என் மழையானவள் நீ

Posted: நவம்பர் 14, 2011 by அடலேறு in அடலேறு

மெல்ல தொடங்கி
அடித்துப்பெய்கிறது
மழை
அடித்து பெய்து
மெல்ல அடங்குகிறதுன்
ஊட‌ல்

****

நீயும் நனைகிறாய்
என்னையும் நனைக்கிறாய்

****

அடை ம‌ழை என்றாலே
 இரவுப்பேருந்தில்
நீ த‌ந்த‌ 164 முத்த‌ங்க‌ளை தான்
நினைத்துக்கொள்கிறேன்

****

ம‌ழைக்கு வேறு என்ன‌
பெருமை இருந்துவிட‌ப்போகிற‌து
உன்னை ந‌னைத்த‌து த‌விர‌

****

ம‌ழையில் ந‌னைந்து விட்டு
கைத‌ட்டி சிரிக்கிறாய்
உன்னை ந‌னைத்து விட்டு
பெய்யென‌ பெய்கிற‌து பெரும‌ழை

****

அந்த‌ ம‌ழை நாளில்
குடைக்க‌டியில் இட்ட‌
முத்த‌த்தில் வ‌டிந்து
போன‌வ‌ன் நான்

****

வாச‌ல் தெளித்து
கோல‌ம் போடாதே
வ‌ந்துவிடபோகிற‌து ம‌ழை

****

தேனீர் அத‌ன்
ஆக‌ச்சிற‌ந்த‌ சுவையை
ம‌ழை நாளில் அடை‌கிற‌து.
நீயுன் ஆக‌ச்சிற‌ந்த
அழ‌கை ம‌ழைநாளில்
அடைகிறாய்

****

என்பெய‌ர‌ற்ற‌ ஒரு பெய‌ரை
அந்த‌ ம‌ழை நாளில்
தான் முத‌ன் முறை
கூப்பிட்டாய்

****

ம‌ழை நாளில் தேனீரின்
க‌த‌க‌த‌ப்பு
பின் க‌ழுத்தில் நீயிடும்
எச்சில் முத்த‌ம்

****

உன் பிற‌ந்த‌ நாள் காலை
குதுக‌ல‌த்துட‌ன்
பொழிய‌த்தொட‌ங்கிய‌து
அடை ம‌ழை

****

க‌விதைக‌ளெல்லாம் போதும்
காத‌ல் செய்
பெய்ய‌ட்டும் பெரும‌ழை

****

நான் தொடாத‌ இட‌ங்க‌ளை
ம‌ழை ந‌னைத்த‌தால்
தொட‌ங்குகிற‌து
ம‌ழைக்கும் என‌க்குமான ச‌ண்டை

****

உட‌லெங்கும்
படர்ந்தென்னை சில்லிட வைக்கும்
என் மழையானவள் நீ

****

பின்னூட்டங்கள்
 1. Raji சொல்கிறார்:

  Nice da.. Awesome..

 2. Sivakumar PALANISAMY சொல்கிறார்:

  கலக்கல் நீண்ட நாளைக்கு பிறகு பழைய நினைவுகளை கண்முன் கொண்டுவந்த கவிதை

 3. மாரிமுத்து சொல்கிறார்:

  !!!!மீண்டும் அடலேறு!!!!

  அனைத்தும் அருமை.

  //நான் தொடாத‌ இட‌ங்க‌ளை
  ம‌ழை ந‌னைத்த‌தால்
  தொட‌ங்குகிற‌து
  ம‌ழைக்கும் என‌க்குமான ச‌ண்டை// அட!

 4. Rajasekaran சொல்கிறார்:

  Very nice lines da Nanba!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s