மேலத்தெரு கள்ளுக்கடை

Posted: ஜனவரி 5, 2010 by அடலேறு in கவிதை, காதல், தமிழ், வலை பக்கம், வாழ்க்கை, Girl, life, love
Tags: , , , , , ,

கவுண்டர் காட்டுக்கு

கதிரறுக்க  போனவளே

மத்தியானம் ஆச்சுதே

இந்த மாம(ன்) மேல

நெனப்பிருக்கா

உச்சி பொழுதாச்சுதே உசுரு

நீ வந்துருவன்னு கண்ணு முழிச்சு

காத்திருக்க படுத்தபடியே

நம்மூட்டு எறுப்புக்குதா

சோறு வெக்கற

போதையில அடிபட்ட காலுக்கு

வருத்தப்படாத மூணே மாசத்துல

சரியாகி போகுமுன்னு

சொல்லிப்புட்டா மருத்துவச்சி

அடிபட்ட நேரத்தவிட என்னக்காக

வேல செஞ்சு நீ வூடு வந்து சாயும் போது

எ(ன்) ஒடம்பு முழுக்க ரணம் கண்டு போச்சுதடி

ஓரே நாளுள உன் நிறம் மங்கி போச்சுதடி

என் உயிர் மங்கி போச்சுதடி

இனி செத்தாலும்  கள்ளு குடிக்க போகமாட்ட

அது கல்லா போன கருவாச்சி கோயிலு

கருப்புசாமி மேல சத்தியம்

உரையாடல் போட்டிக்கவிதை

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

பின்னூட்டங்கள்
  1. மாரி-முத்து சொல்லுகின்றார்:

    புத்தாண்டு மற்றும் வெற்றி பெற வாழ்த்துக்கள்…….
    (நீங்க அனுப்பிய எஸ்.ரா வின் கதை படித்தேன்…good one ….)

  2. தன்னிலவன் சொல்லுகின்றார்:

    நம்மூரு வாசம் காட்டீக்குரீங்க.., நல்லது..!!!
    வாழ்த்துக்கள் அடலேறு
    – தன்னிலவன்
    http://thannilavan.wordpress.com/

  3. நட்புடன் ஜமால் சொல்லுகின்றார்:

    வேல செஞ்சு நீ வூடு வந்து சாயும் போது

    எ(ன்) ஒடம்பு முழுக்க ரணம் கண்டு போச்சுதடி

    ஓரே நாளுள உன் நிறம் மங்கி போச்சுதடி

    என் உயிர் மங்கி போச்சுதடி]]

    இது(வும்) தான் காதல்.

    அருமை.

    • அடலேறு சொல்லுகின்றார்:

      நன்றி ஜமால். கிராமத்து காதலின் வாசனை தான் எவ்வளவு எதார்த்தமானது. 70 வயது ஆனாலும் வாசலில் உக்காந்துருக்கும் தாத்தாக்கும், அடுப்படியில் இருக்கும் பாட்டிக்கும் பேச்சுவார்த்தையே இல்லை என்றாலும் சாப்பாட்டு நேரத்தில் தாத்தா சொல்வார் கவனித்திருக்கிறீர்களா “ அந்த கிழவிக்கும் எதாவது குடுங்க “னு காதலின் உன்னத நிலையாக நான் இதை கூர்மையாக கவனித்ததுண்டு🙂

  4. சிவப்பிரகாசம் சொல்லுகின்றார்:

    கலப்படம் இல்லாத கிராமத்து மொழி…

    காதலின் வெளிப்பாடு… தெளிவாக…

    பாராட்டாம இருக்க முடியல….

    வாழ்த்துக்கள்

  5. Uzhavan சொல்லுகின்றார்:

    கிராம வாசனை.. அருமை.. வாழ்த்துக்கள்

  6. செ.அ. நவாஸுதீன் சொல்லுகின்றார்:

    வெற்றி பெற வாழ்த்துக்கள்

  7. பலா பட்டறை சொல்லுகின்றார்:

    கவிதை அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள்..:))

  8. padma சொல்லுகின்றார்:

    kaathalil vantha manauruthi
    eppadi ellarum unarnthaal vaazhve inbam
    all the best
    padma

  9. sakthi சொல்லுகின்றார்:

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s