டைடல் பார்க்கில் கடவுள்

Posted: திசெம்பர் 9, 2010 by அடலேறு in அடலேறு, கம்ப்யூட்டர், கவிதை, புனைவு, God
குறிச்சொற்கள்:, , ,

கடவுளை இன்று
“டைடல்பார்க்”கில் சந்தித்தேன்
கோட் சூட் சகிதமாக கையில்
பிளாக் பெரியுடன் லிப்டில்
இருந்து வெளிப்பட்டார்.
ஆச்சர்யம் அடைந்தவனாய்
உங்களிடம் பேச வேண்டும்
என்றதற்கு தற்போது
பிஸியாக இருப்பதாக
சொல்லி செல்போன் நம்பர்
வாங்கிக்கொண்டார்.
கழுத்தில் தொங்கிய நிறுவன
அடையாள அட்டையை காட்டி
பெருமை பட்டுக்கொண்டார்.
இங்கே எப்படி வேலைக்கு
சேர்ந்தீர்கள் என்றதற்கு
சிக்கலான கணக்கு கேள்விகள் 50ம்
புதிர் வினாக்கள் 20ம்
கடைசி அறையில் நடைபெற்ற
குழு விவாதத்தில் வெற்றி பெற்றும்
வேலைக்கு சேர்ந்ததாக கூறினார்
என‌க்கு வ‌ர‌ம் வேண்டும் என்ற‌த‌ற்கு
அதெல்லாம் ஓல்டு பேஷ‌ன் என‌வும்
வேண்டுமென்றால் எதாவ‌து
பிர‌ப‌ல‌ வ‌ங்கியில் கிரெடிட் கார்டு
வாங்க சிபாரிசு செய்வதாக‌வும் சொன்னார்
நீங்கள் கடவுளா !? என்று
சந்தேகமாய் இருக்கிறது
என்றதற்கு அருகே நடந்து
வந்த பெண்னை நோக்கி
விரலை நீட்டினார்.
அவள் அருள் வந்ததாய்
தலைவிரி கோலமாய் ஆடினாள்,
வாயில் இருந்து
பூக்களை வரவழைத்தார்
உள்ளங்கையில் இருந்து
தண்ணீரை வரவழைத்தார்
சுற்றி நின்ற கூட்டம்
ஆர்ப்பரித்தது.
கடவுளுக்கு வெட்கம் தாளவில்லை.
அடுத்த வருடம் நடக்கும்
கம்பெனியின் கல்சுரல்சில் தன்னுடைய
வித்தைகளை காட்டி
எல்லாரையும் அசத்தப்போவதாக
சொல்லிவிட்டு தோளில்
மாட்டியிருந்த லாப்டாப்
பேக்கை இறுக்கி பிடித்தபடி
பதினொன்றாம் மாடிக்கு பறந்து சென்றார்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. எஸ்.கே சொல்கிறார்:

  அருமையான கவிதை!

 2. vaarththai சொல்கிறார்:

  ha..ha..ha…
  nice one adaleru
  (i’m now at
  ezuththukkal.blogspot.com)

 3. எஸ்.கே சொல்கிறார்:

  மன்னிக்கணும் கவிதைன்னு கமெண்ட் போட்டதுக்கு இது கதை கவிதை கலந்த மாதிரிதான் தெரிஞ்சுது! அதான்! சாரி!

  • அடலேறு சொல்கிறார்:

   ஐயயோ தவறு என் மேல தான்., உங்க பின்னுட்டத்தை இதற்கு முன்னாடி பதிவுக்குன்னு நினைச்சுட்ட. அதனால வந்த வினை. உடனே நான் மாத்தீட்ட., ஆனா அந்த சைக்கில் கேப்புல என்னுடைய பதில படிச்சுட்டீங்க. ரொம்ப சாரி எஸ்.கே. பின்னுட்டத்திற்கு நன்றி.

 4. Arunkumar சொல்கிறார்:

  Nalla irunthu chu, Enjoy panninen

 5. Fred சொல்கிறார்:

  அருமையான கவிதை!

 6. gangadaran சொல்கிறார்:

  good

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s