நூலின் பெயர் : யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள்
பகுப்பு : சிறுகதைகள்
வெளியீடு : திரிசத்தி பதிப்பகம்
விலை : ரூ.70
பக்கம் : 90
நூலாசிரியர் : நிலா ரசிகன்
————————————————————————–
எழுத்தாளனின் தீர்க்கமான நுண்ணிய அவதானிப்புகள் மட்டுமே ஒரு சிறந்த படைப்பின் ஆதர்ச புள்ளியாக இருக்க முடியும். அதற்காக அவன் தன்னுடைய மறந்த பால பருவத்தை மீண்டும் அதன் கால போக்கிலேயே சென்று ஒவ்வொரு இடமாக தேடி ரசனை தன்மை மிக்கவைகளை மட்டும் தனக்கானவையாக மீண்டு எடுத்து வருகிறான்.ஒவ்வொரு படைப்பாளியும் இதில் ஒரளவேனும் சொல்லிக்கொள்ளும் படியான வெற்றியை பெருகிறான் என்பது நிதர்சனம்.
செவ்வியல் கூறுகளை மிக கூர்மையாக சேகரித்திருக்கிறார் நிலா ரசிகன் “ யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகளில்”.எழுத்து என்பது அனைத்தையும் அப்பட்டமாக அம்பலப்படுத்துவது தான் என்ற போக்கு இருக்கும் இந்த நேரத்தில் விரசம் கலக்காமல் சொல்ல வந்த விடயத்தை மட்டும் மயிலிறகாய் மனதில் பட்டுத்தெறிக்கும் படி இருக்கிறது இந்த சிறுகதை தொகுப்பில் உள்ள பல கதைகள்.பெரும்பான்மையான கதைகளில் கடைசி வரியில் வாசிப்பாளை மீண்டும் படிக்கவைக்கும் தந்திரம் ஆசிரியருக்கு நன்றாக கை கூடியுள்ளது. இந்த தொகுப்பில் கடைசி கதை “ மை லிட்டில் ஏலியன் ப்ரெண்ட்” மேற்சொன்ன படிமத்தை தனக்கு சாதகமாக பெற்றுக்கொள்கிறது. ”சேமியா ஐஸ்“ சிறுகதை நாயகனை பள்ளி பருவத்தில் நாம் நிச்சயம் எப்போதாவது கடந்து வந்திருப்போம். வால் பாண்டியின் சரித்திரம் வால் பாண்டியனை ஒரு ரசனை சிறுவனாக உலவிட்டுள்ளது நம் மனதில் ,சிறுவர்களின் உலகம் தான் எவ்வளவு எளிமையானதும்,இயல்பானதும் என்பதை வாசிப்பாளன் இச்சிறுகதையின் இரண்டு வரிகளுக்கும் நடுவே தனக்கான சிறு வயது நினைவுகளை நிச்சயம் திருப்பிப்பார்த்த படியே தான் கடந்திருப்பான்.தொகுப்பின் முதல் கதை யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள் எனக்கான முத்திரை கதை வரிசைகளின் நிச்சயம் இடம் பெரும்,பொருத்திப்பார்த்தல் என்பது பெருப்பான்மையாக வாசகன் வசம் விட்டு விட்டு கதைகளுக்கு பின்னால் ஒளிந்து கொள்வான் எழுத்தாளன் ஆனால் இந்த கதையின் ஆரம்பமே கதையில் இறுதியில் கதாசிரியரின் பொருத்திப்பார்த்தலில் இருந்து ஆரம்பித்து கதை முடிந்ததற்கு பிறகும் அதன் நீட்சி நம்மில் ஏற்படுத்தும் அதிர்வுகளில் காணலாம்.அப்பா சொன்ன நரிக்கதை சிறுமியின் வெண் பட்டு மனதையும் அதற்கு பின்னான நிசப்த நிமிடங்களையும் நம் முன் ஒரு கணம் நிறுத்திப்போகிறது.
கதைகள் ஒவ்வொன்றும் தனக்கு சாதகமாக கதை மாந்தர்களை தன் வசமே வைத்துக்கொள்கின்றன. இது இவர் கதைகளின் மிகப்பெரிய பலம்.ஒரு ஆரம்ப கட்ட இலக்கிய வாசிப்பாளனுக்கு நிச்சயம் ஒரு புதுவித அனுபவத்தை “யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள்” தரும் என்பதில் சந்தேகமில்லை.முழுதுமாக படித்து முடித்ததும் மீள் வாசிப்பிற்கு “யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள்” என்னை மீண்டும் உட்படுத்தவில்லை என்பது ஒரு வருத்தம். குறைகள் வெகு சில இருப்பினும் ஒரு படைப்பாளியின் முதல் சிறுகதை தொகுப்பு இத்தனை நேர்த்தியாகவும் ,அழகியல் கூறுகளின் கோட்பாட்டுவிவாத மதிப்பீடுகளை வெகு இயல்பாய் உருவகமொழியில் திறனாய்வு செய்ததும் நிச்சயம் பாராட்டுக்குரியது. ஆழச்சென்று ரசிக்க நிலா ரசிகனின் யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் ஒரு நல்ல தேர்வு.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
மச்சி.. நீ நல்ல படைப்பாளி. உன் படைப்பு என்னை கவர்ந்த அளவுக்கு விமர்சனம் என்னை கவரல.
LikeLike
//ஆழச்சென்று ரசிக்க நிலா ரசிகனின் யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் ஒரு நல்ல தேர்வு.//
அப்ப என்னை மாதிரி ஆள் எல்லாம் அப்பீட் ஆகணுமா ?
LikeLike
//குறைகள் வெகு சில இருப்பினும் ஒரு படைப்பாளியின் முதல் சிறுகதை தொகுப்பு இத்தனை நேர்த்தியாகவும் ,அழகியல் கூறுகளின் கோட்பாட்டுவிவாத மதிப்பீடுகளை வெகு இயல்பாய் உருவகமொழியில் திறனாய்வு செய்ததும் நிச்சயம் பாராட்டுக்குரியது//
நான் இது உன் ஆரம்பக்கட்ட நூல் விமர்சனம் என்று புரியாமல் நான் சொல்லீட்டனோ?
உன் அளவுக்கு எனக்கு பக்குவம் இல்லாம இருக்கலாம் மச்சி!! சாரி !!
LikeLike
@ புவனேஷ்
பின்னூட்டத்திற்கு நன்றி புவனேஷ்.
//அப்ப என்னை மாதிரி ஆள் எல்லாம் அப்பீட் ஆகணுமா ?//
புரியாமல் படிக்கும் புத்தகங்கள் போல் அல்லாமல் எளிமையான நடையில் அனைவருக்கும் புரியும் படி எழுதியிருக்கிறார் என்பதையே அப்படி சொன்னேன். எதுக்கு அப்பீட்டு படிச்சுட்டு கருத்து சொல்லுங்க நண்பரே 🙂
LikeLike
மிக தேர்ந்த விமர்சணம்.
அத்தொகுப்பை படிக்க தூண்டுகிறது.
எழுத்தாளரோ – கவிஞரோ – இலக்கியவாதியோ
வாசகரால் தான் “அப்படி”யாக அடையாளம் காட்டப்படுகிறார்
நல்ல வாசகரா இருப்பதே பாரபட்சமின்றி விமர்சிப்பது தான்.
அவருக்கும் / உங்களுக்கும் – வாழ்த்துகள்.
LikeLike
பின்னூட்டத்திற்கு நன்றிங்க ஜமால்.
LikeLike
நன்றி அடலேறு 🙂
LikeLike