புகைப்படம்

ஒருவருக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கக்கூடியது என்னவென்றால் அவருடைய ஆகச்சின்ன வயது புகைப்படத்தை  பார்ப்பது -‍ அ.முத்துலிங்க‌ம்

என்னுடைய சிறு வயது புகைப்படம் ஒன்று வீட்டில்  இருக்கிறது.வீட்டுக்கு செல்லும் போது எப்போதாவது அதை பார்த்துக்கொள்வேன். புகைப்படத்தில் இருக்கும் முகத்துடன் கண்ணாடியில் என்னை பார்த்ததாக நியாபகமே இல்லை. அந்த புகைப்படத்தை எடுக்கும் போதெல்லாம் அம்மா பழைய கதைகள் எதாவது ஒன்றை சொல்லதொடங்குவாள். புகைப்படத்தில் நான் போட்டிருக்கும் பச்சை உடை, போட்டோ பிடித்த‌ நாள், அன்று காலையில் நடந்தது என்று நினைவில் உள்ள‌வைக‌ளை அடுக்கதொடங்குவாள். அவளை தவிர வேறு யாராலும் என்னுடைய சிறுவயது நினைவுகளை இத்தனை லயத்துடன் சொல்ல முடியாது.  கதைக‌ளை கேட்ப‌த‌ற்கு அப்பாவிற்கு ஆசை இருந்தாலும் நேர‌டியாக‌ க‌வ‌னிக்காம‌ல் காதை ம‌ட்டும் இங்கே வைத்துக்கொண்டு  வேறு வேலையில் மும்ம‌ராமாக‌ இருந்துகொண்டிருப்பார்.

புகைப்படம் எடுத்த‌ நாள் எவ‌வ‌ள‌வு முய‌ன்றும் நினைவிற்கு கொண்டுவ‌ர‌ முடிய‌வில்லை. சிறுவ‌ய‌து நினைவுக‌ளை போல‌ இப்போது இருக்கும் நினைவுக‌ளையும் பின்பு ஒரு நாளில் ம‌றந்து போவோம் என்ப‌து வேத‌னை த‌ருவ‌தாய் இருந்த‌து.

புகைப்படங்க‌ள் எப்போதுமே இற‌ந்த‌ கால‌த்தை நினைவுப‌டுத்திக்கொண்டிருக்கும் நினைவின் பிம்ப‌ம். கடந்த காலத்தை திரும்பி பார்க்க புகைப்படத்தை தவிற வேறு ஒன்றும் சிறந்தவையாக இருக்க முடியாது. புகைப்ப‌ட‌த்தை பார்க்கையில் புகைப்படம் எடுக்கப்பட்ட சூழ்நிலை, அதன் சார்பு நிகழ்வுகளை மீட்டு தரும் அது த‌ரும் சுக‌மே கதகதப்பானது. அத‌ற்காக‌த்தான் ம‌னித‌ர்க‌ள் த‌ங்க‌ளை புகைப்ப‌ட‌த்திற்குள் அடைத்துக்கொள்வ‌தில் பெரும‌கிழ்ச்சி அடைகிறார்க‌ள். தேர்ந்த‌ புகைப்ப‌ட‌க‌லைஞ‌னின் க‌ண்க‌ள் வ‌ழியே அவ‌ன‌து உல‌கை பார்ப்ப‌து வாழ்வின் உன்ன‌த‌மான‌ த‌ருண‌ம்.

ப‌க‌த்,கார்த்தி வ‌லைப‌க்க‌த்திலும் முக‌ப்புப‌க்க‌த்திலும் இவ‌ர்க‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ள் பெருத்த‌ வ‌ர‌வேற்பை பெற்ற‌து. ப‌க‌த்தை ச‌ந்திக்க‌ முடியுமா என்று மும்பையில் இருந்த போதே கேட்டிருந்தேன். சென்னை வ‌ந்த‌தும் ச‌ந்திக்கலாம் என்றிருந்தார். சென்னை வந்து புது அலுவலகம், புது முகங்கள் என  என்னை சமநிலை படுத்திக்கொள்ளவே இரண்டு வாரங்கள் ஆனது. அலுவ‌ல‌க‌த்தின் வெளியே தேநீர் குடித்துக்கொண்டுருந்தேன். அருகில் ப‌க‌த், அப்போது தான் முத‌ல்முறை நேரில் ச‌ந்திக்கிறோம்.  மிக‌ இய‌ல்பாக‌ இருந்தார். என‌க்கு நிறைய‌ கேள்விக‌ள் இருந்த‌ன‌ அவ‌ரிட‌ம். வீட்டிற்கு போய் பேசலாம் என்று கூட்டிச்சென்றார்.

அழ‌கிய‌ பூக்க‌ள்,வித விதமான புகைப்ப‌ட‌ க‌ருவி, பெரிய‌ வெள்ளை திரை என‌ வீடு அழ‌காயிருந்த‌து. பேச‌த்தொட‌ங்கினேன். குடும்ப‌ம், ப‌டிப்பு, வேலை என‌ போய்க்கொண்டிருந்த‌து. ம‌க்கா ஸ்டுடியோஸின் ஆரம்ப‌ தூண்க‌ள், கார்த்திக் உட‌னான‌ ந‌ட்பின் ஆர‌ம்ப‌கால‌ நாட்க‌ளை ப‌கிர்ந்து கொண்டார். பொறாமையாக இருந்தது. புகைப்ப‌ட‌த்தினுட‌னான‌ நெகிழ்ச்சி த‌ருண‌ங்க‌ளையும் ப‌திவு செய்தார். அவரின் புகைப்படங்கள்  நாளிதழ்கள், தினசரிகள், வலைபக்கங்களில் என எங்கும் வியாபித்திருக்கிறது.  அவரின் சில புகைப்படங்களை தருகிறேன். வலிகளை கடந்து தான் எந்த ஒரு கலைஞனும் கலையுடன் தன்னை இணைத்துக்கொள்கிறான். புகைப்படம் கற்றுக்கொள்ள எடுத்த முயற்சி, முதலீடு, காலம் என அனைத்தையும் பட்டியலிட்டார்.

பக‌த் அமெரிக்கா, இந்தியா என‌ பல தேசங்களில் பல‌ புகைப்ப‌ட‌ க‌லைஞ‌ர்க‌ளை ச‌ந்தித்துள்ளார். நுண்ணிய வேலைப்பாடுகள் தான் புகைப்படம். ஒவ்வொரு புகைப்படமும் அதை எடுப்பவரின் மனநிலை சார்ந்தே உருவாக்கம் பெருகின்றன. என்னை க‌வ‌ர்ந்த‌ ப‌க‌த் , கார்த்தியின் சில‌ புடைப்ப‌ட‌ங்க‌ளை இங்கு ப‌கிர்கிறேன்.

எந்த ஒரு கலைஞனும் கலையின் வழி தான் தன் சக மனிதனிடம் அதிகமாக பேசிக்கொள்கிறான் என்பதை பகத், கார்த்தியின் படங்கள் நிறுபிக்கின்றன

 

( மேலே உள்ள கவிதையும் புகைப்படமும் எத்தனை இயல்பாய் இணக்கம் கொள்கிறது)

மனிதன் தன் முகத்தை கண்ணாடி , புகைப்படம் என இரண்டில் மட்டும் தான் நுட்பங்களுடன் பார்த்துக்கொள்கிறான்.

புகைப்ப‌ட‌த்தின் வ‌ழியே காணும் ம‌னித‌ர்க‌ள் அழ‌கான‌வ‌ர்க‌ள். ம‌னிதர்க‌ளிட‌ம் காணும் எந்த‌ கெட்ட‌ குண‌ங்க‌ளும் அவர்களுக்கு இல்லை. ம‌னிதனுக்கு புகைப்ப‌ட‌ம் மிக நெருக்க‌மான‌து. அத‌னால் தான் அதை எரிப்ப‌து நிராக‌ரிப்பின் உச்ச‌ம் என‌ நினைக்கிறான்.

மக்கா ஸ்டுடியோஸ் வலைபக்கம் : http://www.makkastudios.in/
முக நூலில் மக்கா ஸ்டுடியோஸ் :  http://www.facebook.com/makkastudios

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

9 thoughts on “புகைப்படம்

Add yours

  1. அந்தக் கவிதையுடன் கூடிய புகைப்படம் மிக அருமை!.

    மிக சமீபத்தில்தான் அம்மாவின் பழைய புகைப்படம் கிடைத்து. அத்தனை ஆச்சரியம். என்னுடைய அம்மா இந்த உருவத்தில் இருந்திருக்கிறாள் என்று வியப்பாக இருந்தது. நம் புகைப்படத்தை விட அம்மாவின் புகைப்படம் தரும் மகிழ்ச்சி அலாதிதான்.

    Like

    1. அதும் அம்மா அப்பாவின் கல்யாண புகைப்படம் அழகு தான். அம்மாக்கள் எப்போதுமே அழகாய் தான் இருக்கிறார்கள் புகைப்டத்திலும் அதை விட நேரிலும்

      Like

  2. புகைப்படக் கலையில் ஆர்வம் உள்ளவன் என்ற முறையில், ஒவ்வொரு புகைப்படமும், அது புகைப்பிடிக்கப் பட்ட தருணம் அதற்காக மேற்கொண்ட பயணம் என்று பல விடயங்களை நினைவில் கொள்ளச் செய்கின்றது. நல்ல பதிவு.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑