மே, 2010 க்கான தொகுப்பு

 

நீண்ட ஈரமான கூதல் காற்று

தேகம் நனைக்கும் பொழுதில்

துரத்து ரயிலோசை

காற்றில் கரைந்து போகிறது

பள்ளி முடிந்து திரும்பும்

மாலை நேர சிறுமிகளின்

கைகளில் பட்டு தெறிக்கிறது

வருடத்தின் முதல் மழைத்துளி

சலசலக்கும் ஆற்று மணல் வெளியில்

யாருமற்ற தனிமையில் நானிருக்கும்

இந்த பொழுதில் சொல்லியிருக்கலாம்

நீ நமது பிரிவின் முதல் வரியை

Advertisements