கடைசி பக்க கிறுக்கல்கள்-4

mygirltears

எனக்கும் மனைவிக்குமான அந்தரங்க பொழுதுகளில் முன்னறிவிப்பின்றி பெய்கின்ற மழையை போல சட்டென்று நுழைந்துவிடுகின்றது உன் நினைவுகள்.

எப்போதும் போல உன நினைவுகள் என்னவளுடனான இறுக்கத்தை குறைக்க எதேதோ சொல்லி அணைப்பின் இறுக்கம் தவிர்த்து வெளியேறி பால்கனி வருவேன் சிகரெட் துண்டோடு

என்னவென்று தெரியாமல் துடித்தே போவாள் என் சகர்தமினி
காலையில் தொடங்கி எனக்காக காத்திருப்பதாகவும்
சூரியனின் வெயில் பட்டு கொடியில் காயப்போட்ட துணியின்
நிழல் வாசலில் விழும் மதியத்தின் அந்தகார நேரங்களில்
தனிமை தன்னை மிகவும் இம்சிப்பதாகவும் கலங்கிய கண்களோடு
என் மேலிரண்டு சட்டை பொத்தான் கழட்டி தோழ் சாய்வாள் நின்றபடி

ஏன், இந்த உடைந்து போன இரவுகளில் உன்னையே நினைக்க தூண்டுகிறது இந்த நாளமில்லா சுரப்பிகள்

பேசாமல் உன்னிடம் மாலை நேர டியூஷன் படிக்கும் சிறுவர்களுக்கு
பாடம் சொல்லி கொடுப்பது போல எனக்கும் சொல்லி கொடுத்திருக்கலாம “முழுவதுமாய் உன்னை எப்படி மறப்பது” என்று

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

29 thoughts on “கடைசி பக்க கிறுக்கல்கள்-4

Add yours

  1. நிட்சயமாக இது எனக்கு ஏற்பட்ட உணர்வு தான், வார்த்தை வடிவம் தர தெரியாத உணர்வுகளை நான் இப்படி தான் கட்டுவேன் என் மனைவியிடம், படித்ததும் ஒரு நிமிடம் யோசிக்க தூன்றும் வரிகள்

    Like

  2. @ அனானி

    நன்றிங்க அனானி இவ்வளவு யதார்த்தமாக பின்னுட்டம்

    போட்டுட்டு பேரு சொல்லாம போய்டீங்களே , ஆமாம் உங்கள்

    பின்னுட்டம் நிதர்சனமான உண்மை தான் வார்த்தை வடிவம்

    தர முடியாத கோபங்களை மௌனம் தான் முழுமையாக

    புரியவைக்கும் ,பின்னுட்டதிர்க்கு நன்றிங்க

    Like

  3. மச்சி.. நல்லா இருந்துச்சு..

    ரெண்டு மூணு இடத்துல “நல்ல புனைவு” னு கமெண்ட் பாக்கறேன்.. அது என்ன புனைவு கதை? புனைவு கவிதை? கொஞ்சம் கிளாஸ் எடு.. ப்ளீஸ் !

    Like

    1. //அது என்ன புனைவு கதை? புனைவு கவிதை? //
      புனைவு கவிதை எனபது இருக்குது ஆனா இல்ல மாதிரி, அதாவது இல்லாத ஒரு விடயத்தை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு கவிதை வடிப்பது அவ்வளவே. உன்னோட ஆடி.. போங்கடா ஓடி கூட ஒரு நல்ல புனைவு தான் மட்சி

      Like

    1. நன்றிங்க திருமலை தங்களின் முதல் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் , சகர்தமினி சரியென்றே எனக்கு படுகிறது , உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவர் நீர்.

      Like

  4. அன்பு அடலேறு..நலமா?

    மிக்க அருமை.மறப்பதற்க்கு எதற்க்கு ட்யூசன் .அனுபவியுங்கள் வலிகளையும் அதனுடனான வாழ்க்கையையும்.மின் அஞ்சலை காணவில்லை என்னாயிற்று?

    Like

    1. வணக்கம் உமா அக்காவின் கல்யாண வேலை நிமித்தமாக ஊருக்கு சென்று விட்டேன் அதனால் தான் தங்களுடையது , புவனேஷ் போன்றோரின் பின்னுட்டங்களை மட்டறுக்கவோ பதிலிட முடியவோ சற்று தாமதம். அன்றே தங்கள் மின்னஞ்சலுக்கு பதில் அனுபிவிட்டேன் உமா, மீண்டும் ஒரு முறை தங்களின் மின்னஞ்சலை சரி பாருங்கள்

      Like

Ahmad -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Create a free website or blog at WordPress.com.

Up ↑