நிலா ரசிகனின் பாவனைப்பெண் கவிதையை தனிமையில் அமர்ந்து நேற்று படித்தேன். கவிதை வரிகளில் என்னமோ வசியம் வைத்திருக்கிறார் இவர். படித்ததும் பிடித்துப்போன கவிதை இங்கே.
அன்பின் கண்ணாடி
தெரிந்தே நிகழவிருக்கும் பிரிவை
ஒரு மழைத்துளியாக்கி உன்னிடம் கொண்டுவருகிறேன்.
கடலடியில் நகரும் ஆழ்ந்த மெளனத்துடன்
என்னை எதிர்கொள்கிறாய்.
அறுந்து விழுகின்ற சொற்களுடன்
தடுமாறும் என் கரம் பற்றுகிறாய்.
உனக்கென நான் கொணர்ந்த
மழைத்துளி கடலாகி நம்மைச் சூழ்கிறது.
தெரிந்தே தவற விடுகிறோம்
நம் மகத்தான அன்பின்
கண்ணாடியை.
உனக்கும் எனக்கும் இடையில்
மெல்ல எழுகிறது
காலத்தின் கறுப்புச்சுவர்.
பாவனைப்பெண்
மலர்களால் அலங்கரிக்கப்பட்டிக்கும்
அறைக்குள் உடல் உருவும் வாசத்துடன்
நுழைகிறாய்.
கிளையிலிருந்து விடுபடும் இலையென
என்னிலிருந்து நீங்குவதான பாவனையுடன்
கைகுலுக்குகிறாய்.
பின்,
நடனமிட துவங்குகிறாய்.
மிச்சமின்றி சிகப்புநிற திரவத்தை அருந்துகிறாய்.
சந்தோஷத்தின் உச்சத்தில் நிற்கிறாய்.
அனைத்தும் முடிந்து
வாசற்கதவை நெருங்கும் தருணத்தில்
சத்தமிட்டு அழுகிறாய்
ஒன்றும் நடந்துவிடாத
உன் பாவனைகளை
கழுவுகிறது பரிசுத்தமான
கண்ணீர்த்துளிகள்.
இனி,
சந்தோஷமாக விடைபெறலாம்
நீ.
awesome da…
LikeLike
Thanks de
LikeLike