வெயிலானவள் நீ

Posted: ஏப்ரல் 20, 2012 by அடலேறு in அடலேறு, கவிதை
Tags: ,

வெயில் நாட்களில்
துப்பட்டாவை பின்
கழுத்தில் சுற்றி
தலை மூடியிருப்பாயே
அதில் வடிந்து போனவன்
நான்

******

வெயிலால் உருகிப்போன
சாக்லேட்டை நுனி
மூக்கு படர நீ
சாப்பிடுவதை ரசிக்கவேணும்
நீளட்டும் இந்த கோடை

****
கோடையின் இந்த‌
நடுநிசி விழிப்புகள்
அனைத்தும்
உன்னை
நினைத்துக்கொள்ளத்தான்

******

வெட்கம் விலகிய
இரவில் போர்வை விலக்கி
அணைத்துக்கொள்
நீளட்டும் இந்த
அடர் ஜாமம்

******

நீண்ட கோடை
விடுமுறை முடிந்த‌
சந்திப்பில்
எல்லாரும் இருக்க‌
ஓடிவந்து பின்கழுத்தனைத்து
முத்தமிட்டாயே போதும்
இனி மெல்ல
தொடங்கட்டுமென் கர்வம்

********

யாருமறியா என் பிம்பத்தில்
மூழ்கி காதல் எடுக்கும்
சிறகற்ற யட்சி நீ

********

முன்கை கொஞ்சமே மடக்கி
நெற்றி வியர்வை
துடைத்த பின் பார்ப்பாயே
அதில் தான்
என்னை தேடிக்கொண்டிருக்கிறேன்

******

இத்தனை வெயிலா என‌
சலித்துக்கொள்கிறாய் நீ
இத்தனை அழகா என‌
பிரமித்துக்கொள்கிறது
வெயில்

******

உனக்கென்ன பேசாமல்
கல்லூரிக்கு சென்று
விடுகிறாய்
உன்னை காணாத கோபத்தில்
சுட்டெரிக்கிறது சூரியன்
மாலை வரை

*****

யாருமறியா பின்னிரவில்
இறுக்கி மூடிய போர்வைக்குள்
வரும் கூதல் காற்று நீ

*****

பேருந்து பயணந்தில்
ஏறும் இடம் தொடங்கி இறங்கும்
இடம் வரை கூட வந்து
இறங்குகையில் முத்தமிட்டு செல்பவள் நீ

*******

உதடு சுழித்து
வியர்வை துடைத்து
மென் துப்பட்டாவில் காற்று வீசியபின்
முணுமுணுத்துக் கொள்வாய்
சூரியனை அன்பிலன் என்று

*******

வியர்வை படிந்த
முகத்தில் முத்தக்
கோட்டோவியம்
வரையும் என்
வெயிலானவள் நீ

*****

சார்பு இடுகை : மழையானவள் நீ

பின்னூட்டங்கள்
  1. kovaimusarala சொல்லுகின்றார்:

    கோடையை இப்படியும் ரசிக்க முடியுமா ? உணர்தல் பழையது உணர்த்தியது புதுமை அருமை ………

  2. Raji சொல்லுகின்றார்:

    Nice🙂

  3. மாரிமுத்து சொல்லுகின்றார்:

    கோடை வெயிலில்
    இப்படி
    குளுகுளு கவிதை..

  4. Nasrul சொல்லுகின்றார்:

    இத்தனை வெயிலா என‌
    சலித்துக்கொள்கிறாய் நீ
    இத்தனை அழகா என‌
    பிரமித்துக்கொள்கிறது
    வெயில்

    Indha varigalai padikum bodhu naanum ninaipadhundu
    yaaraiyavadhu kaadhalithirukkalam endru

  5. kapilashiwaa சொல்லுகின்றார்:

    //நீண்ட கோடை
    விடுமுறை முடிந்த‌
    சந்திப்பில்
    எல்லாரும் இருக்க‌
    ஓடிவந்து பின்கழுத்தனைத்து
    முத்தமிட்டாயே போதும்
    இனி மெல்ல
    தொடங்கட்டுமென் கர்வம்//

    நல்ல வரிகள்..அதுவும் இறுதி வரிகள் சொல்லும் ஆயிரம் அர்த்தங்கள்..
    வாழ்த்திக்கள் அடலேறு.

  6. vaarththai சொல்லுகின்றார்:

    //நீண்ட கோடை
    விடுமுறை முடிந்த‌
    சந்திப்பில்
    எல்லாரும் இருக்க‌
    ஓடிவந்து பின்கழுத்தனைத்து
    முத்தமிட்டாயே போதும்
    இனி மெல்ல
    தொடங்கட்டுமென் கர்வம்//

    புலவரே …. உமது இந்த பாடலில் பிழை உள்ளது ….

    முதல் ஆறு வரிகள் இறந்த காலத்தில் உள்ளது.
    கடைசி இரண்டு வரிகள் எதிர் காலத்தில் உள்ளது.

    and then

    //கழுத்தனைத்து// அல்ல

    கழுத்தணைத்து

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s