செப்ரெம்பர், 2009 க்கான தொகுப்பு

அப்பாவின் விரல்.

சட்டென திறக்கும் போது
சிதறி ஓடும் பல்லியாய்
கலைந்து போனது நினைவுகள்
‘புள்ளைக்கு பசி எதாவது குடுங்க’
என அவள் யாசிக்கும் போது.

பூசாரி நீர் தெளிக்கையில் அனிச்சையாய்
தலை சிலுப்பிக்கொள்ளும்
கோவில் ஆடாய் சட்டை பைக்குள்
முகம் புதைக்கும் விரல்கள் “சில்லறைக்கென” .

கிடைக்காத நாணயத்தின் தோல்வி மறைக்க
ஐந்து ரூபாயோ , பத்து ரூபாயோ
எப்போதாவது கொடுத்துப்போவேன் நானும்
சில நேரங்களில் பயணம் முடித்த ரயில் பெட்டியும்

நீண்ட கூர்தலறதுக்கு பின் பெருந்தொகை பெற்றவளாய்
“உங்க புள்ளைக நல்லா இருக்கணும்”என வாழ்த்திப்போனாள் இல்லாத கடவுளுக்கு படையலாய்

மண முடித்து எட்டு வருடம் தேதி கிழிக்கப்பட்ட காலண்டரில்
அப்பாவாகாத எனக்காக ” ஓ வென பெருங்குரலெடுத்து”
கிளம்பியது மலை ரயில்.

பின் சேர்ப்பு : ’கூர்தலறம்’ என்பது செயல் அல்லது இயக்கதிற்கு ஏற்ற எதிர்வினை
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements

தனி மனிதன்

முதல் நாள் கல்லூரியில் அவளின் திமிரான அழகை கண்டு பிரமித்தது உண்டா? அவளிடம் பேச வேண்டும் என்றே வார கணக்காய் கடிகார நிமிடங்களை எண்ணியது உண்டா ? அவளே முதல் முறை பேசிய போது தூங்காமல் அந்த தருணத்தை நாட் குறிப்பில் பதிவு செய்தது உண்டா ? அவளிடம் நட்பாகி போனபின்பு நண்பர்களின் பொறாமை சந்தித்தது உண்டா ? ”இன்னைக்கு நீ போட்டிருக்க சட்டை நல்லா இருக்கு” என்றதும் அந்த சட்டயை துவைக்காமல் வாரம் முழுக்க போட்டதுண்டா ? இரவு முழுக்க உனக்காக “அசைன்மென்ட்” எழுதி தர அவள் எழுத்து அழகுக்காகவே அதை தராமல் வகுப்பில் திட்டு வாங்கியது உண்டா ?  ”இன்னைக்கு நான் தான் செஞ்ச” என்றதும் யாருக்கும் தராமல் அவளின் டிபன் பாக்ஸ் முழுக்க சாப்பிட்டு ஏப்பம் விட்டதுண்டா? காதலை மானசீகமாய் நட்பாக்க முயன்றதுண்டா? நட்பான காதலை மறைக்க முயன்று அவளிடம் கையும் களவுமாக சிக்கியது உண்டா ?

ஒரு மாதம் கழித்து ” நானும் உன்ன லவ் பண்றனு நினைக்கற ” என அவள் சொல்ல ஜனரஞ்சகமாக வெட்கம் பழகியதுண்டா? கல்லுரியின் இறுதி நாளில் தோள் சாய்த்து அவள் அழுதது உண்டா? கல்லூரி முடித்து இருவரும் வேறு வேறு திசையில் பயணித்தது உண்டா?
சொந்த ஊரில் வேலை செய்யும் சௌரியங்களை விட்டு விட்டு உனக்காக மாற்றலாகி வந்ததுண்டா ?

இரவு முழுதும் அவள் கை பிடித்து கடற்கரையில் நடை பழகியது உண்டா ? உன் பிறந்த நாளுக்காக அநாதை குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து அந்த புகை படத்தை உன்னிடம் காட்டி உன்னிடம் முத்த பரிசு பெற்றதுண்டா ? “உனக்கு என்ன அவ்ளோ புடிக்குமாடா ?” என திரும்ப திரும்ப கேட்டு சந்தோஷத்தில் அவள் குழந்தையாய் மாறி போவதை பார்த்ததுண்டா . திடிரென உனக்கு வெளியூர் மாற்றலாக., அழுது வீங்கிய கண்களோடு ரயில் பெட்டி மறையும் வரை கையசைத்தபடியே உன்னை வழியனுப்பியதுண்டா ? பயணம் முடியும் முன்பாக 164 முறை அழைப்பு விடுத்தது காதலால் உன்னை திணறிபோக செய்ததுண்டா?திடிரென அவளை பெண் பார்க்க வந்ததும், அதற்கு பின் நடந்தவைகளை அவள் விவரிக்க மூர்ச்சையடைந்து போனதுண்டா?

பெற்றோர் சம்மதிக்காத நிலையில் கூட வீட்டைவிட்டு ஓடிவந்தாலும் இப்பொழுதிருப்பதைக் காட்டிலும் என்னை சந்தோசமா வெட்சுப்பனு நம்பிக்கை எனக்கு இருக்கு டா என்று உஙகளிடம் உளறியதுண்டா? அப்படி சொன்னபோதும் கூட அவளை வீட்டைவிட்டு ஓடிவர சொல்லிவிட மாட்டீர்கள் எனும் அவள் நம்பிக்கையை காப்பாற்றியதுண்டா ? காதல் விவகாரம் அவள் வீட்டில் தெரிந்து அவளை அடித்து துன்புறுதுகையில் அலைபேசியில் சப்தம் கேட்டு துடி துடித்ததுண்டா?
”இனி மேல் அவள மறந்தர சொன்னா” என்று அவள் அறை தோழி சொல்ல சொல்ல உலகமே இருண்டு போனதுண்டா ?

நாளை அவளுக்கு திருமணம் என்ற நிலையில் அந்த நாளே நினைவில்லாமல் போகும் அளவு குடித்து குடித்து தனிமை வெரித்ததுண்டா ? போதையில் கூட அவளுக்கு பிடித்த நாய் குட்டி அவள் கணவன் வீட்டில் வளர்க்க உரிமை உண்டா என்று பிதற்றியபடி மயக்கமடைந்தது உண்டா ?பல முறை கேட்டு விட்ட நண்பர்களுக்காக அவளை மறந்து விட்டதாக பொய் சொல்லி ஒரு மணி நேரத்தில் ஒரு முறையாவது அவள் நினைவுகளை கடந்து வருவதுண்டா ?

இல்லை என்றால் கொஞ்சம் காதலித்து பார்.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழகிய வலை பூ விருது வழங்கிய வாணிக்கு நன்றிகள்.

Beautiful-Blogger-Award1

இந்த விருதை வல்லிய சுந்தர குட்டன் சுட்ட பழத்துக்கும் ,

புன்னகை இளவரசி அக்கா உமாவுக்கும்,

புதின தாரகை ஜானுவுக்கும் அளிப்பதில் பெரு உவகை கொள்கிறேன்.

my_girl

நீர்

உன்மேல் பட்ட மழைத்துளி பிறவி பயனை பெற்றதாய் அமைதி கொள்ள மிச்ச துளிகள் பெருவெள்ளமென கடல் சேர்கிறது
ஆவியாகி மீண்டும் தன் பிறவிப்பயனுக்காய்

நிலம்

உன்னை சுமப்பதாலே போதை தலைக்கேறி
சுற்றுவதாய் பிதற்றுகிறது பூமி

காற்று

நீ சிரிக்கையில் உள் சென்ற ஆக்சிஜன் தேவதையின்
முச்சுக்காற்று என வெளியேறி கர்வம் கொள்ள அதிலிருந்து
மகரந்த சேர்க்கைக்காக கடன் பெற்று
செல்கின்றனவாம் வண்ணத்துப்பூச்சிகள்

ஆகாயம்

நீ வெளி வராத போது உன்னை விட சிறந்த ஓவியம் வரைய மேகத்தை கூட்டி பிரயத்தனம் பண்ணுகிறது ஆகாயம், கண்டவுடன் இயலாமையால் நாய் குட்டியகவோ பூனை குட்டியகவோ பரிசளித்து போகிறது ஆங்காங்கே வானம் முழுக்க.

நெருப்பு

உனக்கென்ன அமைதியாய் கல்லூரிக்குள் சென்று விடுகிறாய்
உன்னை காணாத கோபத்தில் சுட்டெரிக்கிறது சூரியன் மாலை வரை

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Me_and_Angel

உறக்கம் களைந்த பின்னிரவின் முற்றுப்பெறாத வார்த்தை தரவு தளத்தில், வரிகள் கிடைக்காத விரக்தியின் கடைசியில் தொடங்கப்பட்டது உனக்கான இந்த கவிதை.

அலையென விரியும் மனதின் சுக்கான் பிடித்து இழுக்கும் வித்தை கற்றும்,வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் கொண்டுவரும் பிரசாதமாய் கனவுகளுக்கான மஞ்சள் சுடிதார் அணிந்து என் அறை மேசைகளுக்குள் மறைந்திருக்கும் விஞ்ஞானம் கற்றிருக்கிறாய்.

உனக்கென வேண்டாத நகத்தை கூட வெட்டாத எனக்காக இதுவரை “164” முறை உணர்த்திவிட்டாய் நீ என்னை காதல் கொள்வதை. அவசரமாய் கொஞ்சம் அவசியமாய் விரல் பற்றி நடக்கையில் சொல்லி விடமாட்டேனா.., என பலவருடம் கழித்து தாய் நாடு திரும்பும் பயணியென, தனிமையில் காதல் சொல்ல வாய்ப்பு கிடைக்கட்டும் என்று காத்திருக்கிறேன் இந்த முற்றுப்பெறாமல் குழம்பிப்போன கவிதை போல….

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

letters

பேருந்து இறங்கி மெல்லென நீ திரும்பி பார்க்கும் ஒவ்வொரு முறையும் குழம்பி போவேன் நீ என் மெய் எழுத்தா, இல்லை நான் உன் சார்பு எழுத்தா என்று , பிறகு அய்யனார் கோவில் திருவிழா அன்று சொன்னாய் நீ என் உயிர்மெய் எழுத்து என்று
—————-
குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்
நீ + வெட்கம் + வெகுளி = கவிதை
தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம், என்னை கேட்டால் நீயும் ஒரு குற்றியலிகரம் என்றே சொல்வேன் , பிறகு என்ன எல்லோரிடமும் ஒரே மாதிரியாகவும் என்னை கண்டால் மட்டும் ஒரு மாத்திரை குறைத்து “ஒரு” மாதிரியாகவும் வாய்க்குள்ளேயே வார்த்தை முழுங்குகிறாய்.

மாத்திரை – உச்சரிக்கபடும் சொல்லின் அளவு
—————–

சூரியன் மறைய எத்தனிக்கும் மாலை நேரத்தில் பெரிய மூக்காயி தோட்டத்து வாசலில் நின்று உதிர் கடித்தபடி
கேட்டாய் நீங்கள் என்னை பற்றி சொல்வது எல்லாம் எனக்கு
” வஞ்சப்புகழ்ச்சி அணி” மாதிரியே தெரியுது …..
அடி போடி பைத்தியம் உனக்கு என்று தெரிவது நீயும் நானும்
” இரட்டுர மொழிதல் அணி” என்று .
உதிர்-நகம்
—————–
நீ எப்ப பாத்தாலும் தமிழ் தமிழ்னு புலம்பறயே அப்படி என்னதா டா இருக்கு தமிழ்ல?
எல்லாமே இருக்குடி தமிழ்ல.
எல்லாமேனா ?
உனக்கு என்ன வேனும் இப்ப ?
எல்லாமே இருக்குன்னு சொன்னில்ல தமிழ்ல என் மூஞ்சிய பார்த்த என்ன இருக்குன்னு சொல்லு …
உனக்கு நிலா மாதிரி அழகான முகம் டீ
இந்த ஐஸ் வெச்சு எஸ்கேப் ஆகர வேலையெல்லாம் வேண்டாம், புரியற மாதிரி சொல்லுடா ..
நிலா முகம் சொன்னல்ல,
இதுல நிலா ஒப்பிட்ட பொருள் – உவமை – உவமானம் .
“முகம் ” பேச எடுத்துக்கொண்ட பொருள் -உவமேயம்- பொருள்.
” நிலா முகம் “- அதாவது நிலா போன்ற முகம் என்பது பொருள். போன்ற – ஒப்பிடுவதை உணர்த்தும் சொல்- உவம உருபு .
“நிலா முகம் ” னு சொல்றப்ப ” உவம உருபு” இல்லாததால
” உவமை தொகை ” னு சொல்லுவாங்க .
” நிலா முகம் ” ல உவம உருபு மறைந்து வந்துள்ளது உன் வெட்கம் போல என்றேன் , உண்மையாகவே வெட்கம் வந்தவளாய் இறுக்க கை பிடித்து கேட்டாய்
” என் மேல உனக்கு இவ்ளோ காதலா டா ” என்றாய்
உன்மீது இல்லை தமிழ் மீது என்றேன் ..
செல்லமாக கோபித்து திருப்பிக்கொண்டாய் நிலா முகத்தை.
——————–
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!