கண்ணாடி – நிமிட கதை

Posted: மார்ச் 15, 2013 by அடலேறு in அடலேறு

chicago-pencil-drawing-mirror-image-artbunnydesigns.com_

டேய் சாமிநாதா நோக்கு ஓன்னு இல்ல. ஏன் இப்படி மனச போட்டு  குழப்பிண்டிருக்க,இந்தா ஜலம் குடுச்சுக்கோ,சித்த நாழி காத்தாட உக்காரு எல்லா சரியா போரும் என்றார் நகரின் பிரபல வைத்திய நண்பன் பக்தவச்சலம்.எனக்கு ஒன்னு இல்லை-ல பின்ன ஏன் என்னை இந்த பாடு படுத்தரேள்னு  கேட்க தோணியது. அதுக்கும் ஆவாளே கற்பன பண்ணின்டு பச்சை கலரின் ஒரு முழுங்கு மாத்திரை தருவா,அது வேண்டாம்  என அமைதியாய் இருந்து விட்டேன்.

நான் கொஞ்ச நாட்களாக  வித விதமான யோசிக்க வருது. என் மூத்த மக அலமு வந்துட்டுப்போன ஒரு சாயந்திரம் வழக்கமா என்னோட ஈசி சேர்ல படுத்திருந்த, ஏதோ என்ன ஈஷிண்டு நிக்கறதா தோணித்து, முழிச்சுப்பாத்தா சித்த நாழி முன்ன பாத்தமே அதே பக்தவச்சலம், என்னடா கிளீனுக்குக்கு போகாம இங்க வந்துருக்கனு பேசிட்டிருந்தோம்.பக்தா என் பால்ய கால சிநேகிதன் , பிராமணாளா இருந்துட்டு மாமிசம் சாப்பிடாதனா கேக்கறானா, ஆத்துக்கு வரப்ப சுத்த பத்தமாதா வருனும்னு சொல்லீருக்க  கீழ வீதி கோவில்ல நெய் வேத்தியம் செய்ய கல்யாணியும் கோயிலுக்கு போய்டா,ஆத்துல இல்ல சரி ரொம்ப தூரம் வந்துருக்கானேனு அடுப்படிக்கு போய் காபி போட்டுண்டு வந்தா கல்யாணி குதியோ குதின்னு குதிக்கறா, நா ஆத்துல இல்லாத நேரத்துல காப்பில சக்கரைய அள்ளிபோட்டு குடிக்கறேளானு, அடி அசடு இது எனக்கில்ல  பக்தாவுக்குன்னு சொல்லி ஹால்ல பாத்தா ஆள காணம் , சரி கால் கழுவ பின்னாடி போயிருப்பான்னு அங்க போனா அங்கயும் இல்ல,அப்பறம் தான் எல்லாரும் சொல்றா பக்தா இங்க வரவே இல்லனு, எனக்கு என்ன பண்றதுன்னே சித்த நாழி ஒடல, ஒரு வேல எல்லாரும்  நம்மள கேளிபண்றாளாக்கும்னு நினைச்சுண்டு நானும் கொஞ்சம் அதிகமாகவே சிரிச்சு வைச்சன்.

உடனடியா பக்தா கிளினுக்கு போன் பண்ணா சாட்சாத் அவன் குரல்லயே ஒரு ஆளு பேசறா, என்னாடா  எனக்கே கால் பண்ணீட்டு பக்தா  இருக்கானானு கேக்கறயானு கிண்டல் பண்றான்.அவன் கிளீனுக்குக்கும் எங்க  ஆத்துக்கும் 15கி.மீ தூரம் இருக்கும் அதுக்குள்ள அங்க எப்படி போக முடியும், அவன்-ட இருக்கறதே ஒரே ஒரு பழயை சில்வர் பிளஸ் வண்டி அதுலயும் 30க்கு மேல போக மாட்டான், வண்டியும் போகாது. பின்ன எப்படி அங்க அவனோட குரல் கேக்குது, அன்று முழுக்க காபியில் சீனி போட்டு குடிப்பதற்காக நான் நடத்திய நாடகமாகவே கல்யாணி நினைத்து அது பெரிய விவகாரமாகி பெரியவன் கேசவனுக்கு இரண்டு முறை டிரங் கால் செய்துவிட்டாள்.

அவனும் ஏம்பா இப்படியெல்லாம் பண்றேள் நாளைக்கு ஏதோ ஒன்னுன்னா நாங்க எல்லாரும் தூரத்துல இருக்கோம் யார் பாத்துப்பா., சாமி சாமி சித்த  அம்மா சொல்றத கேட்டிண்டு அமைதியா இருங்க என்றான்.பக்தவச்சலம் வீட்டுக்கு வந்து என்னை ஏமாற்றியதாகவே பட்டது.ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக இப்படி நடக்க ஆரம்பித்துவிட்டது.

அன்னைக்கு கண்ணாடி முன்ன நின்னு தல சீவிட்டு இருக்க, கண்ணாடிக்குள்ளயும் என்ன மாதிரியே ஒருத்தன் நின்னுட்டு இருக்கான்,இப்படி இங்கீதம் இல்லாம பேசதீங்கோனு எல்லாரும் சொல்றா, எனக்கு என்னமோ கண்ணாடிக்கு பின்னாடியும் ஒரு உலகம் இருக்கு, அதிலயும் என்ன மாதிரியும், கல்யாணி மாதிரியும், ஏன் உங்கள மாதிரியும் கூடதான் எல்லாரும் இருக்கா அங்கயும் பக்தாவோட சில்வர் பிளஸ் இருக்கு ,அலமு இருக்கா நம்மள மாதிரி எல்லாரும் இருக்கா,நான் தல சீவ போறப்ப கண்ணாடிக்கு பின்னாடி    உலகத்துல இருக்கற நானும் தல சீவதான் கண்ணாடிக்கு வர்றன்.அதனால தான் எனக்கு கண்ணாடில உருவம் தெரிறது.

கல்யாணி: இப்படி தான் இவரு ஒளறிண்டே இருப்பாரு, நீங்க வேலைய பாருங்க, அன்னைக்கு காபில சீனி அள்ளி போட்டுண்டு பழிய பக்தா மேல போட்டார், இன்னைக்கு கண்ணாடிக்குள்ள உலகம்னு.. சே..சே

கேசவன்: இத்தன வயசாயும் என்ன படுத்தி எடுக்கறார்.காபீல சீனி போட்டார், லட்டு மறைச்சு தின்றார்னு தினமும் ஒரே பிரச்சனை

நான்: எனக்கு என்னமோ சாமிநாதன் சார்  சொல்றது சரின்னு தான் படுது. கண்ணாடி முன்னாடி 2 நிமிஷம் நின்னு பாத்த அப்படித்தான் எனக்கு தோனுது

சாமிநாதனாகிய நான்: அலமு, கேசவன் , நான்,பக்தா,கல்யாணி எல்லாரும் வேற வேற இல்ல எல்லாமே நான் தான்.,  அதான் முன்னாடியே சொன்னனே கொஞ்ச நாட்களாக  வித விதமான நடக்குதுன்னு. பக்தாவ பாத்தா சரிப்படும்னு நினைக்கற., நீங்க என்ன சொல்றேள்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s