கடைசி பக்க கிறுக்கல்கள்-3

Posted: ஓகஸ்ட் 11, 2009 by அடலேறு in Adaleru, கவிதை, நினைவு, மொக்கை
குறிச்சொற்கள்:, , , , , , , , ,

இந்த கவிதை உயிரோசையில் வெளியாகிய என்னுடைய முதல் படைப்பு உயிரோசையில் வாசிக்க இங்கே செல்லவும்

mykitten

அரிசிக்கடை செட்டியார் வந்துவிட்டு போன மாலை நேரம்

எங்கள் அத்திலிச்சி பூனை பழுப்பு நிறத்தில் ஒன்று, வெளிர் மஞ்சள்

நிறத்தில் இரண்டு , கருப்பு நிறத்தில் ஒன்று என நான்கு குட்டிகள்

ஈன்றது வெளிர் மஞ்சள் குட்டிகளை அப்பா எப்போதும்

செம்பட்டயன் என்றே அழைப்பார்

பூனை ஐந்து குட்டிகள் போட்டது என்றும் ஒன்றை அதுவே தின்று

விட்டதாகவும் அண்ணன் சொன்னான். கோட்டாம்பட்டியில் குடி

இருக்கும் போது அம்மா சமைத்த நண்டு தொண்டையில் சிக்கி ஒரு

பூனை குட்டி இறந்து போனதாக அப்பா எப்போதும் அம்மாவை

திட்டுவார்.

அம்மா அமைதியே உருவானவள் அப்படியெல்லாம்

செய்யமாட்டாள் என்பது என் திண்ணம் .

அடுத்த நாள் லட்டு வாங்கி திரும்புகையில் இறந்த பூனைக்கு

படையல் இட்டு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற என்னிடம்,

அதற்கான தொகையாய் என் பங்கு லட்டையும்

பெற்றுக்கொண்டான் அண்ணன்.

பின்பு வந்த பிறந்தநாள் கொண்டாத்தில் மறந்தே போனோம்

செம்பட்டயன் இறுதிசடங்கை ,யாருக்கும் நினைவிருக்காது

அது இறந்தது ஆகஸ்ட் 11 , அன்று நல்ல மழை

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. Suresh சொல்கிறார்:

  மிகவும் அருமையான பதிவு தம்பு. உன் பதிவுகளை மென்மேலும் தொடர்க,

  வாழ்த்துக்கள்

 2. கண்ணமா பேட்ட குமாரு சொல்கிறார்:

  கலகீட்ட டா டமாரு

 3. அஞ்சனா சதுர்வேதி சொல்கிறார்:

  வணக்கம் அடலேறு ,
  கொஞ்சம் அதிக வேலை பளு இருந்ததால உங்க வலை பக்கம் வர முடியல அதுக்குள்ளே இவ்வளவு பதிவுகளா. அருமை உங்களுடைய கவிதை நடையில் மாற்றம் தெரியுதே ஆரோக்கியமான மாற்றம் தான். தமிளிஎர்ஸ் வலை பக்கத்துல பதிவுகளை சேர்க்கவில்லையா

 4. ரஹ்மத் சொல்கிறார்:

  சூப்பர் டா மட்சி, பக்கத்துல உக்காந்துட்டே எப்படி இப்படிலாம்

  யோசிக்கற. Nice post da

 5. Neeja சொல்கிறார்:

  Hi Adaleru,

  i wont say its good. However i can say its excellent. After a

  long gap you came out of love subject. Cool. Elongated this

  kind of verse in ur blog. persist in rocking

 6. அடலேறு சொல்கிறார்:

  @கண்ணமா பேட்ட குமாரு

  தேங்க்ஸ் டா குமாரு

 7. அடலேறு சொல்கிறார்:

  @அஞ்சனா சதுர்வேதி

  நேரமற்ற காரணங்களால் தமிஎர்ஸ் தவிர மற்ற வலை பக்கங்களின் பதிவை இனைக்க முடியவில்லை. கவிதை நடையில் மாற்றமா இருக்கலாம் எனக்கு தெரியவில்லை. நன்றிங்க அஞ்சனா தங்களின் தொடர் வரவிற்கு

 8. அடலேறு சொல்கிறார்:

  @ தேங்க்ஸ் டா ரஹ்மத்

 9. அடலேறு சொல்கிறார்:

  @Neeja

  Thanks for your feed back. Keep visiting

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s