கடைசி ஆண்

கருஞ்சிவப்பான இரவில்

தீக்கிரையாக்கினாள் மதுரையை

கையில் சிலம்பு தகிக்கிறது

ஆண்களற்ற உலகமாய் மாற சாபமிடுகிறாள்

விதை கிழிபட்டு

மரிக்கின்றனர் அனைவரும்

படக்கென போர்வை நீக்கியவள்

விந்து வற்றிப்போன இரவில்

என்னை புணர சொல்கிறாள்

நானோ இப்பூமியின்

கடைசி ஆண்

8 thoughts on “கடைசி ஆண்

Add yours

  1. இந்த வார்த்தைகள் ஒரு தீர்க்க தரிசனமாக தெரிகிறது வரபோவதை முன்கூட்டியே சொல்லகூடிய திறம் கவிஞனுக்கு உண்டு அந்த வகையில் உங்கள் வரிகள் எதிர்காலத்தின் நிலையை விளக்குகிறது
    “விதை கிழிபட்டு
    மரிக்கின்றனர் அனைவரும்”

    iபெண்ணை பெண்ணாக மதிக்காத ஆணாதிக்க சமூகம் மாறபோவதில்லை

    உலகம் அழிய போகிறது என்கிறார்களே அதன் ஆரம்பம் இதுதான் போல

    உங்கள் வரிகள் கண்டு அதிர்ந்து போனாலும் அதன் ஆழம் புரிகிறது அதிலும் இவை ஒரு ஆணின் உள்ளிருந்து முளைததி கண்டு ஆச்சர்யமும் மேலோங்குது

    Like

காளி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Create a free website or blog at WordPress.com.

Up ↑