2987682193_5dff53581b

பள்ளி முடிந்து வரும்
மாலை  நேரங்களில் எனக்கான
நொறுக்குத்தீனி
எடுத்து வைப்பாயே
அதற்காகவேனும்

எனக்கான தட்டு கழுவியும்
சட்டை தேய்தும் பின்
நவீனத்துவ அன்பு
காட்டுவாயே
அதற்காகவேனும்

எங்க அண்ணா பின்னிவிடற
ஜடையே அழகு தான்
என செல்வியிடம்
சொல்லி  சிரிப்பாயே
அதற்காகவேனும்

கோபத்தின் உச்சத்தில்
போடா கழுதை என
சொல்லிவிட்டு வேகமாய்
வாசல் பக்கம் ஒடிப்போவாயே
அதற்காகவேனும்

அதிகாலை
தூக்க பொழுதுகளை
காதுக்குள் மையிலிறகு
நுழைத்து எழுப்புவாயே
அதற்காகவேனும்

அத்திலிச்சி பூனைக்கு
வயிறு வலிக்கிறதென
விக்ஸ் ஆக்ஸன் 500
மாத்திரையை பாலில்
கலந்து வைத்தாயே
அதற்காகவேனும்

என்னுடைய சட்டயை
அணிந்ததுக்காய் திட்டு
வாங்கியபடியே
பொத்துக்கொண்டுவரும்
அழுகையை அடக்க முயல்வாயே
அதற்காவேனும்

எதற்காகவேனும்
கடவுளிடம் சண்டையிட்டாவது
பிறந்துவிடு அடுத்த ஜென்மத்திலும்
என் அடங்காபிடாரி தங்கச்சியாக

நன்றி: இப்பதிவு யூத்ஃபுல் விகடன் குட் பிளாக்கில் பட்டியலிடப்பட்டுள்ளது

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

பின்னூட்டங்கள்
 1. Karthikeyan சொல்கிறார்:

  எனக்கு தங்கை இல்லை.ஆனால் இதை படிக்கும் போது இந்த மாதிரி தங்கை இல்லையென்று ஏக்கமாக இருக்கிறது அடலேறு.

 2. Bhuvanesh சொல்கிறார்:

  மச்சி கலக்கல். இத நீ வெகுஜனப்பத்திரிக்கைக்கு அனுப்பு..

 3. Marimuthu சொல்கிறார்:

  ‘ .’
  சொல்ல வார்த்தைகளில்லை!!
  நம் வாழ்விலும் இது போல நடக்காதா என நினைக்க வைக்கிறது!!!

  (என் ‘நினைவகம்’ படு மொக்கையா போய்க்கிட்டிருக்கு…உருப்புடியா எதாச்சும் எழுத முயற்சிக்கிறேன்.)

 4. Suresh சொல்கிறார்:

  அடலேறு,

  மிக நேர்த்தியாக எழுதுகிறாய்.
  எத்தணை முறை தான் சொல்வது உன் கவிதை நல்லா, சூப்பரா இருக்குனு …………..

 5. butterflysurya சொல்கிறார்:

  எனக்கு தங்கை இல்லை.ஆனால் பதிவுலகில் நிறைய பேர் அண்ணா என்று அழைக்கும் போது மகிழ்ச்சியே..

  நல்லாயிருக்கு.. நண்பா..

  வாழ்த்துகள்..

  • அடலேறு சொல்கிறார்:

   உங்க பின்னூட்டம் பார்த்து எனக்கும் மகிழ்ச்சியாக இருக்குங்க வண்ணத்துப்பூச்சியாரே.
   தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சூர்யா

 6. vetri சொல்கிறார்:

  நல்லா இருக்குன்னு நிறைய பேரு சொல்லிட்டாங்க……..நெஞ்சை தொட்டு விட்டது நண்பா…..

 7. chavito சொல்கிறார்:

  Superb Machi.. it reminds my sister now.

 8. கலை சொல்கிறார்:

  இப்படி எல்லாம் சொல்ல எனக்கொரு அண்ணா இருக்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

 9. மிகவும் அருமை.

  வாழ்த்துகள்!

 10. Jana சொல்கிறார்:

  இங்க தங்கச்சி பாசக்காரியாகத்தானே தெரிகின்றாள். .இந்த அண்ணன்காரன்தான் அடங்காப்பிடாரியாக இருப்பான்போல..

 11. padmahari சொல்கிறார்:

  யோவ் அடலேறு,
  ஒன்னும் சொல்றதிக்கில்லைய்யா! அப்படின்னா, ஒன்னுமே இல்லைன்னு அர்த்தம் இல்ல! உனக்கு எழுதவேண்டிய பின்னூட்டத்தையே ஒரு பதிவா எழுதலாம் அவ்வளவு இருக்கு!
  சும்மா…..கலக்கிட்ட போ! உண்மைய சொல்லனும்னா, இதில நீ எழுதியிருக்கிற ஒரு சில நிகழ்வுகள் உண்மையா நடந்திருந்தாலும், காலத்துல பின்னோக்கி போக முடிஞ்சா, உன் கவிதையில இருக்கிற பல கற்பனைகள உண்மையாக்கி பார்க்கலாமுன்னு தோணுது! அவ்வளவு அழகு கவிதை!

  வாழ்த்துக்கள்! இன்னும் நெறைய “நியாபகம் வருதே” கவிதைகள உங்கிட்ட எதிர்பார்க்குறேன் நண்பா. நன்றி!

  • அடலேறு சொல்கிறார்:

   வாங்க பதம ஹரி,
   //ஒன்னும் சொல்றதிக்கில்லைய்யா! அப்படின்னா, ஒன்னுமே இல்லைன்னு அர்த்தம் இல்ல!//
   இன்னும் நக்கல் குறையலயே

   //இதில நீ எழுதியிருக்கிற ஒரு சில நிகழ்வுகள் உண்மையா நடந்திருந்தாலும்,//
   வழக்கம் போல இதுவும் புனைவு தான் நண்பா, தங்கச்சி இல்லாத ஏக்கம் எனக்கும் இருக்கு

   //காலத்துல பின்னோக்கி போக முடிஞ்சா, உன் கவிதையில இருக்கிற பல கற்பனைகள உண்மையாக்கி பார்க்கலாமுன்னு தோணுது// இது ஒரு அழகிய கவிதை

   //வாழ்த்துக்கள்! இன்னும் நெறைய “நியாபகம் வருதே” கவிதைகள உங்கிட்ட எதிர்பார்க்குறேன் நண்பா. நன்றி!//
   கண்டிப்பா எதிர் பாருங்க நண்பரே!!!

   பின்னூட்டத்திற்கு நன்றிங்க ஹரி

 12. குந்தவை சொல்கிறார்:

  அடலேறு ரெம்ப அருமையா இருக்கு. அப்படியே நான் கொஞ்ச நேரம் மலரும் நினைவுகளில் மூழ்கிவிட்டேன்.
  இன்னும் எவ்வளவோ விஷயம் இருக்குது நினைத்துபார்த்தால். ஆனால் உங்களை மாதிரி எனக்கு கவிதையாக சொல்லத்தெரியவில்லை…ம்… என்னுடைய ஏக்கத்தை அதிகபடுத்திவிட்டீர்கள். நானும் எங்க அண்ணாவும் செய்யாத சேட்டை கிடையாது, பண்ணாத அட்டகாசம் கிடையாது.

 13. டிலான் சொல்கிறார்:

  தங்கச்சி கவிதை என்றதும் எனக்கு லக்கிமான் திரைப்படத்தில் ராதாரவி எழுதிய “தங்கச்சிக்கு கண்ணாளம்”
  என்ற காட்சிதான் தோன்றும். ஆனால் உண்மையில் சிறப்பான ஒரு கவிதையினை எழுதியுள்ளீர்கள் நண்பா. வாழ்த்துக்கள்.

 14. வெங்கிராஜா சொல்கிறார்:

  சொல்லவியலாத சோகம் முட்டித்தள்ளுகிறது. நல்ல கவிதை. ஆனால், ஸ்டீரியோடைப்.

 15. karthick சொல்கிறார்:

  எனக்கும் என் தங்கை என்றால் உயிர் நன்றாய் இருந்தது

 16. அதி பிரதாபன் சொல்கிறார்:

  அடலேறு,
  படம் நல்லாயிருக்கு.
  (அதான் நெறையா பேரு கவிதை நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாங்கள்ல)

 17. nilaamathy சொல்கிறார்:

  தங்கையின் பாசம் அழகு……..மீண்டும் ஒரு தங்கையாய் வரவேண்டும்.தங்கையின் பிரிவில் தான் அருமை புரியும். பாராட்டுக்கள். l

 18. kalyan சொல்கிறார்:

  send ur discussions to my mail

 19. uumm சொல்கிறார்:

  very nice .adaleru.

 20. Anbu சொல்கிறார்:

  very nice. it really touched my heart

  thank you for that

  Anbu which means “LOVE” (in Tamil)

 21. ramalakshmi சொல்கிறார்:

  mela erukum kavithai paditha peragu enaku oru annan ellai endru nenaikum pothu megivum kavalaiyaga ullathu. it is excellent and superb

 22. படைப்பாளி சொல்கிறார்:

  அடங்காபிடாரி கவிதை மட்டுமல்ல..புகைப்படமும் ஈரம் உள்ள ரகம்.

 23. நட்புடன் ஜமால் சொல்கிறார்:

  எனக்கு நிஜத்திலும் பள்ளி காலங்களிம் வலையிலும் நிறைய தங்கைகள்

  ரொம்ப மகிழ்வாய் இருக்கு இதை படிக்க

  (அடுத்த ஜன்மம்) என்பது தவிர – தூள்

  பாசமான பூங்கொத்துகள் – ஒரு அண்ணனாய்.

 24. gayathri சொல்கிறார்:

  அடலேறு
  எனக்கு தங்கை இல்லை என்ற கவலை தான் கார்த்தி

  அடடா இப்படியெல்லாம் கவலைப்படக்கூடாது
  இனி என்னையும் தங்கையாக கொள்ளுங்கள்
  என் அண்ணாக்கள் லிஸ்ட்டில் இனி நீங்களும்

  • அடலேறு சொல்கிறார்:

   வாங்க காயத்திரி முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் உங்களுக்கும் ஜமாலுக்கும் , எனக்கு அக்காகாவாக வேண்டுமானால் நீங்கள் இருக்கலாம். நான் சிறுவன். அன்பிற்கு நன்றிகள் 🙂

 25. Rajeswari சொல்கிறார்:

  அருமையாக உள்ளது….

 26. gayathri சொல்கிறார்:

  எனக்கு அக்காகாவாக வேண்டுமானால் நீங்கள் இருக்கலாம்.

  oru pinji manasa ippadiya kasta paduthuvega

 27. kumar சொல்கிறார்:

  migavum arumai…………….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s