நதி பார்த்தல்

Posted: ஒக்ரோபர் 5, 2009 by அடலேறு in கவிதை, தமிழ், நினைவு, புனைவு, Girl
குறிச்சொற்கள்:, , , , ,

river

படாரென்று மூடப்பட்ட சாளரத்தின்
வழியே பெருக்கெடுத்து ஓடுகிறது
நதியொன்று…
எங்கெல்லாமோ முடுக்கிவிடப்பட்ட நதியின் திசை
தினமும் காலையில் கண்சிமிட்டுகிறது
எதிர் வீட்டு நாய் குட்டியாய்
பின்பு ஒரு நாள்
காலஎந்திரம் வழியே கல்லூரியின்
இரண்டாம் வருட செய்முறை தேர்வு
முடிந்து திரும்புகையில்
கண்டுபிடித்தேன் நதியை
‘நியூட்டனின் மூன்றாம் விதியில்’
அடுத்த வருடம் எழுதும்
கவிதையின் பன்னிரெண்டாவது
வரியின் எச்சம் இங்கு மீந்து கிடப்பதால்
நதியின் அசூயை விருப்பமானது தான் என்பேன்
இருந்தாலும் ஒரே ஆதங்கம்,
கடல் சேரும் வரை நிறைய பேரால்
கண்டுபிடிக்க முடிவதில்லை
நதியின் திசையும் அதன் நோக்கமும்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. --புவனேஷ்-- சொல்கிறார்:

  மச்சி எனக்கு புரிஞ்சத சொல்லறேன்..

  //படாரென்று மூடப்பட்ட சாளரத்தின்
  வழியே பெறுக்கெடுத்து ஒடுகிறது
  நதியொன்று…//

  ஜன்னல் வழியே சைட் அடிச்ச பொண்ணோட நினைப்பு ஜன்னல் சாத்துனதுக்கு அப்புறமும் உன்னை ஆக்ரமிக்குது !!

  //எங்கெல்லாமோ முடிக்கிவிடப்பட்ட நதியின் திசை
  தினமும் காலையில் கண்சிமிட்டுகிறது
  எதிர் வீட்டு நாய் குட்டியாய் //

  நீ எதை பற்றி உன் நினைப்பை மாற்றினாலும் அந்த பெண்ணை பற்றிய நினைப்பு மீண்டும் மீண்டும் வருகிறது!! நமக்கு வேண்டாம் என்றாலும் எதிர் வீட்டு நாய் குட்டியை பார்த்தே ஆகணும்.. அது மாதிரி நீ வேண்டாம் என்றாலும் இந்த நினைப்பு வருவதால் இந்த உவமை!!

  //காலஎந்திரம் வழியே கல்லூரியின்
  இரண்டாம் வருட செய்முறை தேர்வு
  முடிந்து திரும்புகையில்
  கண்டுபிடித்தேன் நதியை
  நியூட்டனின் மூன்றாம் விதியில்//
  கல்லுரி ரெண்டாம் வருடம் செய்முறை தேர்வு நாளில் இந்த பெண்ணின் நினைப்பு அதிக்கடி வருவது காதல் என்று கண்டுபிடித்தாய்! வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் காதல் வந்ததால் இந்த உவமை (எதிர் வினை??)

  //அடுத்த வருடம் எழுதும்
  கவிதையின் பனிரெண்டாவது
  வரியின் எச்சம் இங்கு மீந்து கிடப்பதால்
  நதியின் அசூயை விருப்பமானது தான் என்பேன்//

  அடுத்த வருடமும்.. உன் மனபோராட்டம் இந்த காதல் வேண்டாம் வேண்டாம் என்கிறது.. காதல் எதிர் வினையாய் (கவிதையின் 12 வது வரி!) வளர்கிறது!! இந்த அவஸ்தையும் உனக்கு பிடித்திருக்கிறது..

  //இருந்தாலும் ஒரே ஆதங்கம்,
  கடல் சேரும் வரை நிறைய பேரால்
  கண்டுபிடிக்க முடிவதில்லை
  நதியின் திசையும் அதன் நோக்கமும்//

  கல்யாணம் ஆகும் வரி பலரால் கண்டுபிடிக்க முடிவதில்லை ஏன் அந்த பொண்ணை பார்த்தோம்.. மயங்கினோம் என்று!! (கல்யாணம் ஆனா மட்டும் எப்படி கண்டு பிடிக்க முடியும் ?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!)

  • அடலேறு சொல்கிறார்:

   //படாரென்று மூடப்பட்ட சாளரத்தின்
   வழியே பெறுக்கெடுத்து ஒடுகிறது
   நதியொன்று…//

   ஒரு பெண் சன்னல் வழியாக ஒருவனை பார்வை இருகிறாள், அவன் திடீரென சன்னல் பக்கம் திருப்பும் போது இவன் பார்வை தாளமல் “ தான் கையும் களவுமாக பிடிபட்டதை” எண்ணி சன்னலை மூடிக்கொள்கிறாள். அவள் மூடிய பிறகும் கூட அவளின் அழகு நதியாக பெறுகி வருவதாக சுட்டி உள்ளேன்

   //எங்கெல்லாமோ முடிக்கிவிடப்பட்ட நதியின் திசை
   தினமும் காலையில் கண்சிமிட்டுகிறது
   எதிர் வீட்டு நாய் குட்டியாய் //

   தோழிகள் இடையே சன்னலில் பார்த்தவனை பற்றி சொல்லும் போது, அவள் தோழிகள் அவனை பற்றி கேலியும் கிண்டலுமாய்(பொண்ணுக எப்ப்டி சொல்லு வாங்கனு உங்களுக்கே தெரியும்ல)சொல்லியதை தினமும்
   அவனை காலையில் பார்க்கும் போது நினைத்து நினைத்து சிரித்து செல்கிறாள்.(” காலைல தினமும் எங்க வீட்டுக்கு எதிர்ல ஒரு நாய் குட்டி பாப்ப அதன் பரதிபலிப்பே”)

   //காலஎந்திரம் வழியே கல்லூரியின்
   இரண்டாம் வருட செய்முறை தேர்வு
   முடிந்து திரும்புகையில்
   கண்டுபிடித்தேன் நதியை
   நியூட்டனின் மூன்றாம் விதியில்//
   காலஎந்திரத்தின் வழியாக கல்லூரியின் இரண்டாம் வருடம் செய்முறை தேர்வு முடித்து திரும்பும் வழியில் தான் தோனியது அவனுக்கு ”நம்மை அறியாமல் நாம் தினமும் பார்ப்பதால் தான் அந்த பெண்ணும் பார்க்கிறாள் என்று” அதானால் தான் நியூட்டனின் மூன்றாம் விதி.

   //அடுத்த வருடம் எழுதும்
   கவிதையின் பனிரெண்டாவது
   வரியின் எச்சம் இங்கு மீந்து கிடப்பதால்
   நதியின் அசூயை விருப்பமானது தான் என்பேன்//

   அடுத்த வருடம் எழுதும் கவிதையின் பனிரெண்டாவது வரி இன்னும் மிச்சம் இருக்கையில் அந்த வரிகளிள் இவளை
   பற்றி எழுதலாம் என்று எண்ணுகிறான்,அதனால் இவள் செய்யும் காரியங்கள் அவனுக்கு அசூயை ஏற்படுத்தினாலும்
   வரப்போகும் கவிதைக்காக விருப்பத்துடன் அவள் செய்கைகளை ரசிக்கிறான்

   //இருந்தாலும் ஒரே ஆதங்கம்,
   கடல் சேரும் வரை நிறைய பேரால்
   கண்டுபிடிக்க முடிவதில்லை
   நதியின் திசையும் அதன் நோக்கமும்//

   வேறு ஒருவருடன் மணமாகி சென்ற பின் கூட பலரால் கண்டுபிடிக்க முடிவதில்லை அவள் பார்வைக்கான அர்த்ததையும்..அவள் சிரித்த்தின் நோக்கதையும்..

   அவ்வளவே

 2. வால்பையன் சொல்கிறார்:

  நதி பாவம் விட்ருங்க!

 3. --புவனேஷ்-- சொல்கிறார்:

  //நதி பாவம் விட்ருங்க!//

  ஹ ஹ ஹ.. நம்மளும் பாவம்.. எடுத்து சொல்லுங்க தல!!

 4. --புவனேஷ்-- சொல்கிறார்:

  யோவ் அடலேறு.. உண்மைய சொன்னா நான் எனக்கு ப்ளாக் எழுத யோசிச்ச்சத விட இந்த கவிதைக்கு அர்த்தம் புருஞ்ச மாதிரி எழுத அதிகமா யோசிச்சிருக்கேன்.. மத்தவங்க கவிதையா இருந்தா புருஞ்சத எடுத்துட்டு போயிருப்பேன்.. நீ ஒழுங்கா எனக்கு புருஞ்சது கரெக்ட்டா இல்லையானு சொல்லு!!

  • அடலேறு சொல்கிறார்:

   தம்பி சுட்டபழம் , அண்ணனும் கவிதைனு பேர்ல இவ்வளவு நாள் கடை நடத்தின, இனி அது முடியாது போல இறுக்கே.
   இப்படி கேள்வி கேட்டே அடலேறுவ அமுக்கீருவிங்க போல. இனி கொஞசம் சூதானமா தான் இருக்கனும்.

 5. Suresh சொல்கிறார்:

  தம்பு,

  உன்னுடைய கற்பனை மிக அருமை.

  ஆனால் என்னால் இந்த கவிதையை கண்டுபிடிக்க முடியவில்லை, உன்னுடைய மறுமொழியில் இருந்தே அர்த்தம் கண்டு கொண்டேன்.

  வாழ்த்துகள் அடலேறு!!!

  கலகரிங்க இப்போ எல்லாம் ….

  என்றும் அன்புடன்
  Suresh

 6. Jana சொல்கிறார்:

  நிதி மூலங்களை பார்க்கக்கூடாது நண்பரே…அதோடு நதியோட்டத்திற்கு எதிராக நீந்தவும்கூடாது. இவைதான் நதி பற்றி நான் அறிந்தவிடயங்கள் நண்பா…

  • அடலேறு சொல்கிறார்:

   அது எப்படி ஜனா பின்னுட்டத்தில் மின்னுட்டம் வைக்கறீங்க.

   //நிதி மூலங்களை பார்க்கக்கூடாது நண்பரே…அதோடு நதியோட்டத்திற்கு எதிராக நீந்தவும்கூடாது.//
   அருமையான வரிகள் நண்பா, இது புரிபவர்களுக்கு புரியும்.

 7. அருமை , ஆனால் புரிந்துகொள்ள உங்கள் விளக்கவுரை தேவைப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s