ஜனவரி, 2015 க்கான தொகுப்பு

புதுக்கணக்கு

Posted: ஜனவரி 4, 2015 by அடலேறு in அடலேறு, அனுபவம், festival

2014ஒரு வருடம் முழுதும் எதுவுமே எழுதாமல் இருந்திருக்கிறேன். அத்தனை மந்தமாக கழிந்திருக்கிறது 2014. நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், மிக சொற்ப அளவில் தான் வாசிக்க முடிந்தது. பயணங்கள் மீதான‌ பேருவகை கொண்டவன் ஆனால் மிக முறைவாக பயணங்களையே செய்ய முடிந்தது 2014 ல். ஸ்டெர்ஸ் என்றால் என்ன என்பதை உணர்ந்த வருடம். சென்ற வருட உறுதிமொழிகளில் ஒன்றை கூட முழுதாக நிறைவேற்ற முடியவில்லை என்பது கழிவிற‌க்கத்தின் உச்சம். ஆனால் கனவுகளுக்காக முடிந்தவரை முயன்றிருக்கிறேன் என்பதே என்னளவிலான சாதனை. என்னை உற்று பார்க்க தொடங்கியது இந்த வருடம் தான்.

கலைந்து போன கனவுகளுக்கு 2015ம் ஆண்டின் புது பெயிண்ட் அடித்திருக்கிறேன். அனைத்தையும் கூண்டில் ஏற்றியாகிற்று , ஒவ்வொன்றாக குறி பார்த்து சுட வேண்டியது தான் பாக்கி . கத்து கிட்ட மொத்த வித்தையும் இறக்கணும் என்று ஆண்டின் தொடக்கத்தில் நினைப்பது எவ்வளவு அபத்தம் என்று உணர தொடங்கியிருக்கிறேன். இந்த வருடம் நின்று நிதானமாக ஆட வேண்டும். இந்த ஆண்டிற்கான உறுதிமொழிகளும் , கனவுகளும் வரிசை கட்டி நிற்கின்றன‌. என்னளவில் 2015 ஆண்டை தொகுக்கும் போது ஒரு மகத்தான ஆண்டாக இருக்கும். உங்களுக்கும் அப்படியே அமைவதாக. ஆமென்.

ஹாப்பி நியூ இயர் மக்கா 🙂

Advertisements