தலைச்சுமை – நூல் விமர்சனம்

Posted: திசெம்பர் 14, 2009 by அடலேறு in Award, அடலேறு, அனுபவம், கவிதை, காதல், தமிழ், வாழ்க்கை, Book review, Girl, life, love
குறிச்சொற்கள்:, , , , , ,

——————————–

நூலின் பெயர் : தலைச்சுமை
வெளியீடு : நிவேதிதா பதிப்பகம்
விலை : ரூ.55
பக்கம்: 144
நூலாசிரியர் : பழமன்
———————————
வட்டார இலக்கியங்கள் தமிழில் எப்போதும் ஒரு தனி முத்திரை படைப்புகளாக வலம் வந்திருக்கின்றன. கொங்கு வட்டார இலக்கியங்களில் பழமன் குறிப்பிடத்தக்கவர்.‘பொன் ஊற்று’, ‘நந்தியா வட்டம்’ என்ற இரண்டு நாவல்களை எழுதிய பழமனின் மூன்றாவது நாவல்‘தலைச்சுமை’. தலைச்சுமை நாவலில் கொங்கு வட்டார மொழியில் கிராமமும் அதன் சார்ந்த இடங்களையும் தாண்டி கிராமத்தின் எதார்த்த மனிதர்களையும் அவர்களின் வாழ்வியல் கூறுகளையும் ஆசிரியர் பழமன் புத்தகம்  முழுக்க அள்ளித்தெளித்திருக்கிறார்.

கொங்கு வட்டாரத்திற்கே உரிய மரியாதை வரிகளிலும், கதை மாந்தர்களின் வடிவத்திலும் சரியாக பொருத்தியிருக்கிறார் ஆசிரியர். நாவலின் நாயகன்  வேலுவை ஒரு சராசரி மனிதனாகவும் கிராமத்தின் தின வாழ்க்கையில் தன்னை இனைத்துக்கொண்டு ஓடும் ஒரு சாதாரண மனிதனாக வலம் வர விட்டிருக்கிறார். நாவலின் முதல் வரி “மணி பத்து இருக்கும் , பழைய சோத்து நேரம்” என ஆரம்பிக்கும்  இடத்தில் இருந்து  நம்மை கை பிடித்து கூட்டிச்செல்கிறார் கொங்கு தேசத்தின் ஒரு கிராமத்திற்கு. கிராமத்திற்கே உரிய விளிம்பு நிலை மனிதர்கள் கிட்டான் மாதாரி, டெம்போ ரங்கநாதன், மினிடோர் மருதாசலம், ட்ராக்டர் அருணாசலம், கால் டாக்சி கருப்புசாமி, பவர்ஸ்ப்ரேயர் பொன்னு சாமி, போரிங் மெஷின் பூங்காவனம், மெக்கானிக் மாரிமுத்து, ஊராட்சி உறுப்பினர் வேலாயுதம் அழகாக பாத்திரங்கங்கள் நாவல் முழுக்க தன் பங்கு நியாங்களையும், தனக்கே உரிய கிராமத்தின் விவரனைகளையும் தனக்குள் பொதித்து வைத்திருக்கின்றன.

நாவலின் நாயகி சாந்தியின் சொந்த ஊர் பொள்ளாச்சி பக்கம் நெகமம் , கொங்கு வட்டார கிராமத்தின் தேர்ச்சியை மிக ரசனையுடன் நாவலின் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. நாயகி மின்சாரத்துறையில் வீடு வீடாக சென்று மின் கணக்கு எடுக்கும் பாத்திரமாகவும், பெண்னைகே உரிய நளினத்தை அந்த பாத்திரம் எப்படி வெளிப்படுத்துகிறது என்பதையும் பார்க்கையில் நிஜமாகவே ஒரு கொங்கு  தேச நாயகியை நம் கண்முன் உலவவிட்டிருக்கிறார். நிச்சயமாக சாந்தியை கொங்கு வட்டார மக்கள் தினமும் சந்திருக்ககூடும். ஒரு கட்டத்தில் வேலு ஒரு தாழ்ந்த சாதி வீட்டில் தேனீர் அருந்துவதாக குறிக்கப்பட்ட இடத்தில் அந்த பெண் ‘ எங்க வீட்டிலயெல்லாம் நீங்க குடிப்பீங்களா’? என கேட்கிறார் இது அப்பட்டமான மனதின் ஏக்கம், கொங்கு தேசத்தின் மரபுகளை முதன் முதலில் தாண்டும் ஒருவனை பார்த்து முன் வைக்கும் வார்த்தை கோப்புகள். நாயகனின் தவறை ஒற்றை வரி சொல்லில் மறந்துவிட்டதாக  சொல்லி நம் மனதை விட்டு நீங்க மறுக்கிறார் நாயகி. இலை மறை காயாக கிராமத்தில் நடக்கும் தவறுக்கான காரணமும் அழகியல் சார்ந்து சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது

கொங்கு தேச கிராமத்தின் வாழ்க்கையும்,காதலும் எந்த வித விரசமும் இல்லாமல் அள்ளிப்பருக தலைசுமை ஒரு அருமையான நாவல்

Advertisements
பின்னூட்டங்கள்
 1. மாரி-முத்து சொல்கிறார்:

  ‘பொன் ஊற்று’,
  ‘நந்தியா வட்டம்’
  ‘தலைச்சுமை’

  கொங்கு வட்டார நாவல்கள் என்றதும், படிக்கணும் போல தோன்றுகிறது…..
  அறிமுகம் செய்ததற்கு நன்றிங்க…

 2. சே. ராஜப்ரியன் சொல்கிறார்:

  நல்ல பகிர்வு தலைவரே …………

 3. நரேஷ் சொல்கிறார்:

  நல்ல பகிர்வு!!!

  படிக்கத்தூண்டுகிறது உங்கள் விமர்சனம்….

 4. Bhuvanesh சொல்கிறார்:

  நல்லா இருந்துச்சு கண்ணு.. வேசையா வாங்கோணும்.. படிக்கோணும் னு தோணுது!
  ஏனுங்க, கொங்கு வட்டார புத்தகத்துக்கு ஏனுங்க வேற பாசைல விமர்சனம்..

 5. […] வியக்க வைக்கிறது! வாழ்த்துகள்!! அடலேறுDecember 16th, 2009 at 4:29 […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s