எப்படியும் தொடங்கி விடுகிறது
நீயில்லா தனிமையின்
இரவுகளும்
அதன் பின்னான வெறுமையின்
வியர்வை துளிகளும்
உன் அளவான சிரிப்பும்
பேருந்து பயணங்களில்
தோள் சாய்ந்து தூங்குவதும்
நீ வைக்கும் தலைகீழ் ” ப “
வடிவிலான மல்லிகை பூவும் ,
உன் நினைவுகளும், உனக்கான
காதலும் இன்னும் நிறம்
மாறாமல் இருக்கின்றன.
நீ விட்டு சென்ற பிரிவின்
வலியை பின்னிரவுகளில்
நனைந்து போன என்
தலையணையை கேட்டுப்பார்.
உனக்கான காதலும் கவிதையும்
இன்னும் பிரிக்கப்படாமலேயே உள்ளது
குடைக்குள் இருந்து மழையை
நனைக்கும்  உன்னுடன்
மழையில் நனைந்து
காதல்  பேச ஆசை
என்  காதல்  கேட்க
எப்போது வருவாய்
என் லகர தமிழச்சி
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Advertisements
பின்னூட்டங்கள்
 1. படைப்பாளி சொல்கிறார்:

  ////குடைக்குள் இருந்து மழையை
  நனைக்கும் உன்னுடன்
  மழையில் நனைத்து
  காதல் பேச ஆசை////
  வாவ்…கலக்கிட்டீங்க நண்பா

  Like

 2. அடலேறு சொல்கிறார்:

  நன்றிங்க நண்பா

  Like

 3. adhithakarikalan சொல்கிறார்:

  நல்ல கவிதை

  Like

 4. படைப்பாளி சொல்கிறார்:

  தோழமை தின வாழ்த்துக்கள் நண்பா

  Like

 5. tamilachi சொல்கிறார்:

  மிக நன்று.
  என் கவிதைகளை எனக்கு ஞாபகப்படுத்துகிறது.

  வாழ்க! “உங்கள் லகர தமிழச்சி”…

  Like

 6. gopi சொல்கிறார்:

  பேருந்து பயணங்களில்
  தோள் சாய்ந்து தூங்குவதும்
  நீ வைக்கும் தலைகீழ் ” ப “
  வடிவிலான மல்லிகை பூவும் ,
  உன் நினைவுகளும், உனக்கான
  காதலும் இன்னும் நிறம்
  மாறாமல் இருக்கின்றன.

  etharthamana varihal

  Like

 7. rinman சொல்கிறார்:

  well done. prectically proved??

  Like

 8. Bhavani சொல்கிறார்:

  neengal unarum athanai valiyum pennukkum undu…………….
  athil pennai kurikkum sila varigalai neekinal pennukkana pirivin valiyum athuve……..

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s