இலக்கண காதல் -1

Posted: செப்ரெம்பர் 12, 2009 by அடலேறு in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நட்சத்திரப் பதிவு, Imagination, love
குறிச்சொற்கள்:, , , , , , ,

letters

பேருந்து இறங்கி மெல்லென நீ திரும்பி பார்க்கும் ஒவ்வொரு முறையும் குழம்பி போவேன் நீ என் மெய் எழுத்தா, இல்லை நான் உன் சார்பு எழுத்தா என்று , பிறகு அய்யனார் கோவில் திருவிழா அன்று சொன்னாய் நீ என் உயிர்மெய் எழுத்து என்று
—————-
குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்
நீ + வெட்கம் + வெகுளி = கவிதை
தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம், என்னை கேட்டால் நீயும் ஒரு குற்றியலிகரம் என்றே சொல்வேன் , பிறகு என்ன எல்லோரிடமும் ஒரே மாதிரியாகவும் என்னை கண்டால் மட்டும் ஒரு மாத்திரை குறைத்து “ஒரு” மாதிரியாகவும் வாய்க்குள்ளேயே வார்த்தை முழுங்குகிறாய்.

மாத்திரை – உச்சரிக்கபடும் சொல்லின் அளவு
—————–

சூரியன் மறைய எத்தனிக்கும் மாலை நேரத்தில் பெரிய மூக்காயி தோட்டத்து வாசலில் நின்று உதிர் கடித்தபடி
கேட்டாய் நீங்கள் என்னை பற்றி சொல்வது எல்லாம் எனக்கு
” வஞ்சப்புகழ்ச்சி அணி” மாதிரியே தெரியுது …..
அடி போடி பைத்தியம் உனக்கு என்று தெரிவது நீயும் நானும்
” இரட்டுர மொழிதல் அணி” என்று .
உதிர்-நகம்
—————–
நீ எப்ப பாத்தாலும் தமிழ் தமிழ்னு புலம்பறயே அப்படி என்னதா டா இருக்கு தமிழ்ல?
எல்லாமே இருக்குடி தமிழ்ல.
எல்லாமேனா ?
உனக்கு என்ன வேனும் இப்ப ?
எல்லாமே இருக்குன்னு சொன்னில்ல தமிழ்ல என் மூஞ்சிய பார்த்த என்ன இருக்குன்னு சொல்லு …
உனக்கு நிலா மாதிரி அழகான முகம் டீ
இந்த ஐஸ் வெச்சு எஸ்கேப் ஆகர வேலையெல்லாம் வேண்டாம், புரியற மாதிரி சொல்லுடா ..
நிலா முகம் சொன்னல்ல,
இதுல நிலா ஒப்பிட்ட பொருள் – உவமை – உவமானம் .
“முகம் ” பேச எடுத்துக்கொண்ட பொருள் -உவமேயம்- பொருள்.
” நிலா முகம் “- அதாவது நிலா போன்ற முகம் என்பது பொருள். போன்ற – ஒப்பிடுவதை உணர்த்தும் சொல்- உவம உருபு .
“நிலா முகம் ” னு சொல்றப்ப ” உவம உருபு” இல்லாததால
” உவமை தொகை ” னு சொல்லுவாங்க .
” நிலா முகம் ” ல உவம உருபு மறைந்து வந்துள்ளது உன் வெட்கம் போல என்றேன் , உண்மையாகவே வெட்கம் வந்தவளாய் இறுக்க கை பிடித்து கேட்டாய்
” என் மேல உனக்கு இவ்ளோ காதலா டா ” என்றாய்
உன்மீது இல்லை தமிழ் மீது என்றேன் ..
செல்லமாக கோபித்து திருப்பிக்கொண்டாய் நிலா முகத்தை.
——————–
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

பின்னூட்டங்கள்
 1. அஞ்சனா சதுர்வேதி சொல்கிறார்:

  வாவ், என்ன அழகான கவிதை அடலேறு , ஒரு இலக்கண

  வகுபிற்க்கு சென்றுவந்ததை போல ஒரு உணர்வு , கண்டிப்பாக

  சொல்கிறேன் நீங்கள் என் தமிழ் ஆசிரியரை நினைவுபடுத்தி

  விட்டீ ர்கள். உண்மையாலுமே தமிழ் மீது இவ்வளவு காதலா ?

 2. அஹ்மத் சொல்கிறார்:

  இப்படி யாரட்சும் எனக்கு படிக்கறப்ப தெளிவா சொல்லி குடுத்திருந்தா நானும் இலக்கண வகுப்புக்கு கட் அடிக்காம போயிருப்ப..!!!

 3. Suresh சொல்கிறார்:

  மிக அழகான இலக்கிய கவிதை.
  மிகவும் அருமை.

  வாழ்த்துக்கள் அடலேறு!!!

 4. ulavu.com சொல்கிறார்:

  அருமையான பதிவு

  தொடருந்து எழுத வாழ்த்துக்கள் ……….

 5. வால்பையன் சொல்கிறார்:

  //நீ + வெட்கம் + வெகுளி = கவிதை//

  இந்த ஒரு வரியே ஆயிரம் கவிதை சொல்லுதே!

 6. நரேஷ் சொல்கிறார்:

  தமிழின் மீதான காதல் வரிகளில் அழகாகத் தெரிகிறது….

  எனக்கு என்னென்ன மறந்து போயிருக்குன்னு இப்ப ஞாபகம் வருது….

  • அடலேறு சொல்கிறார்:

   ஆமாம் நண்பா தமிழ் மீது காதல் மட்டும் அல்ல , ஒரு அதையும் தாண்டின ஒரு ஈர்ப்பு ஒரு வெறி என்றே கூற விழைகிறேன். மறந்து போனதை கண்டுபிடித்து விட்டீர்களா நரேஷ்

 7. padmahari சொல்கிறார்:

  வணக்கம் அடலேறு.

  //குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்
  நீ + வெட்கம் + வெகுளி = கவிதை//

  இலக்கணத்துல பின்னிட்டீங்க போங்க! நல்ல கவிதை அடலேறு வாழ்த்துக்கள்!

 8. சுப.நற்குணன் சொல்கிறார்:

  மிக நன்றாக – சுவையாக எழுதியிருக்கிறீர்கள். இலக்கணத்தை இப்படியும் எழுதி விளக்க முடியுமா? என புருவங்களை உயர்த்த வைக்கிறது உங்கள் எழுத்து. பாராட்டுகள். அடுத்த தொடரைப் படிக்க ஆவலாக உள்ளேன்.

  • அடலேறு சொல்கிறார்:

   நன்றி நண்பரே. எவ்வளவு அழகாக தமிழுக்கு வலைபூ வைத்துள்ளீர்கள்.

   //புருவங்களை உயர்த்த வைக்கிறது உங்கள் எழுத்து// நன்றி

   உங்கள் திருத்தமிழ் வலைப்பக்கம் பார்த்துதான் இன்னும் நிறைய தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் .
   நன்றி நண்பரே தங்களின் முதல் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும்

 9. Janu சொல்கிறார்:

  வந்ததுக்குக் கிடு கிடுன்னு கடைசிப் பக்கக் கிறுக்கல்கள் + இந்தக் கவிதையை படிச்சிட்டேன்.. எல்லாமே கலக்கல்..

  அதிலும் இந்தக் கவிதை எனக்கு ரொம்பப் பிடிச்சது..இலக்கண வகுப்பெல்லாம் இந்த மாதிரி ஈசியா இருந்திருந்தா எம்புட்டு நல்லா இருந்திருக்கும்னு தோண வச்ச பதிவு இது..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s