பிப்ரவரி, 2016 க்கான தொகுப்பு

பெயர் மாற்றம்

Posted: பிப்ரவரி 20, 2016 by அடலேறு in நிலன்

 

Change

இதுவரை அடலேறு பக்கம் என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருந்த இந்த வலைபக்கம் இனி நிலன் பக்கங்கள் என்ற பெயரில் இயங்கும்.

Advertisements

பெருந்தலைவர்

Posted: பிப்ரவரி 19, 2016 by அடலேறு in அரசியல்
குறிச்சொற்கள்:,

நம் மண்ணின் மகத்தாக தலைவர் காமராஜரை பற்றின உரை. விருப்பமிருப்பவர்கள் கேட்கலாம். அரசியல் என்பதை தாண்டி ஒரு அருமையான உரை.

சேர்ப்பு:  காமராஜர் காலம் ஏன் பொற்காலம்

இன்று அம்மன் டிபன் சென்டரின் காலை உணவு. கையேந்தி பவன்களில் அம்மன் டிபன் சென்டரின் இட்லிக்கும், பொங்கலுக்கும் தனி இடம் உண்டு.  பச்சை மிளகாய் வைத்து அரைத்த தேங்காய் சட்னியை விட இட்லிக்கு வேறோர் நண்பன் இல்லை. மற்ற கடைகளை போல தண்ணியாக சாம்பார் உற்றுவதில்லை. கெட்டியாக, சுவையாகவும் இருந்தது. நானும் நண்பரும் சாப்பிட்ட விவரம் . 4 இட்லி, ஒரு அரை பொங்கல், 2 வடை விலை என்னவாகஇருக்கும் என்று நினைத்து பாருங்கள் ?

2 இட்லிகளை 36 ரூபாய்+ tax என கூசாமல் காசு பிடுங்கும் சரவண பவன் இருக்கிற இதே ஊரில் தான் இந்த கடையும் இருக்கிறது. நாங்கள் சாப்பிட்டதன் விலை 35 ருபாய். 35 ரூபாய் தானே தரம் எப்படியோ என நினைக்க தேவையில்லை. மிக சுத்தமாக, சுவையான காலை உணவு. கேபிள் சங்கரின் இந்த விடியோவை பாருங்கள்., இன்னும் தெளிவாகும். நன்றி கேபிள்.