நவம்பர் 18, 2009 க்கான தொகுப்பு

(புதுக்கவிதை)

அந்த பழுப்பு மாலையின்

பேருந்து பயணத்தில்

தெரியாமல் கால் பட்டதுக்காய்

மூன்று முறை மன்னிப்பு

கேட்டவன் உடல் கொஞ்சம் ஒடிசலாகவும்

படிக்காதவனாகவும் தெரிந்ததால்

மனைவியின் முன் வீரம் காட்ட

அனைவரும் பார்க்கையில்

கடினமான வார்த்தை கொண்டு

திட்டிய போது மெதுவாய் உருமாற

தொடங்கி இருந்தது எனக்கான முகம்

***********************

(நவீன கவிதை)

வினையாலனையும் பெயரின்

வாசம் முகர்ந்த இருளின்

சலனத்தில் தொடங்கியது

கடைசி நீட்சியின் பகல்.

வெம்மை தணிந்தவனின் சட்டை

இழுத்து அட்சரச ஆழியின்

சுக்கான் கொண்டு

கரு மயிர் திரவத்தில்

முக்கிய பின் வானத்தில்

மிகிழம் பூவுடன் விளையாடும்

நிலா சிகப்பாய் உருப்பெற்றது

எல்லார் முன்பாக  முகம் தொலைத்தவனுக்கு

நன்றி: யூத்புல் விகடன்
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements