ஏப்ரல், 2010 க்கான தொகுப்பு

கருவரையில் வெளியேறி

இருளின் நேர் கோட்டில் மிதக்கிறது

ஆதாமின் எச்சம்

எல்லா உடல் விற்பவளின்

டயரி குறிப்புகளும் தாங்கி நிற்கும்

எச்சத்தின் விளிம்பு நிலை.

பின் மாலை பொழுதுகளில்

மரணித்தவனை எழுப்பிக்கேட்டால்

ஒரு வேளை தெரியலாம்

பாவத்தின் அமைப்பு சாரா கொள்கையும்

கடவுளின் இரண்டாம் வருகையும்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements

பூவின் இதழ்களில்

பதித்துத் தருகிறேன்

எனதன்பின் ஸ்பரிசங்களை

முகர்ந்து பார்த்தான்

கட்டிக்கொண்டான், குதுகலித்தான்

அவன் உலகமே நான் என

என்னை கிறங்கடித்தான்

முன்னெப்போதும் இல்லாதளவு

இருள் படிந்த கூதல் காற்றில்

மகரந்த வாசனை கேட்டு

அடம்பிடித்த அன்று

தெருமுனை விலங்காய்

மாறியது அவனுடல்

காமமிகுதி அவனுடல் கலக்க

செயவதறியாது பேதை நான்

விக்கித்த கணத்தில்

என்னிடமே கொடுத்துச்சென்றான்

இரத்தம் படிந்த

எனதன்பின் பூவிதழை

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

நிலா ரசிகனின் பாவனைப்பெண் கவிதையை தனிமையில் அமர்ந்து  நேற்று படித்தேன். கவிதை வரிகளில் என்னமோ வசியம் வைத்திருக்கிறார்  இவர். படித்ததும் பிடித்துப்போன கவிதை இங்கே.

அன்பின் கண்ணாடி

தெரிந்தே நிகழவிருக்கும் பிரிவை
ஒரு மழைத்துளியாக்கி உன்னிடம் கொண்டுவருகிறேன்.
கடலடியில் நகரும் ஆழ்ந்த மெளனத்துடன்
என்னை எதிர்கொள்கிறாய்.
அறுந்து விழுகின்ற சொற்களுடன்
தடுமாறும் என் கரம் பற்றுகிறாய்.
உனக்கென நான் கொணர்ந்த
மழைத்துளி கடலாகி நம்மைச் சூழ்கிறது.
தெரிந்தே தவற விடுகிறோம்
நம் மகத்தான அன்பின்
கண்ணாடியை.
உனக்கும் எனக்கும் இடையில்
மெல்ல எழுகிறது
காலத்தின் கறுப்புச்சுவர்.
பாவனைப்பெண்

மலர்களால் அலங்கரிக்கப்பட்டிக்கும்
அறைக்குள் உடல் உருவும் வாசத்துடன்
நுழைகிறாய்.
கிளையிலிருந்து விடுபடும் இலையென
என்னிலிருந்து நீங்குவதான பாவனையுடன்
கைகுலுக்குகிறாய்.
பின்,
நடனமிட துவங்குகிறாய்.
மிச்சமின்றி சிகப்புநிற திரவத்தை அருந்துகிறாய்.
சந்தோஷத்தின் உச்சத்தில் நிற்கிறாய்.
அனைத்தும் முடிந்து
வாசற்கதவை நெருங்கும் தருணத்தில்
சத்தமிட்டு அழுகிறாய்
ஒன்றும் நடந்துவிடாத
உன் பாவனைகளை
கழுவுகிறது பரிசுத்தமான
கண்ணீர்த்துளிகள்.
இனி,
சந்தோஷமாக விடைபெறலாம்
நீ.

தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.
மற்றும்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
இணைந்து நடத்தும்
POETRY WORKSHOP
கவிதைப் பட்டறை

நீங்கள் ஓர் கவிஞரா? முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா? அல்லது கவிதை ஆர்வலரா? இல்லை கவிதை வாசகரா? எதாவது வலைத்தளத்தின் இலக்கிய பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு கவிதை பட்டறையை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடத்த இருக்கிறது. (முகவரி – 31 பொன்னி, குமாரசாமி ராஜா சாலை, அடையாறு, சென்னை – 600 028).

இரண்டாயிர வருட பாரம்பரியம் உள்ள தமிழ் கவிதையின் பல்வேறு போக்குகளையும் செயல்பாடுகளையும் விவாதிக்கும் பயிலரங்காக இது அமையும். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் நிகழ்வாக இது அமையும். கவிதை மொழிபெயர்பாளர் வெ.ஸ்ரீராம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன் போன்ற விமர்சகர்களும் பங்கேற்கக்கூடும். இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் கவிஞர் பெருமக்களும், கவிதை ஆர்வலர்களும் http://www.tamilsangamamonline.com
இணையதளத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மே மூன்றாவது வாரத்தில் நான்கு நாட்கள் இந்நிகழ்வு நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் / செயலாளர் கவிஞர் இளையபாரதி தெரிவித்துள்ளார்.

மேலும் விபரங்களுக்கு திருமதி புவனேஸ்வரியை 2493 7471 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.