மரப்பாச்சி பொம்மை- ஒரு கரு நான்கு கதைகள்!

முன்கதைச்சுருக்கம்:

அழகான மாலையொன்றில் கடற்கரையில் நண்பர்கள் நால்வர்(நிலாரசிகன்,அடலேறு,ஜனா,அதிபிராதபன்) சந்தித்தோம். அப்போது ஜனா ஒரு சிறுகதைக்கான மிகச்சிறந்த கருவை எடுத்துரைத்தார். அம்மா அப்பா குழந்தை மற்றும் ஓர் இராணுவ வீரன் – இவர்கள்தான் கதையில் நடமாடும் பாத்திரங்கள். நாங்கள் நால்வரும் ஒரே கதையை வெவ்வேறு கோணத்தில் எழுதி இருக்கிறோம். குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட கதையாக நிலாரசிகனும், அம்மாவின் பார்வையாக அதிபிரதாபனும்,அப்பாவின் பார்வையாக அடலேறுவும்,இராணுவ வீரனின் பார்வையாக ஜனாவும் எழுதி இருக்கிறோம். நான்கு கதைகளும் ஒரே நேரத்தில் வலையேற்றம் செய்யப்படுகின்றன. மற்ற மூவர்களுக்கான சுட்டி கதையின் முடிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாசித்து உங்களது பின்னூட்டத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


கதை:

யாராவது இந்திராவ பாத்தீங்களா ? பாத்தீங்களா ? என ஒவ்வொரு முகாமாக இந்திராவை தேடிக்கொண்டு வந்தேன்.ஒவ்வொருவராக இல்லை இல்லை என்று உதடு பிதுக்கி கொண்டு வந்தனர். இந்த பிதுக்கல்கள் நின்று யாராவது ,ஆமா அவளை பார்த்தேன் என சொல்லிவிட மாட்டார்களா என இன்னும் என் தேடலை அதிகப்படுத்தி கொண்டிருந்தேன் புதிதாக தொடங்கப்பட்ட E-16 கொளுந்தவராயன் முகாமில் இருக்கலாம் என அங்கு தேடும் போது தான் வெள்ளவந்தை சபாத்தியன் தாத்தா சொன்னார் இந்தப்பக்கம் வர்ல பா, நான் சாயந்திரம் 5 மணில இருந்து நான் இங்க தான் உக்காந்திருக்க . அப்படி என்றால் வடமூலையில் ஏதோ காரணத்துக்காக 15 குடும்பங்களை தனியாக தங்க வைத்துள்ளார்கள் அங்கு தான் இந்திரா இருப்பாள் எனபது என் எண்ணம்.

இத்தனை நாட்களாக எனக்கு இந்த கவலையே இருந்தது கிடையாது.சசி இருக்கும் வரை அவளுக்கு எல்லாமே இந்திரா தான். அவளின் உலகம் இந்திராவால் சூழப்பட்டது, அவளை குளிப்பாட்டி, தலைவாரி, அவளுக்கு கதை சொல்லி என அவளின் உலகம் இந்திராவுக்காக மட்டுமே படைக்கப்பட்டது. 6 வயது தொடக்கத்தில் தான் இங்குள்ள தமிழ் வழி பள்ளியில் சேர்த்த முடியும். கடைசி வெள்ளிகிழமை தான் அவளுக்கு 6வது வயது தொடங்கியது. எங்கள் வீடு செஞ்சோலை அனாதை சிறுமியர் இல்லத்திற்கு மிக அருகில் உள்ளதால் சசியையும் இந்திராவையும் அதிக நேரங்களில் அங்கு காணலாம்.

“ உனக்கு தத்(ட்)தாமாலை தெதியுமா”

“எங்க அம்மா இது”

”எங்க அப்பா தாத்திரிக்கு தான் வதுவாரு”

”அப்பா இல்லையா” குத்தி பாபா இல்லையா ??”

என செஞ்சோலையின் ஒவ்வொரு குழந்தையிடமும் இவளின் பேச்சு அப்பி இருக்கும். சசியும் காலை தொடங்கி நான் வரும் வரை அங்குள்ள குழந்தைகளுக்கு குளிப்பாட்டி விடுவது முதல் சோறு ஊட்டி, பாடம் சொல்லி தருவது வரை  பல உதவிகள் செய்வாள் .அவளுக்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு பிரியம். அன்று இரவு படுக்கையில் இந்திரா என்மிது குத்துக்காலிட்டு ஏறி உட்கார்ந்து கொண்டு ’அப்பா மரப்பாச்சி பொம்மை வேணும் என்றாள்’ இதுவரை எதுமே கேட்காத அவள் மொம்மை கேட்டது எனக்கு ஆச்சிரியமாக கூடவே சந்தோஷமாக இருந்தது. ’ரா’ பாப்பா மொம்மை வெச்சு என்ன பண்ணுவீங்க என்றேன். அவளை எப்போதும் ’ரா’ பாப்பா என்று அழைப்பதே வழக்கம். இல்லப்பா கதிரேசு வீடு தீப்புடுச்சு எறிஞ்சப்ப அவனோட மொம்மையும் எறிஞ்சுருச்சு, அவனுக்கு தாப்பா அவன் பாவம்ல என சொல்லி அவளும் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டாள், பிறகு சசியிடம் கேட்டபோது தான் தெரிந்தது கதிரேசு 5 வயது குழந்தை எனவும் ஆரிமிக்காரர்கள் போட்ட குண்டு அவர்கள் குடும்பத்தில் இவனை மட்டும் விட்டு விட்டு மற்ற எல்லாரையும் வாரி சுரிட்டிக்கொண்டது எனவும். கண்டிப்பாக இந்திராவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று உள்ளுக்குள் இருந்து ஏதோ சொல்லிக்கொண்டது.

அடுத்த நாள் கதிரேசை பார்த்துவிடுவது என முடிவு செய்து தோட்டத்தில் சின்னப்பனிடம் சொல்லிவிட்டு 5 மணிக்கே செஞ்சோலை விடுதிக்கு வந்து விட்டேன்., இந்திரா கேட்டின் முன்னாடி தான் விளையாடி கொண்டிருந்தாள்., என்னை அந்த நேரத்தில் அங்கு எதிர்பாத்திராத அவளுக்கு அத்தனை சந்தோஷம்.ஜவ்வு காகிதத்தில் மறைத்து வைத்திருத்த மரப்பாச்சி பொம்மையை அவளிடம் நீட்டிய போது அவள் முகம் கொஞ்சம் சோகமாக ஆனது. என்ன தங்கம் சொல்லுங்க ‘ரா’  பாப்பாக்கு பொம்மை பிடிக்கலயா என்றேன். இல்லப்பா “ பொம்மை-ல ஒது கால் பித்துது” என்றாள் ., குழம்பியவனாக பாப்பா ஏன் ஒரு கால பிக்க சொல்றீங்க என்றேன், கதிரேசுக்கு தான் ஒரு கால் இல்லையே அதனால தான் என்றாள்.சுருக்கென்று மனதை ஏதோ குத்தியது போன்ற உணர்வு அவள் அதை சொல்லும் போது அள்ளி அணைத்து முத்தமிட்டேன். அந்த நேரத்தில் கதிரேசுக்கு கால் இல்லாதது நீங்காத ரணமாக உறுத்திக்கொள்ள தொடங்கி இருந்தது.

சற்று சாமாளித்தவனாக ‘ரா’ பாப்பா அம்மா எங்கனு சொல்லுங்க நாம அம்மாவ பாத்துட்டு அப்பறம் கதிரேசுக்கு பொம்மை தரலாம் என்றேன். அம்மா அங்கே இருக்கிறாள் என அவள் கை காட்டின இடத்தில் காற்றை கிழித்து கொண்டு வானத்தில் இருந்து ஒரு பெரிய குண்டு ஒன்று விழுத்தது, நொடியில் தென்னை மரம் அளவுக்கு தீ  சுவாலைகள்,அடுத்து அடுத்து யுகிக்க முடிவதற்குள் கண்ட இடமெல்லாம் ராணுவ விமானங்கள் குண்டை கக்கிக்கொண்டு இருந்தது.,கண்முன்னே நிமிடத்தில் தரைமட்டமாகி போனது செஞ்சோலை அனாதை குழந்தைகள் இல்லம். வெறும் நாற்பதடி தூரத்தில் செயவதறியாது மூர்ச்சை ஆகிப்போனேன். இந்திரா என் கழுத்தோடு சேர்த்து பொம்மையை இறுக கட்டிகொண்டது இன்னும் நியாபகம் இருக்கிறது.

வெடுகுண்டின் தாக்கத்தை பல நாட்கள் கழித்தே உணர முடிந்தது 62 குழந்தைகள், 8 பெண்கள் இறந்தனர் என்பது. அதில் முதல் பெயர் சசியினுடையது. அடுத்தடுத்து நடந்த விடயங்களால் போர்க்கைதியாய் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளோம். இந்த ”அடுத்தடுத்து” எனும் வார்த்தை எவ்வளவு ரணங்களும் வலிகளும் கொண்டது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.

இந்திராவை இன்னும் காணவில்லை., இன்னும் 10 அடி நடந்து வடக்காக திருப்பினால் E-15 புதிய முகாம் வந்து விடும் ,  படாரென  பின் மண்டையில் சம்மட்டியால் அடித்தது போல வலி. ஒரு கணம் என்ன நடப்பது என்று உணர்ந்து கொள்வதற்கு முன்னமே துப்பாக்கியின் பின் முனை கொண்டு  அடுத்தடுத்த அடிகள் ., முகாம் எல்லை தாண்டி யார் வர சொன்னது என்று கேட்டவாறே பூட்சு காலால் மிதி. பக்கத்தில் இருந்த அறைக்கு தூக்கிச்சென்று பின் பக்கம் கைகளை கட்ட சொல்லி படுக்கடையாக வைத்து அங்கும் அடி. துப்பாக்கியின் கனமான முனை கொண்டு காலில் அடித்த போது என் சுண்டு விரல் என் உடம்பில் இருந்து தன்னை விடுவித்து கொண்டது .அப்போது தான் பார்தேன் உடைகளற்ற என் இந்திரா நிர்வாணமாய் பெஞ்சுக்கடியில் ., உயிரே ஒரு கணம் நின்று போனது.,சாடாரென்று என் லுங்கி அவிழ்து அவளுக்கு போர்த்திவிட்டு இவள் தான் என் குழந்தை இவளை தேடித்தான் இங்கு வந்தேன் தயவு செய்து எங்களை விட்டு விட்டுங்கள் என கை கூப்பி கெஞ்சினேன். இந்திரா இந்திரா என அவளை தட்டினேன் அவள் சுரத்தே இல்லாமல் படுத்துக்கிடந்தாள். அவளின் உதட்டின் ஓரத்தில் சிறு ரத்தம் உறைந்திருந்தது.  இந்திரா என் மகள் என  உறுதிசெய்த பின்பு, உயரம் கொஞ்சம் அதிகமான ஆர்மிக்காரன் என்னிடம்  நோட்டில் கையெழுத்து வாங்கி விட்டு., விட்டு விடுவிடுவதாய்  கூறிக்கொண்டே மேசை மீது புகைத்து  கொண்டிருந்தவனின் காதில் ஏதோ சொல்லிவிட்டு போனான்.அதன் பின்பு ஆர்மிக்காரர்கள் குழுவாய் பேசி என்னை அனுப்பிவிட்டனர்.

இது நடந்த பல நாட்களுக்கு அப்பா எனக்கு ஒன்னுக்கு போனா வலிக்குது என சொல்லிக்கொண்டே இருந்தாள் இந்திரா., கயல்விழி அக்கா தான் இவளை கூட்டிசென்று சில வைத்தியம் செய்து கொண்டிருந்தாள்.  அன்று இரவு வேளையில் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருக்கும் போது  அப்பா கதிரேசோட மரப்பாச்சி பொம்மைய அந்த ஆர்மி மாமாக்கே குடுத்தர்லாம் பா என்றாள். அழுது வீங்கிய கண்களோடு ஏன் என்றேன்., இந்த பொம்மை நல்லா இருக்குன்னு தான் பா என்ன கூத்தீத்து போனாது(ரு). அதுக்கு அப்பறம் என்ன நடந்து’துன்னே எனக்கு தெதில என்றால் பிஞ்சு மொழியில்.

நெஞ்சில் அடித்தபடி சத்தமிட்டு வெடித்து அழுதேன் நான்.

இதே கதைகளம் மற்ற நண்பர்களின் வேறுபட்ட பார்வையில்

1. நிலா ரசிகன்- வேலியோர பொம்மை மனம்

2. அதி பிராதபன் –சுடர்

3. ஜனா –புத்தம் சரணம் கச்சாமி

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

37 thoughts on “மரப்பாச்சி பொம்மை- ஒரு கரு நான்கு கதைகள்!

Add yours

  1. வித்தியாசமான முயற்சி…
    நான்கு கதைகளையும் படித்தேன்…
    நிலா ரசிகனின் கதை மட்டும் இணைப்பிலிருந்து வெளிபட்டது போல் தெரிகிறது…
    எனினும் உண்மையும், தாக்கிய சோகமும் ஒன்றே…
    அதிபிரதாபனின் அம்மா பார்வையின் முடிவும், அடலேறுவின் அப்பா பார்வையில் வ்ந்த அதிர்ச்சியும்…(//இந்த ”அடுத்தடுத்து” எனும் வார்த்தை எவ்வளவு ரணங்களும் வலிகளும் கொண்டது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.//—உணரமுடிந்தது),
    ஜனாவின் இராணுவவீரன் பார்வையில் நெகிழ்வும், நிலாரசிகனின் கதையும் சொல்லியவை கதை அல்ல உண்மைதான் எனச் சொல்லத் தேவையில்லை…
    நிலா ரசிகனின் கதையில் மட்டும் குழந்தைப் பார்வை இல்லை.. பொதுவான ஒரு கதைசொல்லித் தனமே தெரிகிறது..

    Like

    1. நான்கு கதைகளையும் படித்ததற்கு நன்றிங்க தமிழ்.
      கதையில் ஆழுற போய்விட்டீர்கள் அதன் பிரதிபலிப்பு தான் இந்த பின்னூட்டம்.
      நிலாவின் கதை தளம் அது மாதிரியானது(தேவையானதும் கூட) அதனால் தான் உங்களுக்கு அப்படி தெரிகிறது.

      //சொல்லியவை கதை அல்ல உண்மைதான் எனச் சொல்லத் தேவையில்லை//
      ஜனா முதன் முறை இந்த கதை சொல்லிய போது நாங்கள் அனைவரும் கேட்ட முதல் கேள்விதான் இது.

      Like

  2. அருமையான கதையோட்டம் நண்பரே. இந்த உணர்வுகளை வார்த்தைகளால் வர்ணித்துவிடமுடியாது. அந்த மனதின் ரணத்தை வலியோடு கொண்டுவந்திருக்கின்றீர்கள். நான்குபேரும் மாறிமாறி கண்களை கடலாக்கிவிட்டீர்கள்.
    படித்த பின்னரும், அந்த வலி போகவில்லை அடலேறு.

    Like

    1. நன்றிங்க சயந்தன். எனக்கும் கூட தான் நண்பரே அந்த வலி. முதன் முறையாக ஜனா பாலவாக்கம் கடற்கறையில் இந்த கதையின் கருவை சொல்லும் போது இருந்த இதே வலி தான் நானும் உணர்ந்தேன்.

      Like

  3. நிலாரசிகனின் கதை ஏங்கவைத்தது,
    பிரதாபனின் கதை இரங்க வைத்தது
    அடலேறுவின் கதை நெகிழ வைத்தது
    ஜனாவின் கதை அழ வைத்தது.

    Like

  4. உங்கள் அனைவரின் கூட்டு முயற்சி பாராட்டுதலுக்குரியது. அதி பிரதாபன் என் நண்பர். தங்களையும் விரைவில் சந்திப்பேன் என நினைக்கிறேன்.

    Like

  5. நண்பா, படித்தேன் கனத்த மனதுடன்…..முடித்தேன் கண்களில் நீருடன்!
    நீ உருவகப்படுத்தியது என்னவோ ஒரு இந்திராதான்! இன்னும் எத்தனை எத்தனை இந்திராக்களோ எம் சகோதர ஈழமண்ணில்? காலம் கனியவே கனியாதா எம் ஈழத்துச் சொந்தங்களுக்கு?
    நல்ல முயற்ச்சி அடலேறு! வாழ்த்துக்கள்.

    Like

    1. உருவகப்படுத்துவதற்கே நமக்கு இவ்வளவு வழி என்றால் தினம் தினம் அனுபவிப்பவர்களுக்கு எத்தனை கொடுமை நண்பா.
      பின்னூட்டத்திற்கு நன்றிங்க ஹரி.

      Like

  6. //”அடுத்தடுத்து” எனும் வார்த்தை எவ்வளவு ரணங்களும் வலிகளும் கொண்டது…//

    இந்த புனைவின் மிகச்சிறந்த சொற்றொடர்….

    //If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!//

    இந்த பதிவை யாராவது enjoy செய்திருப்பார்களா, என்ன..?

    Like

    1. தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க நண்பரே.
      ////If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!//

      இந்த பதிவை யாராவது enjoy செய்திருப்பார்களா, என்ன..?//

      இதை பதிவின் வார்ப்புருவில் சேர்த்திவிடேன், அதனால் எல்லா பதிவுகளுக்கும் இது வருவதை தவிர்க்க முடியாது.

      புது விதமான சிந்தனை தான் . நல்ல கேள்வியும் கூட.

      Like

  7. அழ வைத்து விட்டீர்கள் அடலேறு!!!

    இயலாமையின் உச்சகட்ட வேதனையை பிரதிபலித்தது உங்கள் கதை…

    உங்கள் கதையைப் படித்தவுடன் முதலில் தோன்றியது, இராணுவ வீரனின் உணர்வுகளை படிக்க வேண்டும் என்றுதான் முதலில் தோன்றியது!!! ஆனால் அலுவலகத்தில் ப்ளாக்ஸ்பாட் தடை…

    இன்னும் படிக்கவில்லை…

    நல்ல முயற்சி…உங்கள் எழுத்து நடை ஒன்றும் சமீபத்தில் கதை எழுத ஆரம்பித்தவர் போல் தெரியவில்லை….மிக அருமை!!!

    Like

    1. இன்னும் நிறைய பிரதிபலிப்புகள் தெரியாமலேயே போய் விட்டது சகா, ராணுவீரன் ஜனாவால் எழுதப்பட்டது ஜனா ஒரு ஈழத்தமிழர், கதையில் நிறைய விடயங்கள் உண்மை தன்மை சார்ந்தவையாக இருக்கும். பின்னூட்டத்திற்கு நன்றிங்க நரேஷ்

      Like

    1. நன்றிங்க படைப்பாளி தங்களின் முதல் வருகைகும் கருத்தும்.
      //அந்த கதையில் வரும் தகப்பனோடு நானும் சேர்ந்து அழுதேன்.//
      தமிழர்கள் அழுவதற்கு மட்டும் தானே 😦

      Like

  8. என்னை அழவைத்துவிட்டீர் நண்பரே. தயவு கூர்ந்து இந்த நான்கு கதைகளையும் தமிழ் என்ற வட்டத்திற்குள் அடக்காமல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இவுலகம் படிக்கசெயுங்கள்.

    Like

அடலேறு -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Create a free website or blog at WordPress.com.

Up ↑