உறுதி செய்யப்படாத

இரவொன்றில்

நிகழ்ந்து கொண்டிருக்கிறது

என் மரணம்

மரணத்தின் நீட்சி

அறையெங்கும்

விரவிக்கிடக்கின்றது

நிசப்த இரவுகளின்

மத்தியில் தினம் தினம்

தேடிக்கொண்டிருக்கிறது

மனம் இறப்பதற்கான காரணங்களை

மனதின் மரணத்திற்கும்

உடலின் மரணத்திற்கும்

பிண்டம் மட்டுமே எச்சம்

எச்சத்தை எண்ணிக்கொண்டிருக்கும்

அதிகாலையில் தட்டி எழுப்பி

சொன்னார்கள்

நான் இறந்து விட்டதாய்

Advertisements
பின்னூட்டங்கள்
 1. அஞ்சனா சதுர்வேதி சொல்கிறார்:

  வணக்கம் அடலேறு,

  கவிதையாக பார்க்கும் போது கவிதை அருமை. ஒரு முறை அழை பேசியில் பேசும்போது சொன்னீர்கள் கவிதைகள் என் மனதின் வெளிப்பாடுகள் என்று. இவ்வளவு துக்கரமான சூழ்நிலைக்கு உங்களை எடுத்துச்சென்றது என்ன?

 2. அருண் சொல்கிறார்:

  Hi Adaleru,

  Poem is really good. however as a knowing person i couldn’t accept this. Why writing such a emotional lines about death and all.

 3. Madhan(HSBC Gurgon) சொல்கிறார்:

  டேய மச்சா,

  என்ன ஆச்சு?

 4. பலா பட்டறை சொல்கிறார்:

  நேற்றைய இரவு எனக்கும் அப்படித்தான்..:))

 5. Soundariya சொல்கிறார்:

  Hi,

  Please dont write like this. we hate this.

 6. Neeja சொல்கிறார்:

  Nice Lines.

 7. மரகதன் சொல்கிறார்:

  கவிதை அருமை

 8. லகர தமிழச்சி சொல்கிறார்:

  அட்லேறு,
  உங்கள் வலை பக்கத்தில் இருந்து கற்றுகொண்ட வார்த்தை தான் லகர தமிழச்சி நன்றி அதற்கு. இத்தனை நாட்கள் பின்னுடமிடவில்லை காரணம் ஒரு ரசிகையாக எனக்கு கவிதையின் எழுத்துக்கள் போதும் என்ற என் மன கோட்பாடுதான். எதற்கு இந்தமாதிரியான உண்ர்வு வரிகள். காதல் தோல்வியா?

 9. nanrasitha சொல்கிறார்:

  அருமையான வரிகள்

 10. kalee சொல்கிறார்:

  வாழ்க்கையின் பல பகுதிகளை பற்றி கவிதை எழுதி இருக்கிறீர்கள். மரணமும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் அதனால் இதுவும் ஒரு அழகான உணர்வு வெளிப்பாடாகவே எனக்கு தெரிகிறது. மற்றபடி கவிதை அற்புதம்.

  P.S நிஜமான சோகம் ஏதேனும் இருந்தால, உண்மையான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 11. அடலேறு சொல்கிறார்:

  பின்னூட்டமிட்ட அஞ்சனா சதுர்வேதி ,அருண்,Madhan(HSBC Gurgon),பலா பட்டறை,Soundariya,Neeja,மரகதன்,லகர தமிழச்சி,nanrasitha,kalee அனைவருக்கும் நன்றிகள்.

 12. karthikeyan சொல்கிறார்:

  “மனதின் மரணத்திற்கும்

  உடலின் மரணத்திற்கும்

  பிண்டம் மட்டுமே எச்சம்”

  வைர வரிகள்

 13. KK சொல்கிறார்:

  Hi Adaleru

  Some how the starting lines la irrukka Gethu isn’t there in the lines following it…!

  The poem can have been even more effective…!

  This my thought…thanks for a nice read! 🙂

 14. சஞ்சயன் சொல்கிறார்:

  “அதிகாலையில் தட்டி எழுப்பி
  சொன்னார்கள்
  நான் இறந்து விட்டதாய்”

  எனது வாழ்க்கையை நேரில் பார்க்காமல் எப்படி இந்த உண்மையை கண்டறிந்தீர்கள்? பலே கில்லாடி தான் நீங்கள்.

  அருமையான கவிதை நண்பரே. தொடருங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s