இல்லாத மீசை

Posted: திசெம்பர் 19, 2009 by அடலேறு in அடலேறு, கவிதை, தமிழ், புனைவு, Imagination, scribblings
குறிச்சொற்கள்:, ,

குங்குமசிமிழின் அடைபட்டிருந்த

நத்தை ஒன்று வெளியேறி

எனக்கான இடம் கொடு என்கையில்

சம்மதிப்பதாய் பாவனை செய்து

நாட்காட்டி தேதி கிழித்த பின்

சிலந்தி வலையில் மாட்டி விடுவீர்கள்

மீண்டு எழுகையில் நவயுக

பிரிதி எய்து அனைத்தின்

சாராம்சம் நீயென போதை

ஏற்றி பின் வசை பாடி

யாருமற்ற தனிமையின் பின்னிரவில்

தேனீக்கள் கூட்டமாய் கொட்டும்

என பயமுறுத்தி மீண்டும்

சிமிழிக்குள் அடைத்த பின் வீரமாய்

தடவிக்கொள்வீர்கள் இல்லாத மீசையை

Advertisements
பின்னூட்டங்கள்
 1. சே. ராஜப்ரியன் சொல்கிறார்:

  நல்லாயிருக்கு ………

 2. புலம்பெயர் சொல்கிறார்:

  /நவயுக

  பிரிதி எய்து அனைத்தின்

  சாராம்சம் நீயென /

  அர்த்தம் புரிய வில்லை , விளக்கினால் ஆனந்தம்.

  /யாருமற்ற தனிமையின் பின்னிரவில்/

  தனிமை என்றாலே யாருமற்றது தானே, யாருமற்ற தனிமை என்று தனியாக கூற வேண்டுமா?

 3. மாரி-முத்து சொல்கிறார்:

  கவிதையின் மூலம் நீங்கள் சொல்ல வந்த செய்தி நன்றாக புரிகிறது…
  ஆனால் எந்த சம்பவத்தை நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்றுதான் தெரியவில்லை…
  (அப்படி ஏதேனும் உள்ளதா…?..recession மாதிரி தெரியுது…)

 4. குந்தவை சொல்கிறார்:

  பின் நவீனத்துவ கவிதையா…
  கீழே நீங்க இதுக்கு விளக்கமும் தரனும்.

 5. அடலேறு சொல்கிறார்:

  நன்றிங்க பிரியன்,புலம்பேர்,சாம்ராஜ், மாரி மற்றும் குந்தவை

  @புலம்பெயர்

  தனிமை என்றாலே யாருமற்றது தானே, யாருமற்ற தனிமை என்று தனியாக கூற வேண்டுமா?

  புதிய இடத்தில் புதிய முகங்கள் பல இருந்தும் பேசாமல் இருக்கும் தனிமைக்கும், நம் வீட்டில் யாருமில்லாத போது இருக்கும் தனிமைக்கும் உள்ள வித்தியாசம் போல தான் இது.

  @மாரி-முத்து
  சம்பவம் இல்லை நண்பா

  @குந்தவை

  நவீனம் எல்லாம் ஒன்றும் இல்லைங்க குந்தவை, இது ஒரு பெண்ணியம் சார்ந்த குறியீட்டு கவிதை அவ்வளவே

 6. படைப்பாளி சொல்கிறார்:

  சிமிழிக்குள் அடைத்த பின் வீரமாய்

  தடவிக்கொள்வீர்கள் இல்லாத மீசையை//

  இன்று பலரின் மீசைகள் இப்படிதான் படமெடுக்கின்றன..

 7. jyothsna சொல்கிறார்:

  சுதந்திரம் தருவது போல் தந்து பறிக்கப்படும் இன்றைய பெண்களைப் பற்றிய கவிதை அருமையாக இருக்கிறது .

 8. அடலேறு சொல்கிறார்:

  நன்றிங்க படைப்பாளி

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க jyothsna 🙂

 9. வேட்டைக்காரன் சொல்கிறார்:

  இப்பொழுது கொஞ்சம் புரிகிறது. Jyothsnaஅவர்களுக்கு நன்றி. ஆசை காட்டி மோசம் செய்வது போல் பாவமான செய்கை வேறில்லை. நல்ல கருத்தாழம் கொண்ட பதிவு. வாழ்த்துக்கள்.

  சாம்ராஜ்.

 10. புலம்பெயர் சொல்கிறார்:

  யாவரும் இருந்தும் தனிமை

  யாவரும் இல்லாத தனிமை

  தனிமையை பௌதீக ரீதியாக மட்டும் அவதானிகின்றீர்களா, அடலேறு….

 11. kunthavai சொல்கிறார்:

  இப்பதான் புரிந்தது. நிஜமாகவே நன்றாக இருக்கின்றது.

 12. uumm சொல்கிறார்:

  very nice adaleru…how are you?

 13. Bhuvanesh சொல்கிறார்:

  கவிதை அர்த்தம் புருஞ்சுது.. ஆனா எல்லா வார்த்தை/ வாக்கியங்களுக்கான அர்த்தமா புரியல..

  நீ காலேஜ் பசங்களுக்கு படம் நடத்துற, நான் எல்.கே.ஜி பையன்.. வேற என்ன சொல்ல ?

 14. Karthikeyan சொல்கிறார்:

  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அடலேறு !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s