ஏழாம் வகுப்பு ’ஆ’ பிரிவு

Posted: ஒக்ரோபர் 21, 2009 by அடலேறு in Adaleru, அடலேறு, கவிதை, தமிழ், நட்பு, பள்ளி
குறிச்சொற்கள்:, , , , ,

school chalkboard tamil

தொலைந்து போன நண்பனொருவனை

’லிபர்டி’ நிறுத்ததில் பார்க்க நேர்ந்தது

ஏழாம் வகுப்பு ’ஆ’ பிரிவில்

கடைசியாய் சேர்ந்தவன் அவன்

என்று சொல்லிமுடிக்கையில்

கட்டிக்கொண்டான் லலிதமாக

சென்னை வந்து

இருபத்தியோரு வருடம்

ஆனதாகவும் பெயர் தெரியாத

நிறுவனமொன்றில்

காரியதரிசியாக இருப்பதாகவும்

சொல்ல தொடங்கையில்

தொடங்கி போனது

பெரு மழை ஒன்று

அவசரமாக விடை பெற்று

சென்றவனின் பின்

பக்கம் பார்த்தேன்,

அதே படிந்து வாரிய முடி,

சற்றே பெருத்த உடல் வாகு,

மாறாத அந்த ஒருக்களித்த சாய்ந்த நடை

நல்ல வேலை ஏழாம் வகுப்பின்

கிழிந்த டவுசர் போடவில்லை.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. நிலாரசிகன் சொல்கிறார்:

  கவிதை அருமை.
  படம் மிக மிக அருமை.

  அட! லேறு! 🙂

 2. ஏதோ டாட் காம் சொல்கிறார்:

  லலிதமாகவா?
  என்னமோ போ. உன் பக்கம் வந்தா கொஞ்சம் புதுசு புதுசா தெரியுது. வழக்கம்போல அர்த்தம் சொல்லு.
  🙂

  • அடலேறு சொல்கிறார்:

   லலிதமாகக்கு நிறைய அர்த்தம் இருக்கு நண்பா,
   ஒரு நெகிழும் தன்மை..ஈர்க்கும் தன்மை
   நான் இங்க லலிதமாகவ பயன்படுத்தினது நட்பின் காரணமான ஒரு ஈர்ப்பு
   ஒரு தன்னிலை ஆசுவாசபடுத்துதலுக்காக

 3. Suresh சொல்கிறார்:

  மிக அருமையான கவிதை

  என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை. உன் கவிதைகளை பாராட்ட எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை

  வாழ்த்துக்கள் அடலேறு !!!

 4. தன்னிலவன் சொல்கிறார்:

  யோவ் அடலேறு..,
  உனக்கு வேலையே இல்லையா..?
  சும்மா நல்ல நல்ல கவிதையா எழுதிடே இருக்க..!

  • அடலேறு சொல்கிறார்:

   என்னங்க பண்றது தன்னிலவன். கடைய திறந்தாச்சு கல்லா கட்டிதான ஆகனும்

   தன்னிலவன் பின்னுட்டமிடும் போடது தங்கள் தள உருளை (Blog URL) கேட்பானில் தெரிவிக்கவும்

 5. தன்னிலவன் சொல்கிறார்:

  தகவலுக்கு நன்றி அடலேறு அவர்களே..,
  திருத்தும் செய்து உருளையை இணைத்துவிட்டேன்

 6. Sathish AIT சொல்கிறார்:

  super machi….
  photo and ur lines are very nice….
  i like last line…….

 7. Laamira சொல்கிறார்:

  கவிஞரே!
  உங்கள் நண்பனை நீங்கள் சந்தித்தப்போது வந்தது ஒரு பெருமழை!
  அதைப் படித்தபோது சென்னையில் என்றோ பெய்த பெருமழையின் சாரல் என்னை நனைத்தது.
  நன்றி!

  • அடலேறு சொல்கிறார்:

   லாமிரா, நண்பனை சந்திக்கவில்லை, பெருமழை பெய்யவும் இல்லை இதும் ஒரு கற்பனை தான்.

   //அதைப் படித்தபோது சென்னையில் என்றோ பெய்த பெருமழையின் சாரல் என்னை நனைத்தது//
   ஒருவரை பெருமழையின் சாரலில் நனைய வைக்கும் அளவு கவிதை எழுதிவிட்டானா இந்த அடலேறு.. நன்றி லாமிரா..

 8. lathananth சொல்கிறார்:

  அட! நீங்களும் கவிஞரா? சரித்தான்!

 9. Jana சொல்கிறார்:

  சந்திப்பில் மழை…
  சரி மழை பெய்வதாக நண்பர் சென்றுகொண்டிருக்கின்றார், அனால் நீங்கள் மட்டும் எங்கும்போகாமல்…

  ஓஹா…நீங்கள் போகவிட்டு பின்னால்தான் இரசிப்பீர்களோ???

  நல்லாயிருக்கு நண்பரே…சும்மா கடித்தேன் அவ்வளவுதான்.

 10. padmahari சொல்கிறார்:

  நண்பா அடலேறு…..
  கவிதை கலக்கல்! அடலேறு பக்கம் வந்தா கவிதை படிக்கிறோமோ இல்லையோ….கண்டிப்பா தமிழ் படிக்க முடியும்! (லலிதமாக, காரியதரிசி)
  நன்றி நண்பா.

 11. kapilashiwaa சொல்கிறார்:

  99.9% நல்லா இருக்கு அடலேறு உங்க கவிதை.. ஆனாலும் முடித்தவிதத்தில் ஏதோ ஒன்னு குறையுதுப்பா! தப்பா நினைக்காதீங்க.. தோணினத சொல்லிட்டேன்.

  • அடலேறு சொல்கிறார்:

   கருத்துக்கு நன்றிங்க கபில்லசிவா.

   அந்த 0.1 % நான் சிறுவர்களின் கால் சட்டைக்கு மற்றொரு பெயர் வழங்கியதன் காரணம் என்று நினைக்கிறேன்.
   அந்த சொல் அந்த இடத்தில் “நிரம்ப” பொருள்தரும் என்பதான் தான் சேர்த்துக்கொண்டது தவிர கட்டாயமாக தினிக்கவில்லை. ஏழாம் வகுப்பு நண்பனை பற்றிய நினைவுகளில் அவனுடைய உடை வருவதில் தவறு இருப்பதாக எனக்கு படவில்லை கபில்லசிவா. மாற்று கருத்துகள் இருப்பின் கூறவும். கருத்துக்கு மீண்டும் ஒரு முறை நன்றிங்க கபில்லசிவா

 12. தங்கமலர் சொல்கிறார்:

  நல்ல கவிதை,

  சென்னை வந்து நீங்கள் உங்களில் மாற்றம் வந்ததா?

 13. Bhuvanesh சொல்கிறார்:

  // சென்றவனின் பின்

  பக்கம் பார்த்தேன், //

  யோவ்.. நல்ல வேளை.. நீ எட்டாங்க்ளாஸ் கூட படிச்ச பொண்ண பாக்கல.. மவனே அடி பின்னிருப்பாங்க !

 14. Bhuvanesh சொல்கிறார்:

  //மாறாத அந்த ஒருக்களித்த சாய்ந்த நடை

  நல்ல வேலை ஏழாம் வகுப்பின்

  கிழிந்த டவுசர் போடவில்லை. //

  ராசா.. நண்பன் கிட்ட பாக்கறதுக்கு ஒன்னுமே இல்லையா? ?? கிளுஞ்ச டவுசர் போட்டிருக்கானானு பாத்திருக்க.. என்ன சின்ன புள்ள தனமா இருக்கு.. நீ எழாங்க்ளாஸ்லயே நின்னுட்டு இருக்கியா ???

  • அடலேறு சொல்கிறார்:

   சுட்டபழத்துக்கு எப்படி சொல்வது, இது ஒரு நினைவு தான் நண்பா, 21 வருடம் ஆனது அவன் சென்னை வந்தே எனும் போதே தெரியவில்லையா இருவரும் வயதான நண்பர்கள் என்று.

   //நீ எழாங்க்ளாஸ்லயே நின்னுட்டு இருக்கியா ???//
   ஏழாங்கிளாஸ் நினைவுல நின்னுட்டு இருக்க நண்பா

 15. Bhuvanesh சொல்கிறார்:

  //என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை. உன் கவிதைகளை பாராட்ட எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை//

  நண்பன இப்படி சொல்லி சொல்லியே யாரும் பாராட்டறது இல்ல.. தேடி கண்டுபுடுச்சு பாராட்டிட்டு போங்க சுரேஷ் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s