நவம்பர் 6, 2009 க்கான தொகுப்பு

2987682193_5dff53581b

பள்ளி முடிந்து வரும்
மாலை  நேரங்களில் எனக்கான
நொறுக்குத்தீனி
எடுத்து வைப்பாயே
அதற்காகவேனும்

எனக்கான தட்டு கழுவியும்
சட்டை தேய்தும் பின்
நவீனத்துவ அன்பு
காட்டுவாயே
அதற்காகவேனும்

எங்க அண்ணா பின்னிவிடற
ஜடையே அழகு தான்
என செல்வியிடம்
சொல்லி  சிரிப்பாயே
அதற்காகவேனும்

கோபத்தின் உச்சத்தில்
போடா கழுதை என
சொல்லிவிட்டு வேகமாய்
வாசல் பக்கம் ஒடிப்போவாயே
அதற்காகவேனும்

அதிகாலை
தூக்க பொழுதுகளை
காதுக்குள் மையிலிறகு
நுழைத்து எழுப்புவாயே
அதற்காகவேனும்

அத்திலிச்சி பூனைக்கு
வயிறு வலிக்கிறதென
விக்ஸ் ஆக்ஸன் 500
மாத்திரையை பாலில்
கலந்து வைத்தாயே
அதற்காகவேனும்

என்னுடைய சட்டயை
அணிந்ததுக்காய் திட்டு
வாங்கியபடியே
பொத்துக்கொண்டுவரும்
அழுகையை அடக்க முயல்வாயே
அதற்காவேனும்

எதற்காகவேனும்
கடவுளிடம் சண்டையிட்டாவது
பிறந்துவிடு அடுத்த ஜென்மத்திலும்
என் அடங்காபிடாரி தங்கச்சியாக

நன்றி: இப்பதிவு யூத்ஃபுல் விகடன் குட் பிளாக்கில் பட்டியலிடப்பட்டுள்ளது

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements