ஞாயிறு காலையில்

நான் சுடும் ஒவ்வொரு தோசைக்கும்

ஒரு முத்தம் என

மூன்று முத்தம் மட்டும் தரும்

கொடுமைகாரி நீ.

——-0O0———-

எப்போதோ நீ எழுதிய

என் பேனாவில்

பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்

உன் வாசனையை

——-0O0———-

எதற்கு பார்த்தாய் என்கிறாய்

சும்மாதான் என்கிறேன்

என்னை சும்மா சும்மா பாத்திட்டே

இருக்க மாட்டயா டா

என காதல் பேசி

திரியும் இந்த அழகு

பிசாசை என்ன செய்வது?

——-0O0———-

மோகமுற்ற பொழுதுகளில்

குகுருப்பாய்

ஒரு பார்வை பார்த்து

மடியில் கிடத்தி

கொஞ்சுவாயே

அதில் சுருண்டு விழுந்து

மரித்து போனவன் நான்

——–0O0———-

எனக்கு இரண்டே ஆசை தான்

உன்னை காதலிப்பது

மற்றும்

உன்னை இன்னும்

அதிகதிமாய் காதலிப்பது

——-0O0———-

உன்னை வம்புக்கிழுத்து

கோபமுட்டி மன்னிப்பு

கேட்கும் இரவுகளில்

வழிந்த கண்ணீரை

துடைத்துக்கொண்டு

இறுக்கி அணைப்பாயே

அதில் உடைந்து போனவன் நான்

——-0O0———-

காலை முதல்

பேசாமல் சண்டைபிடித்து

சாயந்திரம் வீடு திரும்பி

போன் போட்டு

சும்மானாச்சுக்கும் கால் பண்ண

என்று சொல்லும் போதே

கொட்டி விடுகிறது

உன் காதலெல்லாம்

——-0O0———-

சிரித்துக்கொண்டே சிறைபிடிக்கும்

சிறகற்ற யட்சி நீ

தவித்துக்கொண்டே சிறைபடும்

வீழ்த்தப்பட்ட யட்சன் நான்

——-0O0———-

இரவில் இறுக்கி முடிய விழிகளுக்குள்

புகுந்து நர்த்தனம்   ஆடிவிட்டு

ஒன்னும் தெரியாத மாதிரி

சாலையில் என்னை கடந்து

செல்கிறாய்

——-0O0———-

நீ காட்டும் உதட்டுச்சுழிப்பில்

கவிதை பொறுக்கிக்கொண்டிருக்கும்

எத்தன் நான்

——-0O0———-

என்னை உன கூடவே வெச்சுக்க்கோடா

என சொல்லும் ஒவ்வொரு கணமும்

என்னை உனக்குள் வைத்துகொள்கிறாய்

Advertisements
பின்னூட்டங்கள்
 1. Naresh Kumar சொல்கிறார்:

  டேக் ல ஸ்கூல் டேஸ்லாம் வருது? அப்பவேவா???

  சமீபத்துல ஒரே காதல் வாசனையா இருக்கே? எங்கியாவுது மாட்டிகிட்டீங்களா? இல்லை பொண்ணு பாக்குறாங்களா???

  • அடலேறு சொல்கிறார்:

   பின்னூட்டத்தில எப்படி மடக்குவது என்று உங்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். சும்மா தோன்றியது அவ்வளவு தான் நண்பா, அதற்குள்ளாக இத்தனை கேள்விகளா??? 🙂

 2. ஜி எஸ் ஆர் சொல்கிறார்:

  \\வழிந்த கண்ணீரை

  துடைத்துக்கொண்டு

  இறுக்கி அணைப்பாயே

  அதில் உடைந்து போனவன் நான்\\

  நல்லா இருக்கு நண்பா

  அது என்ன யட்சன் , யட்சி புரியவில்லையே

  வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்

 3. கவிதை காதலன் சொல்கிறார்:

  வாவ்.. எல்லாமே அட்டகாசமா இருக்கு… இன்னும் சில படங்கள் சேர்த்து இருந்தீங்கன்னா படைப்புக்கு இன்னும் மெருகு சேர்த்திருக்கும்

  • அடலேறு சொல்கிறார்:

   கையில் காதலை ஏந்திக்கொண்டிருக்கும் படம் மனதை என்னமோ செய்வது போல இருந்தது அதனால் தான் பிரசூரித்தேன். கருத்துக்கு நன்றிங்க கவிதை காதலன்., பெயரிலேயே கவிதையையும் காதலையும் வைத்திருக்கிறீர்கள். அழகு

 4. padmahari சொல்கிறார்:

  அடடே…..அடலேறு,
  பிரமாதம். பின்னிட்டே போ….!!
  படம், வரிகள் எல்லாமே அழகா இருக்கு. வாழ்த்துக்கள் நண்பா….!

  http://padmahari.wordpress.com

 5. மாரி-முத்து சொல்கிறார்:

  நீண்டு கொண்டே செல்கிறது காதல் சரம்..
  கலக்கல் அடலேறு…

 6. படைப்பாளி சொல்கிறார்:

  நச்சின்னு இருக்கு நண்பா..

 7. இரவுப் பறவை சொல்கிறார்:

  தோசைய சின்னதா சுட்டு இருக்கலாமே அடலேறு…….
  சரி விடுங்க டின்னெர் ல பாத்துக்கலாம்….

 8. Kalee சொல்கிறார்:

  எனக்கு என்னமோ உங்கள் (?) காதலிக்கு தமிழ் தெரியாதோ என்று தோன்றியது, அதனால் என் சிறு கிறுக்கல் இதோ.

  ———-
  எனக்கு தமிழ் மட்டுமே நன்றாக
  தெரியுமென்பதால் மட்டுமல்ல,
  உனக்கு தமிழ் தெரிந்திருந்தால்
  என் கவிதையை எவ்வளவு ரசிப்பாய் என்ற
  என் நினைப்புமே
  என் கவிதையை மேலும் அழகாக்குகின்றன.

  என்றாவது ஒரு நாள்,
  உன்னை நினைத்துதான் நான் இந்த கவிதையை எழுதினேன் என்று
  அறியாமல் போய் விடுவாயா என்ன?

 9. Naresh Kumar சொல்கிறார்:

  //சும்மா தோன்றியது அவ்வளவு தான் //

  எனக்கும் டேகைப் பார்த்தவுடன் சும்மா தோன்றியது!!! அவ்வளவுதான்….

  இருந்தாலும் கொஞ்சம் டவுட்டாதான் இருக்கு!!!

 10. Jana சொல்கிறார்:

  ஆஹா..நண்பா..வரவர உங்கள் கவிதைகளில் உணர்வுகள் கொப்பளிக்கின்றனவே…கண்டிப்பாக அனுபவங்களும் தற்போது சேர்ந்துகொண்டுள்ளது
  என நினைக்கின்றேன்.. அப்படியா?

 11. kalee சொல்கிறார்:

  பேருக்கு ஒன்று இருக்கு, ஆனால் ஏதும் பெரிதாக எழுதுவது இல்லை, நண்பர்கள் எழுதும் விசயங்களை படிப்பதிலேயே அதிக மகிழ்ச்சி.

  காதல்தான் காதலியை விட மிக அழகு.
  அதனாலதான் காதலோடு தொடர்புடைய எல்லாமே மிக அழகாக தெரிகிறது.
  காதலி சேர்ந்தாலும் சரி பிரிந்தாலும் சரி, காதலை மட்டும் மனதை விட்டு பிரிக்காதீர்கள்.
  வாழ்க்கை என்றும் அழகாக தெரிய காதலே காதலியை விட முக்கியம்.
  காதல் மட்டும் இருந்தால் காதலி மட்டுமல்ல கடவுளும் தேடி வருவான்.

  http://kaleejay.blogspot.com/

 12. uumm சொல்கிறார்:

  shhoo…sweet adaleru ..

 13. Ashok சொல்கிறார்:

  Awesome !!! Touching one !!! All the best !!!

 14. அடலேறு சொல்கிறார்:

  பின்னூட்டத்திற்கு நன்றிங்க படைப்பாளி,காளி, உமா மற்றும் அசோக்.
  அலுவலகத்தில் அதுகமான வேலை பளு அதனால் தான் தகுந்த நேரத்தில் பின்னூட்டத்தை மட்டறுக்க முடியவில்லை.

 15. amulu சொல்கிறார்:

  “”காலை முதல்

  பேசாமல் சண்டைபிடித்து

  சாயந்திரம் வீடு திரும்பி

  போன் போட்டு

  சும்மானாச்சுக்கும் கால் பண்ண

  என்று சொல்லும் போதே

  கொட்டி விடுகிறது

  உன் காதலெல்லாம்””

  wowww…… all kavithaigal very very very nice… specially i like this… when i read this kavithaigal i feel soo happy… awesome… very very nice im enjoy.. thank you so much for this….

 16. Shri ப்ரியை சொல்கிறார்:

  அழகான வார்த்தை நயம்…..

 17. Anitha சொல்கிறார்:

  nanba ,
  un mukavari ariyana da.un varikal ……..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s