இலக்கிய காதல் எப்போதும் மனதை லயிப்புக்குள் உள்ளாக்குபவை. இவை அனைத்தும் என்னை ஈர்த்த வரிகளின் பகிர்வுகள்.

பாடல்:

வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
என்னெதிர் பூரண பொற்குடம்
வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட
கனாக் கண்டேன்.. தோழி நான் கனாக் கண்டேன்

ஆசிரியர்: ஆண்டாள்-நாச்சியார் திருமொழி

பொருள்: வாரணமாயிரம்=ஆயிரம் யானைகள்

விளக்கம்:

ஆயிரம் யானைகள் சுற்றி நிற்க, என் வீரத்தலைவன்(மணமகன்) கம்பீரமாக நடந்து வருகின்றான். சுத்த தங்கத்தாலான குடங்களை எங்கும் சூழ வைத்து அழகிய தோரணம் கட்டி என் தலைவன் மணம் செய்வதாய் கனவு கண்டதாக  ஆண்டாள் தலைவி கூற்றாக தோழிக்கு கூறுகிறாள்.

————————
பாடல்:

கன்றும் முன்னாது களத்தினும் படாது
நல் லான் தீம் பால் நிலத்தில் உக்குகக்கும்
எனக்கும் மாகது எம்மைக்கும் முதவாது
பசலை பனி யியர் தீதலை
அல்குல் என் மாமனிக் கவினே

ஆசிரியர்:வெள்ளிவீதியார்- குறுந்தொகை

விளக்கம்:

பசுவின் பாலை கன்றும் குடிக்காமல், பதப்படுத்தியும் வைக்காமல் நிலத்தினில் கொட்டி வீணாவதை போல, எனக்கும் உதவாது என் தலைவனுக்கும் உதவாத என்னுடைய இந்த அழகிய உடல் இருந்தென்ன பயன், இந்த அழகிய உடம்பை பசலை நோய் ஆட்கொண்டு  போக வேண்டும் என்பதாக தலைவி கூறிய பாடல்.

———————
பாடல்:

கான மஞ்ஞை அறைஈன் முட்டை
வெயில்ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி! உண்கண்
நீரொடு ஒராங்குத் தணப்ப
உள்ளாது ஆற்றல் வல்லு வோர்க்கே

ஆசிரியர்: கபிலர் – குறுந்தொகை

விளக்கம்:

காட்டில் உள்ள மயில் பாறையில் ஈன்ற முட்டையை  கருங்குரங்கின் குட்டிகள் உருட்டி விளையாடும் மலை நாட்டைச் சார்ந்தவன் தலைவன். அழகிய கண்களில் வழிந்தோடும் நீரைப் பார்த்தும் இரக்கமில்லாமல் அப்படியே பிரிந்து சென்ற அந்த கடும் மனம் உடையவனை எப்பொழுதும் நினைந்து வருத்தப்படாதவர்களுக்கு மட்டுமே தலைவனது நட்பு எப்பொழுதும் இன்பம் அளிக்க வல்லது.
இவ்வாறு கூறும் தலைவி தன் பிரிவாற்றாமை (I Miss u) , தலைவன் இல்லாமை கண்டு வருந்துகிறாள்.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. அதி பிரதாபன் சொல்கிறார்:

  என்னப்பா கொஞ்சமா இருக்கு?
  இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

 2. நிலாரசிகன் சொல்கிறார்:

  அடலேறு,

  இந்த விளக்க உரை எழுதியது நீங்களா? நீங்கள் எனில் மிக்க மகிழ்ச்சி.
  ஏன் கேட்கிறேன் எனில் ஏற்கனவே ஏதோவொரு நூலில் இதே உரை படித்த ஞாபகம் வருகிறது.

  -நிலாரசிகன்.

  • அடலேறு சொல்கிறார்:

   வணக்கம் நிலா, நான் தான் விளக்கம் எழுதினேன். எனக்கு தெரிந்து குறுந்தொகைக்கு நிறைய பேர் விளக்கம் எழுதி விட்டார்கள். ஆனால் என்ன பண்ணுவது அனைத்து உரையும் ஏறத்தாழ சமமாக தான் உள்ளது. பின்னூட்டத்திற்க்கு நன்றிங்க நிலா

 3. படைப்பாளி சொல்கிறார்:

  இலக்கிய காதல் எப்போதுமே ஈர்ப்பு உள்ளவை..அதிலும் தலைவன்,தலைவி என்றால் தனிச்சுவை.இனிய வற்றில்,இன்னும் இனிப்பை தேடி சேர்த்திருப்பது நலம்.சுவை பருகினேன்.

 4. கிருஷ்ண பிரபு சொல்கிறார்:

  /– வாரணமாயிரம் சூழ வலம் செய்து
  நாரண நம்பி நடக்கின்றான்… …. … –/

  எனக்கு இலக்கியம் எல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது. ஆனால் பாருங்க இந்த வரிகள் ‘கேளடி கண்மணி’ என்ற படத்தில் இளையராஜாவின் இசையில் ஜானகி அம்மா மற்றும் SPB தனித் தனியாக பாடியிருப்பார்கள்.

  பாடலைக் கேட்க கீழே செல்லவும்.

  http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.4620/

 5. cablesankar சொல்கிறார்:

  adaleru.. ஒவ்வொன்றாக எழுதி விளக்கவும் ஒரே பதிவில் ரெண்டு முன்று கொஞ்சம் திகட்ட செய்யும் என்று தோன்றுகிறது.

 6. vetri சொல்கிறார்:

  இந்த மாதிரி நிறைய காதல் ரசம் சொட்டும் இலக்கிய பாடல்களை புரியும்படி விளக்குங்கள்…..

 7. Jana சொல்கிறார்:

  நளவெண்பாவில் நளன் அன்னத்திற்கு தமயந்தி பற்றி உரைக்கும் இடங்கள், காதல் சேர்ந்த அழகான வெண்பாவாக விளிர்பவை. அதையும் அடுத்த பதிவில் சேர்த்துவிடுங்கள் இலக்கியம் எப்போதும் சுவையானவையே, உங்கள் தெரிவுகள் சுப்பர். வாழ்த்துக்கள்.

 8. மாரி-முத்து சொல்கிறார்:

  நாச்சியார் திருமொழி – விளக்கம் நன்று…
  (ஆனால்…ஒரு சினிமா படத்தோட டைட்டிலை நியாயப்படுத்த இதை பயன்படுத்திட்டாங்க…)
  குறுந்தொகையும் விளக்கமும் அருமை….

 9. sayanthan சொல்கிறார்:

  உங்களுடைய உரை நடையில் எழுதியது நல்லா இருக்கிறது.தொடரட்டும் அடலேறு வாழ்த்துக்கள்

 10. அடலேறு சொல்கிறார்:

  @ மாரி-முத்து

  //ஆனால்…ஒரு சினிமா படத்தோட டைட்டிலை நியாயப்படுத்த இதை பயன்படுத்திட்டாங்க// அதனால என்ன இலக்கியம் என்பது அனைவருக்கும் பொது தானே நண்பரே.

  @sayanthan

  நன்றிங்க சயந்தன்

 11. நரேஷ் சொல்கிறார்:

  உங்கள் நடையும், விளக்கமும் மிக நன்று அடலேறு!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s