நவம்பர், 2010 க்கான தொகுப்பு

எப்போதும் கவிதைகளை
இரவிலேயே ஏன் பிடிக்கிறாய்
என்றால் தூரிகா.
இரவுகளில் தான் அலைந்து கொண்டிருக்கின்றன
தனித்து விடப்பட்ட வார்த்தைகள் என்றேன்.
தூரத்தில் அகால ஓலமிட்டு
கொண்டிருந்த பறவையின் சிறகில்
மென் முத்தமிட்டு பறக்கவிட்டாள்,
அது நிராகரிப்பின் வார்த்தைகளை
உதிர்த்தபடியே சென்றது
முடிவற்ற நீண்ட இரவில்.

-0O0-

வெறுமையால் நிரம்பிய வார்த்தையில்
இருந்து ஒரு துளி எடுத்து வந்தேன்
துளி கடலென உருப்பெற்றது,
அதை மெல்லிய கரங்களில் ஏந்தி
தன்னுடனே வைத்துக்கொண்டாள் தூரிகா
துளி விலங்கென உருப்பெற்று
அவளுடன் சேர்ந்துகொண்டது
இன்னும் நீங்கள் காணலாம்
அவளை சந்தித்து திருப்புபவர்களின்
முகத்தில்
நிராகரப்பின் வலியும்
வெறுமையின் நீர்த்துளியும

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements