே சென்ற நீ திரும்பி வந்து சட்டை காலரை

பிடித்து I LOVE YOU சொல்லுடா என கேட்டு, பெற்ற பின்

தான் அன்றைக்கான நாள் நிறைவடைகின்றன.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

my mail box

அவள் புகைப்படம் பார்த்தே ஆக
வேண்டும் என்ற கன நேரத்தில்
பழைய காதலியின் Mail ID ,கடவுச்சொல்
கண்டுபிடித்து , அவள் கணவனுடன்
எடுத்துக்கொண்ட புகைபடங்களை
திருட்டு தனமாய் எனக்கு Forward செய்தபின்
அணைந்து போனது மின்சாரம், அவசரமாய்
கணினி உலகில் வெளிப்பட்டு மது அருந்த
காரணம் கிடைத்ததாய் பிதற்றி கொண்டு
காதலின் நினைவில் முழ்கி வீடு சேர்ந்து
தட்டு கழுவி உண்டு முடித்த பின்
நினைவுக்கு வந்தது Send Item(s) Delete செய்ய மறந்தது.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!