பொள்ளாச்சி ரயில்

Posted: மார்ச் 16, 2016 by நிலன் in நிலன், பயணம், பொள்ளாச்சி ரயில்
குறிச்சொற்கள்:,

09jan_dgrajhi3__MA_2274564f

பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்கு ரயில் விட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது, ஆனால் நேற்று தான் முதன் முதலில் பயணம் செய்தேன். கோவையிலிருந்து சென்னைக்கு வர ஏழு மணிநேரம் ஆனால் அதன் அருகாமை ஊரான பொள்ளாச்சியில் இருந்து வர பதினொன்றரை மணிநேரம். இருந்தாலும் எங்க ஊர் வண்டி எனும் சித்தாப்பில் ஏறிக்கொண்டேன். முதலில் வசீகரித்தது பொள்ளாச்சி ரயில் நிலையத்தின் அமைதி மற்றும் சுத்தம்.

ரயிலுக்கு கையசைக்கும் குழந்தைகள், மனிதர்கள் ஏறக்குறைய அருகி விட்டார்கள். அது வெரும் கையசைப்பு கிடையாது. ராட்சத உருவம் கொண்டு ஓடும் ஒரு பொருளை பார்த்து ஏற்படும் தன்னிலை மறந்த‌ சந்தோஷம். மிக நுட்பமாக நீங்கள் இதனை பார்க்கலாம். குழந்தைகளோ , குழந்தைமை (infantilization) கொண்ட மனிதர்களால் மட்டும் தான் அதை செய்ய முடியும். மற்றவர்களுக்கு தான் வளர்ந்து விட்டோம் என்ற பிரஞை எப்போதும் இருப்பதால் ரயிலை பார்த்ததும் குழந்தை மனம் கொண்டவர்களாக‌ மாறி கையசைக்க முடியவில்லை. ரயிலையோ, யானையயோ அல்லது அது ஒத்த பேருருவங்கலையோ பார்ததும் குழந்தையாதல் என்பது ஒரு வரம்.

இது தான் என்னை வியப்படைய செய்தது. என்னுடைய கப்பார்மெண்டில் பொத்தமாக மூன்று பேர் இருந்தோம். நான் படிக்கட்டருகே நின்று கொண்டிருந்தேன், சாலையில் போகிறவர்கள், ரயில் கடப்பதற்காக காத்திருப்பவர்கள் என நிறைய பேரை பார்க்க முடிந்தது, ஏறக்குறைய அனைத்து குழுந்தைகளும் ரயிலுக்கு கையசைத்தார்கள். பெரும்பாலான மனிதர்கள் புன்னையுடன் ரயிலை பார்த்தார்கள். சிலர் கையசைக்கவும் செய்தார்கள். சற்று தூரம் கடந்ததும் மேய்சல் நிலத்தை ரயில் கடந்தது கூர்ந்து கவனித்தேன் அங்கே இருந்த ஒருவர் கூட ரயிலை தவிர்த்து வேறு வேலை செய்யவில்லை. ரயில்விட்ட புதிதில் என்றால் ரயிலை பற்றிய பிரமை இருக்கும் ஆனால் ஒரு வருடம் கடந்த பின்னும் கூட இன்னும் அதன் உருவம் ஈர்க்கிறது என்றால் என்ன சொல்ல. இதற்கு முற்றிலும் எதிரானது சென்னையின் மனநினை

ரயில் கடப்பதை, சென்னை போல சலித்துக்கொள்ளும் ஒரு நகரத்தை நான் பார்த்ததில்லை.குரோம் பேட்டை ஊருக்குள் போகும் சந்திப்பில் சில நிமிடங்கள் நின்று பாருங்கள், வசைகள், கெட்ட வார்த்தைகள் காரி உமிழ்தல் என அத்தனை வெறுப்பையும் கொட்டுவார்கள். பொறுமை அற்றவர்கள் என்று சொல்ல மாட்டேன், அவர்கள் மனிதத்தை எப்போதோ தொலைத்தவர்கள். அவர்களிடம் பேச ஒன்றுமில்லை.

IMG_2509

வண்டி மெல்ல பொள்ளாச்சி தாண்டி உடுமலை வந்தது. அங்கே மகளிர் கல்லூரியில் பின்புரம் ரயில் பாதையோரம் இருக்கிறது. அப்போது மணி ஒரு 5.30 இருக்கலாம் , கல்லூரி விட்ட நேரம் பெரும்பாலன பெண்கள் பூரிப்புடன் கையசைத்தார்கள். சில பெண்கள் உயரத்திலுருந்து கையசைக்க அவரசர அவசரமாக ஏறிக்கொண்டிருந்தார்கள். இது தான் பொள்ளாச்சி வட்டத்தின் எதார்தம் என எனக்கு பட்டது. நாம் ரயிலுக்கு கையசைக்கும் போது ரயிலுக்குள் இருந்து முகம் தெரியாத மனிதன் நம்மை நோக்கி பதிலுக்கு கையசைப்பதை விரும்பாதவர்கள் யார் ?

பொய், அகங்காரம் சூழ்ந்திருக்கும் உலகத்திலுருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ரயிலை கண்டதும் வேறோர் உலகிற்கு தாவ முடிந்தவர்கள் என்னை பொருத்தவரை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். மனிதத்தை தாங்கிபிடிப்பவர்கள் அவர்கள் தான். அப்படி ஒரு நண்பர் உங்களுக்கு இருந்தால் அவருடன் பேசிப்பாருங்கள் வேறோர் உலகிற்கு செல்லும் வழி அது.

Advertisements
பின்னூட்டங்கள்
 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  பொள்ளாச்சி ரயில் = எனக்கு மிகவும் பிடித்தது ரயில் பயணம் – இன்னும் நடைப்பயிற்சிக்குச் சென்றாலும் ரயில் 10 நிமிடங்களில் வந்து விடும் என்றால் இருந்து பார்த்து விட்டு வருவேன். மீட்டர்காஜ் ரயில் ஓடிய போது 5 பயணிகள் இங்கிருந்து (ஸ்ரீவில்லிபுத்தூர்) கிளம்பினால், வந்து சேர்ந்தால் பெரிது. அப்போது ஆட்டோக்கள் கிடையாது, எனவே வழி அனுப்புதல், ஏற்றி விடுதல் எல்லாம் சைக்கிளில் சென்று தான். இப்போது தினம் 100 பேர் வருகிறார்கள், 100 பேர்கள் கிளம்புகிறார்கள் – பொதிகை எக்ஸ்பிரஸ் மூலம் – எனக்கு மிகவும் மகிழ்வான காட்சி. – எனது பக்கத்தில் பகிர்கிறேன். அருமையாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.இயற்பெயர் சதீஷ் – நிலம் முழுதும் கொண்ட‌ தீராத காதலலால் நிலன் – nilanpages@gmail.com

  Like

 2. rathnavelnatarajan சொல்கிறார்:

  பொள்ளாச்சி ரயில் = எனக்கு மிகவும் பிடித்தது ரயில் பயணம் – இன்னும்
  நடைப்பயிற்சிக்குச் சென்றாலும் ரயில் 10 நிமிடங்களில் வந்து விடும் என்றால்
  இருந்து பார்த்து விட்டு வருவேன். மீட்டர்காஜ் ரயில் ஓடிய போது 5 பயணிகள்
  இங்கிருந்து (ஸ்ரீவில்லிபுத்தூர்) கிளம்பினால், வந்து சேர்ந்தால் பெரிது.
  அப்போது ஆட்டோக்கள் கிடையாது, எனவே வழி அனுப்புதல், ஏற்றி விடுதல் எல்லாம்
  சைக்கிளில் சென்று தான். இப்போது தினம் 100 பேர் வருகிறார்கள், 100 பேர்கள்
  கிளம்புகிறார்கள் – பொதிகை எக்ஸ்பிரஸ் மூலம் – எனக்கு மிகவும் மகிழ்வான
  காட்சி. – எனது பக்கத்தில் பகிர்கிறேன். அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
  வாழ்த்துகள்.இயற்பெயர் சதீஷ் – நிலம் முழுதும் கொண்ட‌ தீராத காதலலால் நிலன் –
  nilanpages@gmail.com

  2016-03-16 15:47 GMT+05:30 “நிலன் பக்கங்கள்” :

  > நிலன் posted: ” பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்கு ரயில் விட்டு ஒரு
  > வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது, ஆனால் நேற்று தான் முதன் முதலில் பயணம்
  > செய்தேன். கோவையிலிருந்து சென்னைக்கு வர ஏழு மணிநேரம் ஆனால் அதன் அருகாமை ஊரான
  > பொள்ளாச்சியில் இருந்து வர பதினொன்றரை மணிநேரம். இருந்தாலும்”
  >

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s