பார்வை- Monster with Thousand Heads- சென்னை சர்வதேச திரைப்பட விழா

Posted: ஜனவரி 8, 2016 by அடலேறு in அடலேறு, திரைப்படவிழா, விமர்சனம்
குறிச்சொற்கள்:, , ,

152340

இது மெக்ஸிகோ திரைப்படம் . கதை மிக எளிமையானது, சிகிச்சை மறுக்கப்படும் க‌ணவனுக்காக போராடும் மனைவி. உலக திரைப்ப‌ப்படங்களே மெதுவான காட்சி அமைப்புகளை கொண்டது என்ற வாதத்தை நிறைய பேரிடம் கேட்டிருக்கிறேன், அதற்கு நேரெதிர் படம் இது. நேர்த்தியான திரைக்கதை மற்றும் சலிக்காத பார்வை கோணங்கள் ஒவ்வொரு காட்சியையும் அழகாக்குகிறது.

இன்சூரன்ஸ் நிறுவனம் தன்னுடைய கணவனுக்கு தர வேண்டிய சிகிட்சை உதவிகளை தர மறுக்கிறது. கணவர் மிக அவரசரமான மருத்துவ தேவையில் இருக்கிறார். நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டால் ., இரண்டை அழுத்துவும், எட்டை அழுத்தவும் என கடுப்படிக்கிறார்கள். டாக்டரை பிடிக்கமுடியவில்லை. ஒரு வழியாக அவரை பிடிக்க அலுவலகத்திற்கே வந்தால் அவர் வார விடுமுறையை கழிக்க‌ எஸ்கேப்பகிறார். இறுதியாக அவர் வீட்டை கண்டுபிடித்து துப்பாக்கி முனையில் மடக்கும் போது , டாக்டரின் மனைவி மருத்துவ உதவி கிடைக்காமல் போவ‌தற்கு இவரை போன்ற டாக்டர்களே காரணம் எனவும், இதை சரிசெய்ய இவருடைய மேனேஜரால் முடியும் எனவும் அவர் தற்போது இருக்கும் கிளப்பையும் இடம் காட்டுகிறாள். அங்கே போனால் அந்த‌ அதிகாரி ஏற்கனவே வாரவிடுமுறை கொண்டாட தொடங்கிவிட்டார்., சாவகாசமாக திங்கள்கிழமைக்கு மேல் வரசொல்கிறார். அங்கேயும் தன்னுடைய கணவரின் அவசரத்தை சொல்லியும் வேலைக்காகாமல் துப்பாக்கியை நீட்ட, அவர் அவருக்கு மேலுல்ல அதிகாரிகை கைகட்டுகிறார்., அங்கே போனால் அவர் அதற்கு மேலுல்ல அதிகாரி என குரங்கு வாலை பிடித்த கதையாகிறது. கடைசியாக அனைவரையும் சமாளித்து தன்னுடைய கணவனுக்கு மருத்துவம் பார்த்தாளா இல்லையா என்பதை திரையில் பாருங்கள்.

சுவாரசியங்கள் சில‌, மேனஜரை பார்க்கும் போது எதேச்சையாக துப்பாக்கியால் சுட்டு விடுவது, தன்னுடைய மகனுடனான சிறு சண்டை, துப்பாக்கி களேபரங்கள் அனைத்தும் முடிந்ததும் “அடுத்து நாம் பேங்கை கொள்ளையடிக்கலாம்” போன்ற வசனங்களை சொல்லலாம்.

மிக முக்கியமாக இடத்தை இந்த படம் பிடிப்பதற்கு காரணம் சமூகத்தில் புரையோடிப்போன ஊழலை ஒரு பெண்ணின் வலியுனூடாக காட்சிபடுத்தியிருக்கிறது. அவசர தேவையில் இருக்கும் போது கூட அதிகார வர்கத்தின் கதவுகள் ஒரு போதும் சாமானியனுக்காய் திறக்காது என்பதை இந்த படம் பேசுகிறது. மனிதன் தன்னை காத்துக்கொள்ள தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களை நோக்கி கையை நீட்டுகிறான். அந்த நிறுவனத்தின் முதலாளியயே பிடித்தும் கூட தான் இந்த நிறுவனத்தின் செயல் அதிகாரி தான், முதளீட்டார்கள் தான் முடிவெடுக்க முடியும் என அடுத்தவரை நோக்கி கையை நீட்டுவார். இப்படி மனிதர்களின் அலட்சியத்தையும், தனிமனித திமிரையும், உழலையும் ஒரு சேர காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் பலம்.

காட்சிகளின் நேர்த்தி ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. கிளப் பார்க்கிங்கிலிருந்து காரில் வெளியேரும் காட்சியை சொல்லலாம், வாகனத்திற்கு ஒரு அடி வெளியே தள்ளி கேமராவை வைத்திருப்பர் இயக்குனர் வாகனத்தின் ஒரு முனையில் இருந்து காட்சிபடுத்தப்பட்டிருக்கும் அந்த நகர்வு. காரின் உள்ளே ஒரு பாதியையும், வெளியே ஒரு பாதியும், பின் பிரேமில் சுழலும் தளம் என நேர்த்தியான காட்சி. இருளை மிகச்சிறப்பாக ஒளிப்பதிவாளர் கையாண்டிருக்கிறார். கட்சிதமான திரையம்சம், உறுத்தாத நிர்வாண காட்சிகள், இசை, ஒளிப்பதிவு என அதற்கான தரத்தை தக்கவைத்து கொள்கிறது மாண்ஸ்டர் வித் தொசண்ட் ஹெட்ஸ்.

சாமான்யன் எப்போதும் சாதாரணமானவன் தான். அவனால் அரசுக்கு எதிராக துரும்பையும் அசைக்க முடியாது. நிற்கதியற்று , வெறுப்பும், கழிவிரக்கமும் கொண்டவனாக தன்னையே அவன் கீழ்மை படுத்துக்கொள்வான் தான். ஆனால் அவனிடம் ஒரு துப்பாக்கி கிடைத்தால், அதிகாரதிற்கு எதிராக அந்த தோட்டாக்களை பயன்படுத்த தயங்கமாட்டான் என்பதை இந்த படம் நமக்கு சொல்கிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s