கல்லூரி கள்வன்

Posted: ஏப்ரல் 16, 2011 by அடலேறு in கவிதை, காதல்
குறிச்சொற்கள்:, , ,

கல்லூரியில்
முதல் நாள் வகுப்பில்
கிரங்கடிக்கும்
பார்வையுடன்
என்னையே
பார்த்துக்கொண்டிருந்தாயே
அதற்கு என்ன அர்த்தம் ?

–oO0–

மென் இதய‌ம் கிழித்து
குருதி புசித்து
உள்ள‌ம் தொடும்
உன் பார்வை

–oO0–

எப்ப‌டி த‌ய‌க்க‌மில்லாம‌ல்
கைகுலுக்கி
பெய‌ர் கேட்டாய்
போடா! நான் தூங்கவேயில்லை

–oO0–

கரும்பலகை எழுத்துக்களை
அழிக்கும் ஒவ்வொரு முறையும்
அழித்துக்கொண்டுருந்தாய்
என் தயக்கத்தை

–oO0–

எளிதாய் ம‌ய‌க்கி வைத்தாய்
இய‌ல்பாய் ர‌சிக்க‌ வைத்தாய்
என்னையே மெதுவாய்
இழ‌க்க‌ வைத்தாய்

–oO0–

உன்னுட‌ன் பேசுகையில்
எதேச்சையாக‌ காத‌லை
சொல்லிவிடுவேன் என்று தான்
பேசுவ‌தேயில்லை

–oO0–

ஒரு ப‌க்க‌ம் த‌லை சாய்த்து
குட் மார்னிங் சொல்லும் போது
ஹைய்யோ!!
க‌ட்டிப்பிடித்து கொள்ள‌லாம்
போல‌ தோன்றும்

–oO0–

ச‌த்திய‌மிட்டு சொல்கிறேன்
உன்னை நினைக்கும்
போதெல்லாம்
க‌ருக்கென்று நெஞ்சுக்குழிக்குள்
ஏதோ ஒன்று இழுக்கிற‌து

–oO0–

உன்பெய‌ரை
யார் அழைத்தாலும்
திரும்பிப்பார்ப்ப‌தை
த‌விர்க்க‌முடிய‌வில்லை
ஏன்?

–oO0–

புத‌ன்கிழ‌மை லேப்புக்கு
அணிந்து வ‌ரும் முழுநீள‌
வெள்ளை ச‌ட்டையில்
கொள்ளை அழ‌குடா நீ

–oO0–

தின‌மும் ஏழு ம‌ணி
லேண்ட் லைக்கு
மிஸ்டு கால் கொடுப்ப‌து
நான் தான்

–oO0–

முத‌ன் முறையாக‌
நீ க‌ல்லூரி வ‌ராத‌
அன்று தான்
தெரிந்து கொண்டேன்
வ‌குப்ப‌றை எத்த‌னை
அந்நிய‌ம் என்று

–oO0–

காய்ச்ச‌ல் என்ப‌து
இத்த‌னை கொடிய‌து என்று
உன‌க்கு வ‌ந்த‌ பின் தான்
உண‌ர்ந்தேன்

–oO0–

நேரில் சொன்னால்
அழுது விடுவேன்
என்று தான்
போனில் சொன்னேன் காத‌லை

–oO0–

நிராக‌ரிப்பை
நாசூக்காய் உண‌ர்த்திய‌தால்
நீ மெதுன‌ன்

–oO0–

உன் என்றைக்குமான
தோழி நான்
என் என்றைக்குமான‌
காத‌ல‌ன் நீ

–oO0–

நிராக‌ரிப்பின் உச்ச‌ம்
உன்
மெள‌ன‌ம்

–oO0–

இப்போதெல்லாம்
என்னையே
பார்த்துக்கொண்டிருக்கிறாய்
ஏன்?

–oO0–

ஹார்மோன் பீய்ச்சிய‌டித்து
முதுகுத்த‌ண்டில்
மின‌சார‌ம் பாய்ந்து
த‌ண்டுவ‌ட‌ம் வ‌ழியே
மூளையை தாக்கிய‌து
நீ காத‌லை சொன்ன‌ போது

–oO0–

நெற்றி முத்த‌மிட்டு
என்னை ஏற்றுகொண்ட‌
அன்று தான்
ஜன‌ன‌மானேன்

–oO0–

உன் சகர்தர்மிணி நான்
என் சகலமும்
நீ

–oO0–

முத‌ன் செம‌ஸ்ட‌ரிலேயே
எப்ப‌டி காத‌லை
சொன்னாய் என்றாய்
முத‌ல் நாளே
சொல்லியிருப்பேன்
நீ சிறுவ‌ன்

–oO0–

தேர்வு அறையில்
ப‌க்க‌த்தில் உட்காராதே
ம‌ற‌ந்து தொலைக்கிற‌து
அனைத்தும்
–oO0–
நீ ப‌தித்த‌‌ முத‌ல் முத்த‌ம்
தான் கிள‌றிவிட்ட‌து
என் பெண்மையை
–oO0–
கையை பிடித்துக்கொண்டு
அனாய‌ச‌மாக‌ பேசுகிறாய் நீ
கிட‌ந்து த‌விக்கிறேன் நான்
–oO0–

உன்னைக்காட்டாத‌
ச‌னி, ஞாயிறுக‌ளை
அற‌வே
வெறுக்கிறேன்

–oO0–

இடைஇழுத்து
முத்த‌மிடும் போது
எல்லை தாண்ட‌
சொல்லும்
உன் மூச்சுக்காற்று

–oO0–

வில‌க்கான‌ நாட்க‌ளில்
ம‌டிகிட‌த்தி
த‌லை கோகி
க‌ர‌ம் ப‌ற்றி
கால் விர‌ல்
சொடுக்கெடுக்கும் நீ
என் தாயுமான‌வ‌ன்

–oO0–

கன்னத்தின்
நேரெதிர் த‌ட‌வ‌
நேற்று ம‌ழித்த‌ தாடி
உலை வைக்கும்
என் பெண்மைக்கு

–oO0–

உள் நுழைந்து
உயிர் புசித்து
சந்தோஷப்படுத்தியே
சாகடிப்பாய்
என்று தெரிந்திருந்தால்
உன்னை
காதலித்திருக்கவே மாட்டேன்

–oO0–

கோடு போட்ட‌
ஆர‌ஞ்சு ச‌ட்டை
காட்டும் உன்னை
திமிராக‌
–oO0–
நீயும் நானும்
ப‌கிர்ந்துண்ண‌ தொட‌ங்கிய‌பின்
ச‌மைக்க‌ விடுவ‌தில்லை
அம்மாவை
–oO0–
எப்ப‌டி
க‌ண்டுபிடித்தாய்
நானும் நானும்
ஒன்றில்லையென
உன்னுட‌ன் இருக்கும்
த‌ருண‌ங்க‌ளில்
–oO0–

வாக‌ன‌ ச‌த்த‌மும்
உன் மென் வாச‌மும்
அறிந்து வைத்திருக்கிறேன்

–oO0–

நீ ஈர‌க்கை துடைத்த‌
துப்பட்டா
த‌லைய‌னையென‌க்கு
இர‌வில்

–oO0–

யாரும‌ற்ற‌ வ‌குப்பில்
த‌னியாய் உன்னிட‌ம்
மாட்டிக்கொள்வ‌து
அவ‌ஸ்தை பேர‌வ‌ஸ்தை

–oO0–

வகுப்பறையில் நான்
இல்லாததை தேடும்
உன் கண்கள்
எனக்கு பிடித்த உறுப்பு

–oO0–

உன்னிட‌ம்
பொய்யாய் கூட‌
கோபப்ப‌ட‌ முடிய‌வில்லை
அப்ப‌டி கெடுத்து வைத்திருக்கிறாய்

–oO0–

இய‌ல்பாக‌ பேசி விடுகிறாய்
எதோ ஒன்றை.,
நினைத்து நினைத்து
நீர்த்துப் போகிற‌து இர‌வு

–oO0–

அதிகாலையில்
அருகில் நீ இருப்ப‌தாய்
நினைத்துக்கொள்ளும்
க‌ற்ப‌னைக‌ளின்
வ‌சீக‌ர‌ம்
வ‌ன் ஸ்ப‌ரிச‌ம்

–oO0–

எப்போதும் என்னையே
நினைத்துக்கொண்டிருப்பாயா
என்று கேட்கிறாய்
எப்போதும்
சுவாசித்துகொண்டே
இருப்பாயா என்று
கேட்ப‌து போல‌
இருக்கிற‌து
செல்ல‌ ம‌டைய‌னே

–oO0–

ஆணாதிக்க‌ம் பிடிக்க‌த்தான்
செய்கிற‌து
அதிகார‌த்தொனியில்
முத்த‌ம் வேண்டும் என்ப‌து

–oO0–

ம‌ற்ற‌ பெண்க‌ளுட‌ன்
பேசும்போதெல்லாம்
நான் கோப‌ப்ப‌டுவ‌தே இல்லை
நான் ர‌சித்த‌ உன் பேச்சை
அவ‌ர்க‌ளும் கேட்க‌ட்டும்.
பேச்சை ம‌ட்டும்

–oO0–

த‌ட்ட‌ச்சு ப‌ல‌கையில்
ஊர்ந்து செல்லும் உன்
விர‌ல்க‌ளை பார்க்க‌
ஆசையாயிருக்கும்
நினைத்துப்பார்கவே
வெட்க‌மாய் இருக்கிற‌து
ச்சீ போடா

–oO0–

க‌ல்லூரியின்
இர‌ண்டாம் வ‌ருட‌
முடிவு நம்மை
ஒன்றாகிப் போன‌து

–oO0–

வ‌ளாக‌த்தேர்வுக்கான‌
பேருந்து ப‌ய‌ண‌த்திலுன்
கரம் பிடித்து
தோள் சாய்த்து
நானுற‌ங்கும் போது
புகுத்திக் கொண்டேன்
உன் க‌த‌க‌த‌ப்பை

–oO0–

நீ அடிக்கடி மீசை
ம‌ழிப்ப‌த‌ற்கான‌
கார‌ண‌த்தை
காதில் சொன்ன‌து
இர‌ண்டு நாள் தூக்க‌ம் கெடுத்த‌து

–oO0–

வ‌குப்ப‌றை மேசையில்
க‌ருப்புமை கொண்டு
என்பேரெழுதும் நீ
காதல்‌ அர‌க்க‌ன்

–oO0–

உன‌க்கான‌ அசைமென்ட்
எழுதும் பேப்ப‌ர்க‌ளில்
மூன்றாவ‌து வ‌ரியில்
உல‌ர்ந்து போன‌
என் முத்த‌ங்க‌ள்
இருக்கும்

–oO0–

க‌டைசி செம‌ஸ்ட‌ர்
நாட்க‌ளை
என் ஆயுசுக்கும்
நீட்டிக்க‌ச்சொல்

–oO0–

ச‌ட்டென கோப‌ம்
பட்டுத்தெரிக்கும்
என‌க்கு.,நீயில்லாம‌ல்
இத்த‌னை நீண்ட‌ அன்பு
சாத்திய‌மில்லை

–oO0–

கல்லூரியில்
க‌டைசி நாள் வகுப்பு
முடிந்து வெளியேரும் போது
க‌ல‌ங்கிய‌ க‌ண்க‌ளோடு
என்னையே
பார்த்துக்கொண்டிருந்தாயே
அதற்கு என்ன அர்த்தம் ?

–oO0–

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. jeeva சொல்கிறார்:

  அருமையாக உள்ளது. ஆனால் ஆங்கில வார்த்தைகளை தவிர்த்தால் இன்னும் அழகாக இருக்கும்.
  தயவு செய்து பிறமொழிகளை கலக்காமல் கவிதை எழுதினால் மிக சுவையாக இருக்கும்

 2. படைப்பாளி சொல்கிறார்:

  அருமை நண்பா..

 3. vaarththai சொல்கிறார்:

  //மென் இதய‌ம் கிழித்து
  குருதி புசித்து
  உள்ள‌ம் தொடும்
  உன் பார்வை//

  இதயத்திற்குள்ளே தான் உள்ளம் இருக்கா ?????

  //உள்ள‌ம் தொடும்//

  இதற்கு பதில் …

  உள்ளம் வருடும்

  உணர்வை வருடும்

  உள்ளம் குதறும்

  பெண்மை வருடும்

  பெண்மை பருகும்

  பெண்மை சீண்டும்

  பெண்மை கிளரும்

  போல ஏதாவது சரி வருமா…?

 4. vaarththai சொல்கிறார்:

  //எளிதாய் ம‌ய‌க்கி வைத்தாய்

  இய‌ல்பாய் ர‌சிக்க‌ வைத்தாய்
  என்னையே மெதுவாய்
  இழ‌க்க‌ வைத்தாய்//

  அப்டியே சினிமா பாட்டா சுடலாம் ….

  மெட்டுக்கு அழகா வருது….

 5. vaarththai சொல்கிறார்:

  //உன்னுட‌ன் பேசுகையில்
  எதேச்சையாக‌ காத‌லை
  சொல்லிவிடுவேன் என்று தான்
  பேசுவ‌தேயில்லை//

  nice

 6. vaarththai சொல்கிறார்:

  //ஒரு ப‌க்க‌ம் த‌லை சாய்த்து
  குட் மார்னிங் சொல்லும் போது
  ஹைய்யோ!!
  க‌ட்டிப்பிடித்து கொள்ள‌லாம்
  போல‌ தோன்றும்

  –oO0–

  ச‌த்திய‌மிட்டு சொல்கிறேன்
  உன்னை நினைக்கும்
  போதெல்லாம்
  க‌ருக்கென்று நெஞ்சுக்குழிக்குள்
  ஏதோ ஒன்று இழுக்கிற‌து

  –oO0–

  உன்பெய‌ரை
  யார் அழைத்தாலும்
  திரும்பிப்பார்ப்ப‌தை
  த‌விர்க்க‌முடிய‌வில்லை
  ஏன்?

  –oO0–

  புத‌ன்கிழ‌மை லேப்புக்கு
  அணிந்து வ‌ரும் முழுநீள‌
  வெள்ளை ச‌ட்டையில்
  கொள்ளை அழ‌குடா நீ

  –oO0–

  தின‌மும் ஏழு ம‌ணி
  லேண்ட் லைக்கு
  மிஸ்டு கால் கொடுப்ப‌து
  நான் தான்

  –oO0–

  முத‌ன் முறையாக‌
  நீ க‌ல்லூரி வ‌ராத‌
  அன்று தான்
  தெரிந்து கொண்டேன்
  வ‌குப்ப‌றை எத்த‌னை
  அந்நிய‌ம் என்று

  –oO0–

  காய்ச்ச‌ல் என்ப‌து
  இத்த‌னை கொடிய‌து என்று
  உன‌க்கு வ‌ந்த‌ பின் தான்
  உண‌ர்ந்தேன்//

  usual, already heard many times…

 7. vaarththai சொல்கிறார்:

  //நிராக‌ரிப்பை

  நாசூக்காய் உண‌ர்த்திய‌தால்
  நீ மெதுன‌ன்//

  ..அட..

  • அடலேறு சொல்கிறார்:

   உண்மையாலுமே அந்த மெதுனன் வார்த்தை ரொம்ப ரசிச்சேன். கூகிளிட்டேன் .. நான் மட்டும் தான் இந்த வார்த்தையை பயன்படுத்தியதாக கூகிளாண்டவர் தகவல் கூறினார்., நம்ம கண்டுபுடிச்ச ஒரு தமிழ் வார்த்தை.. வரலாறு முக்கியம் அமைச்சரே

 8. vaarththai சொல்கிறார்:

  //ஹார்மோன் பீய்ச்சிய‌டித்து

  முதுகுத்த‌ண்டில்
  மின‌சார‌ம் பாய்ந்து
  த‌ண்டுவ‌ட‌ம் வ‌ழியே
  மூளையை தாக்கிய‌து
  நீ காத‌லை சொன்ன‌ போது//

  (மின்சாரம் என திருத்தவும் ….)

  வைரமுத்து இதை ஆட்டைய போடாமல் விடவும் ….
  (விழியில் புகுந்து
  இதயம் நுழைந்து
  உயிரில் கலந்த ….
  லைன்ஸ் மாதிரி )

 9. vaarththai சொல்கிறார்:

  //நெற்றி முத்த‌மிட்டு
  என்னை ஏற்றுகொண்ட‌
  அன்று தான்
  ஜன‌ன‌மானேன்//

  ….usual…

 10. vaarththai சொல்கிறார்:

  //உன் சகர்தர்மிணி நான்

  என் சகலமும்
  நீ

  –oO0–

  முத‌ன் செம‌ஸ்ட‌ரிலேயே
  எப்ப‌டி காத‌லை
  சொன்னாய் என்றாய்
  முத‌ல் நாளே
  சொல்லியிருப்பேன்
  நீ சிறுவ‌ன்//

  …//நீ சிறுவ‌ன்//….

  சகர்தர்மிணி …(னி..?) ஆனாலே இப்டித்தான் வார்த்த விழும்

 11. vaarththai சொல்கிறார்:

  //தேர்வு அறையில்
  ப‌க்க‌த்தில் உட்காராதே
  ம‌ற‌ந்து தொலைக்கிற‌து
  அனைத்தும்
  –oO0–//

  ha..ha.ha nice

  • அடலேறு சொல்கிறார்:

   தேர்வு அறையில்
   பக்கத்தில் உட்காருகிறேன்
   பார்த்து எழுத வேண்டும்
   அனைத்தும்

   ( அனைத்தும் என்பது விடைகளை குறிக்கும், தவறான சிந்தனைகளுக்கு கம்பேனி பொருப்பல்ல )

 12. vaarththai சொல்கிறார்:

  //இடைஇழுத்து
  முத்த‌மிடும் போது
  எல்லை தாண்ட‌
  சொல்லும்
  உன் மூச்சுக்காற்று//

  neat..

 13. vaarththai சொல்கிறார்:

  //வில‌க்கான‌ நாட்க‌ளில்
  ம‌டிகிட‌த்தி
  த‌லை கோகி
  க‌ர‌ம் ப‌ற்றி
  கால் விர‌ல்
  சொடுக்கெடுக்கும் நீ
  என் தாயுமான‌வ‌ன்//

  இதுக்கு எங்க ஊர் பாட்டி கூட ஓட்டு போடும் …

 14. vaarththai சொல்கிறார்:

  //கன்னத்தின்

  நேரெதிர் த‌ட‌வ‌
  நேற்று ம‌ழித்த‌ தாடி
  உலை வைக்கும்
  என் பெண்மைக்கு//

  ஆஹா.. நம்ம ஆளு
  யார்ட்டயோ மாட்ன மாதிரி தெரியிதே

 15. vaarththai சொல்கிறார்:

  //நீயும் நானும்
  ப‌கிர்ந்துண்ண‌ தொட‌ங்கிய‌பின்
  ச‌மைக்க‌ விடுவ‌தில்லை
  அம்மாவை//

  …last comment, confirmed.

 16. vaarththai சொல்கிறார்:

  //எப்ப‌டி
  க‌ண்டுபிடித்தாய்
  நானும் நானும்
  ஒன்றில்லையென
  உன்னுட‌ன் இருக்கும்
  த‌ருண‌ங்க‌ளில்..//

  புரியலையே ராசா…

 17. vaarththai சொல்கிறார்:

  //வாக‌ன‌ ச‌த்த‌மும்
  உன் மென் வாச‌மும்
  அறிந்து வைத்திருக்கிறேன்//

  neat and simple….
  (but, if possible give some uplift. as the lines are not as good as the content here )

 18. vaarththai சொல்கிறார்:

  //யாரும‌ற்ற‌ வ‌குப்பில்
  த‌னியாய் உன்னிட‌ம்
  மாட்டிக்கொள்வ‌து
  அவ‌ஸ்தை பேர‌வ‌ஸ்தை//

  nice

  (பேர‌வ‌ஸ்தை…? OR
  பேரானந்தவஸ்தை?)

  • அடலேறு சொல்கிறார்:

   “பெரிய ஆனந்த அவஸ்தை”.. வார்த்தைய பிரிச்சு பிரிச்சு என்னடா பண்ணறீங்கன்னு மத்தவங்க கேட்பதற்கு முன் கடையை காலி செய்ய வேண்டும்

 19. vaarththai சொல்கிறார்:

  //இய‌ல்பாக‌ பேசி விடுகிறாய்

  எதோ ஒன்றை.,
  நினைத்து நினைத்து
  நீர்த்துப் போகிற‌து இர‌வு//

  என்னயா இப்டி கலக்குற ….

 20. vaarththai சொல்கிறார்:

  //ஆணாதிக்க‌ம் பிடிக்க‌த்தான்

  செய்கிற‌து
  அதிகார‌த்தொனியில்
  முத்த‌ம் வேண்டும் என்ப‌து//

  வார்த்தைய சரியா கோர்கலையோ…?

  (“ஆணாதிக்க‌ம் நிலைக்க” என

  அலறுகிறது மனது

  அதிகார‌த்தொனியில் நீ

  முத்தத்தில் அமிழ்த்திட)

 21. vaarththai சொல்கிறார்:

  //த‌ட்ட‌ச்சு ப‌ல‌கையில்

  ஊர்ந்து செல்லும் உன்
  விர‌ல்க‌ளை பார்க்க‌
  ஆசையாயிருக்கும்
  நினைத்துப்பார்கவே
  வெட்க‌மாய் இருக்கிற‌து
  ச்சீ போடா

  –oO0–

  நீ அடிக்கடி மீசை
  ம‌ழிப்ப‌த‌ற்கான‌
  கார‌ண‌த்தை
  காதில் சொன்ன‌து
  இர‌ண்டு நாள் தூக்க‌ம் கெடுத்த‌து

  –oO0–//

  இப்படி நீ எழுதுகையில்

  அடலேறு ங்கிற பேர

  காமராசுனு மாத்து

  என சொல்லி சொல்லி

  உதைக்க சொல்கிறது

  மனசு

  ….. னு எந்த பொண்ணாவது வலைய வீசாம இருந்தா சரி

  • அடலேறு சொல்கிறார்:

   நானும் பேர மாத்தீரலாமான்னு யோசனைல தான் இருக்க., ஆனா மச்சா , சத்தியமா நீ சொன்ன பேரு இல்ல.

   வலைய வீசாம இருந்தாவா…அவ்வ்வ்வ்வ்வ்
   இங்க நூலுக்கே வழிய காணோம் இதுல வலையாம். போங்க பாஸு போய் கொழந்த குட்டிகள படிக்க வைங்க‌

 22. vaarththai சொல்கிறார்:

  //கல்லூரியில்

  க‌டைசி நாள் வகுப்பு
  முடிந்து வெளியேரும் போது
  க‌ல‌ங்கிய‌ க‌ண்க‌ளோடு
  என்னையே
  பார்த்துக்கொண்டிருந்தாயே
  அதற்கு என்ன அர்த்தம் ?//

  ம்… கழட்டி விட்டான்னு அர்த்தம்.

  இன்னைக்கு browsing quota இந்த ஒரு இதுக்கே போச்சா …

  அடப்பாவிங்களா …

  • அடலேறு சொல்கிறார்:

   கழட்டி விட்டதுக்காக இல்ல, ஒரு பிலீங் டிபார்ட்மெண்ட் அவ்ளோ தான்.,

   browsing quota இன்னும் 15 நிமிடங்கள் அதிகப்படித்தும் படி உங்கள் தங்கமணிக்கு இந்த நீதிமன்றம் சிபாரிசு செய்கிறது 🙂

 23. Mohan சொல்கிறார்:

  Very nice sathish! Great work!!!

 24. மாரிமுத்து சொல்கிறார்:

  //ம‌ற்ற‌ பெண்க‌ளுட‌ன்
  பேசும்போதெல்லாம்
  நான் கோப‌ப்ப‌டுவ‌தே இல்லை
  நான் ர‌சித்த‌ உன் பேச்சை
  அவ‌ர்க‌ளும் கேட்க‌ட்டும்.
  பேச்சை ம‌ட்டும்//

  //தேர்வு அறையில்
  ப‌க்க‌த்தில் உட்காராதே
  ம‌ற‌ந்து தொலைக்கிற‌து
  அனைத்தும்//

  —மிகவும் பிடித்திருந்தது..

  தொடர்க அடலேறு..

 25. மாரிமுத்து சொல்கிறார்:

  //லேண்ட் லைக்கு// —லைனுக்கு.

 26. sakthi சொல்கிறார்:

  நடத்துங்க தலைவரே !!!

 27. kathirmuruga சொல்கிறார்:

  வகுப்பறைக் காவியம் எனலாமா?
  ஒவ்வொன்றும் நிஜத்தில் ஊறிய நினைவு மலர்கள்.
  அருமை

 28. Raji சொல்கிறார்:

  Satheesh…. Awesome…

  What can i say 🙂

 29. shanmathi சொல்கிறார்:

  wow very nice.it is remember my clg days.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s