தேவதையின் பிறந்தநாள்

Posted: ஜூன் 22, 2010 by அடலேறு in Adaleru, அடலேறு, கவிதை, காதல்
குறிச்சொற்கள்:, , , , , ,
 
 
நீயோ ”பிறந்தநாளை”
கொண்டாடிக்கொண்டிருக்கிறாய்
நீ பிறந்ததற்காக அந்தநாளை 
மற்ற நாட்கள்
கொண்டாடிக்கொண்டிருப்பது
தெரியுமா உனக்கு
***************
பிறந்தநாள் அன்று
என்னை பார்ப்பதற்காக
பூக்களை  சூடிக்கொள்கிறாய்
பூக்களோ உன் தலையில்
ஏறி விட்ட மமதையில்
உனக்கு என்னை விட
பூக்கள் மீது தான்
காதல் அதிகமென 
வம்புக்கிழுக்கின்றன என்னை 

***************
கடற்கரையில் பிறந்தநாள்
கொண்டாட வேண்டும் என்றாய்.
கடல் அலையை கையிலேந்தி                               
விளையாடிக்கொண்டிருக்கிறாய் நீ
கடலலையோ உன் பாதம் தொட்ட
மகிழ்ச்சியில் மீண்டும் மீண்டும்
அலையலையாக உன் பாதம் தொட
பிரயத்தனம் எடுக்கிறது
இந்த விளையாட்டை  கண்டும் காணாதவனாக 
உன் கை பிடித்தபடி நான்

***************
அள்ளி கையிலேந்தி
நெற்றி முகர்ந்து முத்தமிட்டு
உனக்கொரு பிறந்தநாள்
வாழ்த்து சொல்ல வேண்டும்
***************
நீ பிறந்த அன்று
தான் வானில்
அந்த வெள்ளி நட்சத்திரம்
தோன்றியதாக
உன் பாட்டி சொன்னார்கள்
***************
உன் பிறந்தநாளுக்காக
காகிதத்தில் கவிதை எழுதி
எடுத்து வந்தேன் நான்!!!
காகிதக்கவிதையை விடு
முத்தக்கவிதை தெரியுமா
என்றாய்!! தெரியாது என்றேன்
இது தான் முத்தக்கவிதை
என சொல்லி முன்று
முத்தம் கொடுத்து விட்டு
ஓடிப்போனாய் !!!
முத்தக்கவிதையாய் மாற்ற  

சொல்லி  பேனாவிடம்
சண்டை போட்டது
நான் எழுதிய பிறந்தநாள் கவிதை.
***************

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. நிலாரசிகன் சொல்கிறார்:

  //அள்ளி கையிலேந்தி
  நெற்றி முகர்ந்து முத்தமிட்டு
  உனக்கொரு பிறந்தநாள்
  வாழ்த்து சொல்ல வேண்டும்//

  Nice one Adaleru.

  Like

 2. Razeeth சொல்கிறார்:

  Hi Adaleru,

  This poem(s) are really awesome man!!!!! Anyway from now on im also going to try out write this type of poems. when i read this type of poems i think if i were a poet but in reality we are not sure it ll give u the same feel!!!!!!!!!!!

  Regards
  Razeeth

  Like

 3. படைப்பாளி சொல்கிறார்:

  அருமை..அருமை..

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s