கடைசி பக்க கிறுக்கல்கள் -7

Posted: ஒக்ரோபர் 26, 2009 by அடலேறு in Adaleru, அடலேறு, அனுபவம், கவிதை, தமிழ், நினைவு, பள்ளி, ரயில் பயணம், scribblings
குறிச்சொற்கள்:, , , , , , , , ,

slide

ரயில் பயணத்தில் சிறுவன் ஒருவன்
வண்ண கட்டங்களை சேர்க்கும்
விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தான்
மஞ்சள், வெள்ளை, பச்சை, நீலம்
ஆரஞ்சு,சிவப்பு என சிதறிக்கிடந்த
நிறங்களில் ஒரே நிறம் கொண்ட
ஒன்பது கட்டங்களை ’ஒரே’
பக்கத்தில் சேர்ப்பதுதான் விதியாம்.
மஞ்சள் நிறம் சேர்க்க சிறுவன்
எத்தனிக்க மஞ்சளுக்கான
போராட்டம் நடந்தது
எங்கெல்லாமோ சிதறிக்கிடந்த
மஞ்சள் நிறத்தை இங்கு கொண்டுவர
இங்கிருந்த மஞ்சள் நிறம்
வேறெங்கோ சென்றிருந்தது
போராட்டம் சீக்கிரம்
நிறைவுருவதாய் தெரியவில்லை
வெகு நேரம் கழித்து மஞ்சளுக்கான
தோல்வியை போலவே நீலத்துக்கும் சிவப்புக்கும்
குளிகை குப்பியை விழுங்கிய பின்
சிறுவன் எடுத்தது வெள்ளை
மீண்டும் வெள்ளைக்கான வேட்டையில்
அனைத்து வெள்ளைக்கும் நடுவில்
சிக்கிகொண்டது ஒரு சிகப்பும், என் மனசும்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. Jana சொல்கிறார்:

  பல வெள்ளை(யரின்) வேட்டைகளில் மையத்தில் சிக்கிக்கொண்டதுதான் சிவப்பு.
  ஜடப்பொருளொன்றினையே ஒத்த நிறத்தைவைத்து ஒரே தளத்திற்கு கொண்டுவருவதே
  பெரும்பாடாக உள்ளதே இங்கே??

  அது சரி ரயில் நிலையத்தை அடைந்தபின்னர் அந்த விளையாட்டு நிறக்கட்டையை காவில்லை என்று அந்த சிறுவன் அழுதுகொண்டிருந்தானாமே உண்மையா???

  • அடலேறு சொல்கிறார்:

   ஜனா எனக்கு பல நேரங்களில் வியப்பு மேலிட்டு சில்லிடுகிறது, அது எப்படி இருவருக்கும் ஒத்த கோணத்தில் ஒரே மாதிரி சிந்தனை பகிரல்//பல வெள்ளை(யரின்) வேட்டைகளில் மையத்தில் சிக்கிக்கொண்டதுதான் சிவப்பு.//
   ஆமாம் இதை ஒரு குறியீடு கவிதையாகவே எழுத நினைத்தேன்,
   பல மேல் தட்டு நாடுகளின்(வெள்ளை) மத்தியில் சிக்கிக்கொண்டு செய்வதறியாது விழி பிதுங்கி நின்றது சிறுவன் மட்டும் அல்ல நம் ஈழம் கூட தான்
   //அது சரி ரயில் நிலையத்தை அடைந்தபின்னர் அந்த விளையாட்டு நிறக்கட்டையை காவில்லை என்று அந்த சிறுவன் அழுதுகொண்டிருந்தானாமே உண்மையா???// விடுதலை வாங்கி தர யாராவது நல்ல உள்ளங்கள்(நானல்ல) எடுத்து சென்றிருக்கலாம்.

   நான் ரசித்த பின்னூட்டம். பின்னூட்டத்திற்க்கு நன்றிங்க ஜனா.

 2. Bhuvanesh சொல்கிறார்:

  எப்பா அடலேறு பெரிய இலக்கியவாதி ஆகிட்ட.. வாழ்த்துக்கள்!!

  எனக்கு புரியாத கவிதை எல்லாம் இலக்கியம் தான்.. அத எழுதறவங்க எல்லாம் இலக்கியவாதி தான்!!

  • அடலேறு சொல்கிறார்:

   //எப்பா அடலேறு பெரிய இலக்கியவாதி ஆகிட்ட//

   எப்பா சுட்டபழம் பெரிய இலக்கியவாதி ஆக்கீட்ட..

   அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை நண்பா.

   //எனக்கு புரியாத கவிதை எல்லாம் இலக்கியம் தான்.. அத எழுதறவங்க எல்லாம் இலக்கியவாதி தான்!!//
   ஜெயமோகனின் “நவீன தமிழ் இலக்கியம்” படிங்க நண்பா இலக்கியம் பற்றி ஒரு செரிவான கண்ணோட்டம் கிடைக்கும்

 3. Suresh சொல்கிறார்:

  அடலேறு,

  இப்பொழுதெல்லாம் உன் கவிதையை படித்து புரிந்துகொள்ள முடிவது இல்லை. மிக நேர்த்தியாக எழுதுகிறாய்..உன் வளர்ச்சி மகவும் நன்றாக உள்ளது…

  இன்னும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்….

  • அடலேறு சொல்கிறார்:

   ஒரு சிறு சந்தேகம் சுரேஷ், புரிந்துகொள்ளப்படாத வரிகளை எப்படி நேர்த்தியான வரிகள் என கூறமுடியும்.?

   //இன்னும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்….//
   நன்றி

 4. எவனோ ஒருவன் சொல்கிறார்:

  அடலேறு, ஜனா,
  உங்க கூட எல்லாம் உட்கார்ந்து பேசியது நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது. இலக்கியவாதிகளுக்கு நடுவே ஒரு சாதாரண வெகுஜனமாகவே தெரிகிறேன்.

  அடலேறு,
  உள்குத்து (நாம அப்படித்தான் சொல்லுவோம்) அருமை. முதலிலேயே வந்து படித்தது என் தவறுதான். இனி 10 பின்னூட்டங்கள் வந்த பிறகுதான் வந்து படிக்கனும்.

  ஜனா,
  நீங்களே இனி முதல் பின்னூட்டம் இடுங்கள்.

  • அடலேறு சொல்கிறார்:

   //உங்க கூட எல்லாம் உட்கார்ந்து பேசியது நினைத்தால் சிரிப்பாகத்தான்//
   கடைசில ஒரு நகைச்சுவை நேரம் போட்டமே அதுக்காகவா…

   //இலக்கியவாதிகளுக்கு நடுவே ஒரு சாதாரண வெகுஜனமாகவே தெரிகிறேன்//
   வெகு’’’ஜனத்துக்காக படைக்கபடுவது தான் இலக்கியம் என்பது என் கருத்து

   //உள்குத்து (நாம அப்படித்தான் சொல்லுவோம்) அருமை. முதலிலேயே வந்து படித்தது என் தவறுதான்//
   உள் குத்து எல்லாம் இல்லங்க எவனோ ஒருவன், கவிதைக்கு தலைப்பு வைக்கப்பிடிருந்தால் எளிமையாக போயிருக்கும்.
   தலைப்பு கூடாது என்பதற்காக தான் “கடைசி பக்க கிறுக்கலில்” பதிவிட்டேன்.

   நன்றிங்க எவனோ ஒருவன் தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும்

 5. கலை சொல்கிறார்:

  முதலில் கவிதை பார்த்து விட்டு அர்த்தம் புரியாமல் போய்விட்டேன். இப்போ பின்னூட்டங்கள் பார்த்த பின்னர்தான் இப்படி உள்ளர்த்தம் எல்லாம் இருப்பது தெரிகின்றது. (எனக்கு இலக்கிய அறிவு பத்தாது 🙂 )

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s