நிசப்தம்=நீ+சத்தம்

Posted: நவம்பர் 4, 2009 by அடலேறு in Adaleru, அடலேறு, கவிதை, பொது, வாழ்க்கை
குறிச்சொற்கள்:, , ,

tamil _child

நண்பனின் நிசப்த கவிதையின்
லயித்த நேரம் அங்கிருந்து கிளம்பிய
நிசப்த அலையொன்று
என்னையும் ஆட்கொண்டது
கால எந்திரத்தின் வழியே
நிசப்தத்தை நிறுத்த
எண்ணியபோது கடிகாரத்தின்
வழியாய் புகுந்து கொண்ட
நிசப்தம் கைபிடித்து கூட்டிச்சென்று
நிறுத்திப்போனது நிசப்தவெளியில்.
ஆழியெங்கும் நிசப்த அலைகள்
உணர்ச்சியின் வேகத்தில்
கெட்ட வார்த்தையாய்
வெளியேறிய எச்சில்
குமிழிகள் யாவும்
நிசப்த வெளியெங்கும்
சலனமற்று கரைந்த நேரத்தில்
கண்டுகொள்ளாத ஏக்கத்தில்
கத்தி விரைத்தது பத்தொன்பதாம்
நூற்றாண்டின் ஈழ குழந்தை

நன்றி : இது தடாகத்தில் பிரசூரமான என் கவிதை

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. அதி பிரதாபன் சொல்கிறார்:

  அடலேறு,
  அதெல்லாம் எப்படி நிறுத்துவது? நினைவு என்ற இருக்கும் வரை எதையும் மறக்க முடியுமா?

  அது யார் கண்டுகொள்ளாத ஏக்கம்? அரசியலை அழகாகப் புகுத்தியிருக்கிறாய்.

  பிறகு, அந்த நிசப்தக் கவிதை நண்பன் யாரோ?

 2. --புவனேஷ்-- சொல்கிறார்:

  யாராவது விளக்கம் கொடுக்க முடியுமா ?

 3. --புவனேஷ்-- சொல்கிறார்:

  அன்னிக்கு சொன்னது தான் மச்சி!! ஈழ குழந்தை கரைந்து போகவில்லை! மாவீரர் நாளுக்கு காத்திருக்கிறேன் !

 4. Jana சொல்கிறார்:

  அதுபோன்ற குரல்கள் மூகாரி என்று சொல்லிக்கொள்ளபவர்கள் எவ்வளவு வேண்டும் என்றாலும் சொல்லிக்கொள்ளட்டும், ஆனால் இனி ஒலிக்கப்போவது பூபாளமே என்பதில் எள்ளவும் சந்தேகம்வேண்டாம்.
  விடுதலை உணர்வு என்பது பூவல்ல கசக்கிவிட்டால் மீண்டும் மலராமல் இருப்பதற்கு…
  அது பொன்போன்றது சுடச்சுட மிளிர்வது..
  அதுமிளிரும், ஜோதியாக ஒளிரும் என்ற உங்கள் திடத்துடன் நானும் உவகையுடன் இணைந்துகொள்கின்றேன். நண்பா..

 5. சயந்தன் சொல்கிறார்:

  இந்த நிசப்தம், கோபம், ஏக்கம், ஆத்திரம், இயலாமை, சுயவெறுப்பு என்ற பலவற்றை வெளிக்காட்டியுள்ளது. அருமையான கவிதை. ஆனால் அங்கு தற்போது ஏற்பட்டுள்ள நிசப்தம், ஒரு புயலுக்கு பின்னதானதும், ஊழிக்கு முன்னதானதமான நிசப்தம்..

  • அடலேறு சொல்கிறார்:

   நன்றிங்க சயந்தன் தங்களிம் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திர்க்கும்.
   //ஒரு புயலுக்கு பின்னதானதும், ஊழிக்கு முன்னதானதமான நிசப்தம்//
   ஆமாங்க சரியா சொன்னீங்க

 6. கலை சொல்கிறார்:

  நிசப்தம்தான் நிரந்தரமோ என்று எண்ணும் மனநிலையில்தான் தற்போது பலரும் இருகின்றனர் :(.

 7. ரோஸ்விக் சொல்கிறார்:

  விரைவில் ஈழம் மலரும்… வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s