கடைசி பக்க கிறுக்கல்கள்-4

Posted: ஓகஸ்ட் 22, 2009 by அடலேறு in Adaleru, கவிதை, காதல், நட்சத்திரப் பதிவு, நினைவு, Imagination, life, love
குறிச்சொற்கள்:, , , , , , , , , ,

mygirltears

எனக்கும் மனைவிக்குமான அந்தரங்க பொழுதுகளில் முன்னறிவிப்பின்றி பெய்கின்ற மழையை போல சட்டென்று நுழைந்துவிடுகின்றது உன் நினைவுகள்.

எப்போதும் போல உன நினைவுகள் என்னவளுடனான இறுக்கத்தை குறைக்க எதேதோ சொல்லி அணைப்பின் இறுக்கம் தவிர்த்து வெளியேறி பால்கனி வருவேன் சிகரெட் துண்டோடு

என்னவென்று தெரியாமல் துடித்தே போவாள் என் சகர்தமினி
காலையில் தொடங்கி எனக்காக காத்திருப்பதாகவும்
சூரியனின் வெயில் பட்டு கொடியில் காயப்போட்ட துணியின்
நிழல் வாசலில் விழும் மதியத்தின் அந்தகார நேரங்களில்
தனிமை தன்னை மிகவும் இம்சிப்பதாகவும் கலங்கிய கண்களோடு
என் மேலிரண்டு சட்டை பொத்தான் கழட்டி தோழ் சாய்வாள் நின்றபடி

ஏன், இந்த உடைந்து போன இரவுகளில் உன்னையே நினைக்க தூண்டுகிறது இந்த நாளமில்லா சுரப்பிகள்

பேசாமல் உன்னிடம் மாலை நேர டியூஷன் படிக்கும் சிறுவர்களுக்கு
பாடம் சொல்லி கொடுப்பது போல எனக்கும் சொல்லி கொடுத்திருக்கலாம “முழுவதுமாய் உன்னை எப்படி மறப்பது” என்று

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. திரு சொல்கிறார்:

  அது என்ன சகர்தமினி … புதிய வார்த்தையா மனைவிக்கு அழகாக இருக்கின்றது அடலேறு

 2. அனானி சொல்கிறார்:

  நிட்சயமாக இது எனக்கு ஏற்பட்ட உணர்வு தான், வார்த்தை வடிவம் தர தெரியாத உணர்வுகளை நான் இப்படி தான் கட்டுவேன் என் மனைவியிடம், படித்ததும் ஒரு நிமிடம் யோசிக்க தூன்றும் வரிகள்

 3. காதலி சொல்கிறார்:

  அடலேறு சொல்லவே இல்ல உங்களுக்கு எப்ப கல்யாணம் ஆச்சு

 4. அஞ்சனா சதுர்வேதி சொல்கிறார்:

  வாவ், என்ன அழகான புனைவு

 5. neeja சொல்கிறார்:

  You are rocking buddy, U Got married ah.. is it so?

 6. Kavitha சொல்கிறார்:

  //என் மேலிரண்டு சட்டை பொத்தான் கழட்டி தோழ் சாய்வாள்

  நின்றபடி//

  Nice Adaleru

 7. Ahmad சொல்கிறார்:

  Nice matcha.

 8. M.Sathish Kumar சொல்கிறார்:

  TRUE LOVE: I think all boys have this feelings wit their lover…very nice machan..

 9. அடலேறு சொல்கிறார்:

  @திரு

  ஆமாங்க திரு புது வார்த்த இல்ல பழைய வார்த்த தான் .

  தங்களின் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றிங்க

 10. அடலேறு சொல்கிறார்:

  @ அனானி

  நன்றிங்க அனானி இவ்வளவு யதார்த்தமாக பின்னுட்டம்

  போட்டுட்டு பேரு சொல்லாம போய்டீங்களே , ஆமாம் உங்கள்

  பின்னுட்டம் நிதர்சனமான உண்மை தான் வார்த்தை வடிவம்

  தர முடியாத கோபங்களை மௌனம் தான் முழுமையாக

  புரியவைக்கும் ,பின்னுட்டதிர்க்கு நன்றிங்க

 11. அடலேறு சொல்கிறார்:

  @ காதலி

  இந்த காதலின்னு பேரு இருக்கவங்க எல்லாருமே இப்படி தான்

  பசங்கள மாட்டி விடுவீங்களா, கல்யாணம்லாம் இல்லங்க

  நீங்க வேர???

 12. அடலேறு சொல்கிறார்:

  @ அஞ்சனா சதுர்வேதி

  தங்களின் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றிங்க

 13. அடலேறு சொல்கிறார்:

  @ Neeja

  Thanks Neeja, Thanks for feedback

 14. அடலேறு சொல்கிறார்:

  @ Kavitha

  Thanks Kavitha , Thanks for visit

 15. rrajbe சொல்கிறார்:

  ஓவொன்றும் நெஞ்சை தொடும் வார்த்தைகள் .. மிக மிக அருமை . . யதார்த்தமான வார்த்தைகள் மிக அழகாக கோர்கப்படிருகிரது

 16. Suresh சொல்கிறார்:

  மிக அருமையான பதிவு அடலேறு.

  வாழ்த்துக்கள் !!!

 17. --புவனேஷ்-- சொல்கிறார்:

  மச்சி.. நல்லா இருந்துச்சு..

  ரெண்டு மூணு இடத்துல “நல்ல புனைவு” னு கமெண்ட் பாக்கறேன்.. அது என்ன புனைவு கதை? புனைவு கவிதை? கொஞ்சம் கிளாஸ் எடு.. ப்ளீஸ் !

 18. Thirumalai சொல்கிறார்:

  பதிவு அருமை. நான் அறிந்த வரையில் ‘சகதர்மினி’ என்பது சரி. மனைவியை சுட்டும் சொல்.

  • அடலேறு சொல்கிறார்:

   நன்றிங்க திருமலை தங்களின் முதல் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் , சகர்தமினி சரியென்றே எனக்கு படுகிறது , உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவர் நீர்.

 19. uumm சொல்கிறார்:

  அன்பு அடலேறு..நலமா?

  மிக்க அருமை.மறப்பதற்க்கு எதற்க்கு ட்யூசன் .அனுபவியுங்கள் வலிகளையும் அதனுடனான வாழ்க்கையையும்.மின் அஞ்சலை காணவில்லை என்னாயிற்று?

  • அடலேறு சொல்கிறார்:

   வணக்கம் உமா அக்காவின் கல்யாண வேலை நிமித்தமாக ஊருக்கு சென்று விட்டேன் அதனால் தான் தங்களுடையது , புவனேஷ் போன்றோரின் பின்னுட்டங்களை மட்டறுக்கவோ பதிலிட முடியவோ சற்று தாமதம். அன்றே தங்கள் மின்னஞ்சலுக்கு பதில் அனுபிவிட்டேன் உமா, மீண்டும் ஒரு முறை தங்களின் மின்னஞ்சலை சரி பாருங்கள்

 20. நரேஷ் சொல்கிறார்:

  அற்புதமான வர்ணனை அடலேறு…

  வார்த்தைகள் விளையாடுகின்றன…

  லாஜிக் ஒரு இடத்தில் இடித்தாலும், மனித மனத்திற்கு ஏது லாஜிக்???

  புனைவுதானே???

 21. attisaissuelm சொல்கிறார்:

  !
  I just registered here….
  I really love the environment here. .
  I just received a website from my friend via my tweeter.
  ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s