கொலுவில் வீற்றிருக்கிறாள் காத‌லி

Posted: ஒக்ரோபர் 10, 2010 by அடலேறு in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், பெண், முத்தம், festival
குறிச்சொற்கள்:, , , , , ,

அழகான கொலு பொம்மைகளை
பார்த்து கை தட்டி
குதுகலிக்கிறாய் நீ
உன்னை ஏன் கொலுவில்
வைக்கவில்லை என்று
குழம்பிப்போகின்றன பொம்மைகள்
–0@0–

நவராத்திரி கொலுவில்
தேவதை பொம்மைகள்
வைக்கிறார்களாம்.
பிறகு உன்னை எப்படி
விட்டு வைத்தாள்
ஜான‌கி ஆண்டி

–0@0–

ந‌வாராத்திரி என்றாலே
திருவிழாவும்,சுண்டலும்.
சுண்டல் என்றாலே
கொலுவும்,பொம்மைக‌ளும்.
மொம்மைக‌ள் என்றாலே
நீயும், உன் ப‌ட்டாம்பூச்சி
சுடிதாரும் தான் வ‌ந்து
நிற்கிற‌தென் ம‌ன‌தில்

–0@0–

தேவ‌தைக‌ள் எல்லாம் வைத்த‌
கொலுவில் அழ‌கான பொம்மையை
அப்ச‌ர‌ஸ் தேவ‌தை தொட்ட‌தால்
உயிர் பெற்று வ‌ந்த‌வ‌ள், ‘நீ’
என்று தான் இன்ன‌மும் ந‌ம்புகிறேன்

–0@0–

அந்த‌ மூன்றாவ‌து வ‌ரிசை
மொம்மையை எடுத்து
பொட்டு வைத்த பின் முத்த‌மிட்டாயே
அப்போது தான் தோன்றிய‌து
பேசாம‌ல் பொம்மையாய்
பிற‌ந்திருக்க‌லாம் என்று

–0@0–

ஒவ்வொரு பொம்மையாய் எடுத்து
இது முல்லா பொம்மை
இது காயத்ரி மொம்மை
இது உழ‌வ‌ன் பொம்மை
என்று சொல்லிக்கொண்டிருந்தாய்
பொம்மைக‌ள் எல்லாம்
உன்னைபார்த்து
முணுமுணுத்துக்கொண்ட‌து
இவ‌ள் தேவ‌தை மொம்மை என்று

–0@0–

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. குந்தவை சொல்கிறார்:

  ஆகா… ரெம்ப அருமையா எழுதியிருக்கீங்க. ரசித்தேன்.
  உங்க கொலுவில் எல்லா பொம்மை(கவிதை)யும் அழகாக இருக்கின்றது.

  Like

 2. எஸ். கே சொல்கிறார்:

  இனிமையான கவிதை! அருமை!

  Like

 3. படைப்பாளி சொல்கிறார்:

  அருமை..அருமை நண்பா..

  Like

 4. மாரி-முத்து சொல்கிறார்:

  அடலேறு is back
  எல்லாம் அருமை..

  Like

 5. Rajasekaran சொல்கிறார்:

  nanba,
  Arumaiyana varikal, aanal antha bommai yaar? eanaku therintha bommai namathu school tamil teacher. nabagam iruka maachi…. irukum, irukanum

  Like

 6. Anjana சொல்கிறார்:

  //ஒவ்வொரு பொம்மையாய் எடுத்து
  இது முல்லா பொம்மை
  இது காயத்ரி மொம்மை
  இது உழ‌வ‌ன் பொம்மை
  என்று சொல்லிக்கொண்டிருந்தாய்
  பொம்மைக‌ள் எல்லாம்
  உன்னைபார்த்து
  முணுமுணுத்துக்கொண்ட‌து
  இவ‌ள் தேவ‌தை மொம்மை என்று//

  what a man you are.. wow awesome feel, Cant even take my eyes from this lines. really stunning lines.

  Like

 7. vaarththai சொல்கிறார்:

  //அடலேறு is back//

  அது….

  Like

 8. அன்பு சொல்கிறார்:

  //மொம்மைக‌ள் என்றாலே
  நீயும், உன் ப‌ட்டாம்பூச்சி
  சுடிதாரும் தான் வ‌ந்து
  நிற்கிற‌தென் ம‌ன‌தில்
  //

  wow.. 🙂

  கவிதையில் காதலை கரைச்சு ஊத்தியிருக்கீங்க..

  Like

 9. padma சொல்கிறார்:

  காதல் ராத்திரியில் காதலியின் கொலுவேற்றம்

  Like

 10. Nasrul Islam சொல்கிறார்:

  NEE IRUPADHAL DHAN IRUKUM RATHAM ELLAM IDHAYAM THEDIYE VARUGIRATHU… enaku kuda kavidhai eludha thonudhu,..
  Alagana kavidhaigal

  Like

 11. Baskar Jagannathan சொல்கிறார்:

  hey… who s that doll ?? romba nalla iruku da.. keep going..

  Like

 12. jo சொல்கிறார்:

  what happen..no more updates..its been 2 months from last update..

  Like

 13. kovaimusarala சொல்கிறார்:

  உங்களோடு சேர்ந்து பொம்மைகளும் எங்களை பொம்மையாகவே பார்கின்றன ஆனால்
  நாங்கள் உணர்வுள்ள ஒரு உயிராக நீங்கள் பார்க்கபடுவததான் விரும்புகிறோம்

  எப்படியாயினும் பெண்ணை மதிக்கும் ஒரு ஆணை பார்கிறேன் !!!!!!!!!!!!

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s