கொலுவில் வீற்றிருக்கிறாள் காத‌லி

அழகான கொலு பொம்மைகளை
பார்த்து கை தட்டி
குதுகலிக்கிறாய் நீ
உன்னை ஏன் கொலுவில்
வைக்கவில்லை என்று
குழம்பிப்போகின்றன பொம்மைகள்
–0@0–

நவராத்திரி கொலுவில்
தேவதை பொம்மைகள்
வைக்கிறார்களாம்.
பிறகு உன்னை எப்படி
விட்டு வைத்தாள்
ஜான‌கி ஆண்டி

–0@0–

ந‌வாராத்திரி என்றாலே
திருவிழாவும்,சுண்டலும்.
சுண்டல் என்றாலே
கொலுவும்,பொம்மைக‌ளும்.
மொம்மைக‌ள் என்றாலே
நீயும், உன் ப‌ட்டாம்பூச்சி
சுடிதாரும் தான் வ‌ந்து
நிற்கிற‌தென் ம‌ன‌தில்

–0@0–

தேவ‌தைக‌ள் எல்லாம் வைத்த‌
கொலுவில் அழ‌கான பொம்மையை
அப்ச‌ர‌ஸ் தேவ‌தை தொட்ட‌தால்
உயிர் பெற்று வ‌ந்த‌வ‌ள், ‘நீ’
என்று தான் இன்ன‌மும் ந‌ம்புகிறேன்

–0@0–

அந்த‌ மூன்றாவ‌து வ‌ரிசை
மொம்மையை எடுத்து
பொட்டு வைத்த பின் முத்த‌மிட்டாயே
அப்போது தான் தோன்றிய‌து
பேசாம‌ல் பொம்மையாய்
பிற‌ந்திருக்க‌லாம் என்று

–0@0–

ஒவ்வொரு பொம்மையாய் எடுத்து
இது முல்லா பொம்மை
இது காயத்ரி மொம்மை
இது உழ‌வ‌ன் பொம்மை
என்று சொல்லிக்கொண்டிருந்தாய்
பொம்மைக‌ள் எல்லாம்
உன்னைபார்த்து
முணுமுணுத்துக்கொண்ட‌து
இவ‌ள் தேவ‌தை மொம்மை என்று

–0@0–

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

25 thoughts on “கொலுவில் வீற்றிருக்கிறாள் காத‌லி

Add yours

    1. ஹா ஹா ஹா நல்லா நியாபகம் இருக்கு ராஜா, ஆசிரியர்களுக்கு வைக்கும் பட்டப்பெயர்களில் தான் அவர்களை பழிதீர்ப்பதாக நினைத்துக்கொண்ட நாட்கள் அவை.

      Like

  1. //ஒவ்வொரு பொம்மையாய் எடுத்து
    இது முல்லா பொம்மை
    இது காயத்ரி மொம்மை
    இது உழ‌வ‌ன் பொம்மை
    என்று சொல்லிக்கொண்டிருந்தாய்
    பொம்மைக‌ள் எல்லாம்
    உன்னைபார்த்து
    முணுமுணுத்துக்கொண்ட‌து
    இவ‌ள் தேவ‌தை மொம்மை என்று//

    what a man you are.. wow awesome feel, Cant even take my eyes from this lines. really stunning lines.

    Like

  2. //மொம்மைக‌ள் என்றாலே
    நீயும், உன் ப‌ட்டாம்பூச்சி
    சுடிதாரும் தான் வ‌ந்து
    நிற்கிற‌தென் ம‌ன‌தில்
    //

    wow.. 🙂

    கவிதையில் காதலை கரைச்சு ஊத்தியிருக்கீங்க..

    Like

    1. //கவிதையில் காதலை கரைச்சு ஊத்தியிருக்கீங்க..//

      இதுவே ஒரு கவித்துவமாதான இருக்கு. முதல் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றிங்க நண்பா

      Like

  3. உங்களோடு சேர்ந்து பொம்மைகளும் எங்களை பொம்மையாகவே பார்கின்றன ஆனால்
    நாங்கள் உணர்வுள்ள ஒரு உயிராக நீங்கள் பார்க்கபடுவததான் விரும்புகிறோம்

    எப்படியாயினும் பெண்ணை மதிக்கும் ஒரு ஆணை பார்கிறேன் !!!!!!!!!!!!

    Like

பின்னூட்டமொன்றை இடுக

Create a free website or blog at WordPress.com.

Up ↑