ஐரின் பாப்பா

Posted: ஜனவரி 14, 2011 by அடலேறு in irene
குறிச்சொற்கள்:, ,

தலையை
சாய்த்து சாய்த்து
கதை சொல்லுவாள்
ஐரின் பாப்பா
அவ‌ள் க‌தையில் வ‌ரும்
எல்லா வில‌ங்குக‌ளும்
பேசும் திற‌ன் கொண்ட‌வை
நரி புலியிடம் சொல்லியதாம்
புலியே புலியே என்னை
விட்டுவிடு
நான் பாவ‌ம்.
ஆமாம் நீ பாவம்
உன்னை நாளைக்கு
சாப்பிடுகிறேன் என
புலியும் போய்விட்டதாம்.
புலி எங்கே போனது
என்று ஒரு போதும் அவள்
சொல்வதில்லை
புலி மீண்டும்
எப்போதாவது வரலாம்
வராமலும் போகலாம்
அப்படியே வ‌ந்தாலும்
நாளை சாப்பிடுவ‌தாய்
சொன்ன‌ நரியை
மறந்தே போயிருக்கும் 

–0OO0–

லிவி என்ற பூனை
ஐரின் குட்டியின்
எல்லா க‌தைக‌ளிலும் வ‌ரும்
லிவி இல்லாம‌ல் அவ‌ளால்
க‌தைக‌ள் சொல்ல‌ முடியாது
என்னுடைய‌ எல்லா க‌தைக‌ளிலும்
லிவி பூனைக்குட்டி
க‌ண்டிப்பாக‌ இட‌ம் பெற‌ வேண்டும்
லிவி பூனைக்குட்டி அவ‌ளுக்கு
முறுக்கு வாங்கி த‌ரும்
வாக்கிங் கூட்டிச்செல்லும் என்றாள்
லிவி பூனைக்குட்டி
க‌த‌வின் பின்னாடி ஒளிந்திருப்ப‌தாக‌
சொல்லி க‌த‌வை திற‌க்க
“மியாவ்” என்ற‌ ச‌த்த‌த்துட‌ன்
வெளிவ‌ந்தார்
லிவி பூனைக்குட்டியாய்
மாறிப்போன‌ அவள்
தாத்தா

(இது சென்னை சங்கமத்தில் வாசிக்கப்பட்ட கவிதை)

–0OO0–

குருவி என்றால் திவிலி
பொம்மை என்றால் மித்தி
முத்தம் என்றால் இத்துக்கோ
என‌ அவ‌ளில் உல‌க‌ம்
புதுவ‌கை சொற்க‌ளால்
நிர‌ம்பிய‌து
நான் யார் என்று கேட்டால்
டிட்ட‌ப்பா
என்று  சொல்லி
கண்சிமிட்டி குழையும் போது
தூக்கி முத்தமிடுவ‌த‌ற்கான‌
கார‌ண‌த்தை நான்
சொல்வதேயில்லை

–0OO0–

பேசும் குர‌ங்கு பொம்மையை
எப்போதும் கையில்
வைத்திருப்பாள்
ஐரின் பாப்பா.
அசிரிய‌ர் அடிக்கும் போது
அம்மா திட்டும் போது
என‌ எல்லா இர‌வுக‌ளிலும்
குர‌ங்கு பொம்மை
பேசிக்கொண்டே
இருக்கிற‌து அவ‌ளுட‌ன்
யாருக்கும் தெரியாம‌ல்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. எஸ்.கே சொல்கிறார்:

  ஐரின் பாப்பா நல்லாயிருக்கா!

  Like

 2. அஞ்சனா சதுர்வேதி சொல்கிறார்:

  ஸாரி அடலேறு, ரொம்ப நாள் ஆயிருச்சு உங்கள் வலைபக்கம் வந்து. கலக்கல் கவிதை.இப்பவே பாக்கனும் போல இருக்கு ஐரின‌

  Like

 3. அருண் சொல்கிறார்:

  அருமை.டிட்டப்பான்னா சித்தப்பாவா

  Like

 4. உமா மகேஷ்வரி சொல்கிறார்:

  என் மகளுடைய சிறுவயது நாட்களை பார்த்தது போல இருக்கிறது. நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டேன் இரண்டாவது கவிதையில் வரும் தாத்தாவை நினைத்து? யார் அந்த தாத்தா?

  Like

 5. Juhee Sathurvethi சொல்கிறார்:

  Hi,

  My sister given intro to this blog. nice . really enjoyed.
  Can u post Irene photo.

  Like

 6. vaarththai சொல்கிறார்:

  //குருவி என்றால் திவிலி
  பொம்மை என்றால் மித்தி
  முத்தம் என்றால் இத்துக்கோ//

  தமிழ், வளரும் மொழி என்றேன்
  சிரித்தது உலகம்;
  மழலை மறந்த முரட்டு உலகம்.

  Like

 7. Jana சொல்கிறார்:

  மரப்பாச்சி பொம்மையுடன் ஐக்கியமானவர்கள் மீண்டும் ஐரின் பாப்பாவுடன் இணைந்துகொள்கின்றோம்.
  வாழ்த்துக்கள் நண்பா.

  Like

 8. Manoj kumar சொல்கிறார்:

  really nice da, 1sec IRENE flashes infront of my eyes.. Thanks…

  Like

 9. goutham சொல்கிறார்:

  ஏய் புள்ள ஐரின்னு ஐயம் லவ் யு !!

  Like

  • அடலேறு சொல்கிறார்:

   இதே வார்த்தைய‌த்தான் கெள‌த‌ம் நானும் அண்ணாவும் அவ‌ள‌ பாத்து சொல்லீட்டே இருப்போம், அப்ப‌ அவ‌முக‌ம் போற‌ போக்கு இருக்கே, மிஸ் ஹெர் சோ ம‌ச்

   Like

 10. goutham சொல்கிறார்:

  ஹா ஹா ஹா … சோ கியூட்

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s