வீரப்பன் பிடியில் 14 நாட்கள்

Posted: ஜூன் 8, 2016 by நிலன் in காடு, நிலன், வீரப்பன்
குறிச்சொற்கள்:, ,

Veerappan

கர்நாடகாவை சேர்ந்த பிரபல வனவிலங்கு புகைப்படக்காரர்களான கிருபாகர் – சேனானி இருவரையும் அரசு உயர் அதிகாரிகள் என நினைத்து வீரப்பன் கடத்திவிடுகிறார். தன்னார்வ வனவிலங்கு புகைப்படக்காரர்கள் எனத் தெரிய வந்ததும் வீரப்பனுக்கும் இருவருக்கும் நட்பு உருவாகிறது. காட்டுப் பறவைகள் குறித்து நிறைய விஷயங்களை இருவரிடமும் ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் கேட்டு வீரப்பன் தெரிந்துகொள்கிறார். வீரப்பனுடன் இருந்த தங்கள் அனுபவத்தை ‘Birds, Beasts and Bandits: 14 Days with Veerappan’ என்னும் பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். இது தமிழில் ‘வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்’ என்னும் பெயரில் வெளிவந்துள்ளது.

இப்போது தன்னுடைய இருபது வயதை கடக்கும் இளைஞர்களுக்கு வீரப்பன் ஒரு சாகச மனிதனாக ஒரு கடத்தல் காரனாகத்தான் தெரியும். யாரோ சொன்ன ., கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து அவர்களுக்குள் ஒரு சித்திரத்தை வரைந்திருப்பார்கள், அப்படி பட்ட சித்திரங்களை எல்லாம் கலைத்துப்போட்டு வீரப்பனின் பல முகங்கலில் ஒன்றை நேர்படுத்தி பார்க்க இந்த புத்தகத்தை சிபாரிசு செய்கிறேன். காலச்சுவடு கண்ணன் இதை என்னிடம் தரும் போது இது நகைச்சுவையை முன்னிலை படுத்தி எழுதப்பட்டது என்றார். ஆனால் இந்த புத்தகம் அதிலிருந்து எல்லாம் மாறுபட்டு கடத்தல் நடந்த‌ நேரத்தில் வீரப்பனின் ஒரு குறுக்கு வெட்டு தோற்றத்தை இது காட்டுகிறது.

இதில் வீரப்பனின் வலது கை சேத்துக்குளி கோவிந்தனை பற்றி அபாரமான ஒரு பகுதி வரும். நிச்சயம் தவறவிடக்கூடாத பக்கம் அது. ஒரு எள்ளல் தொனியில் எழுதப்பட்டாலும் வீரப்பனின் சித்திரத்தை சற்றேறக்குறைய சரியாகவே காட்டுகிறது இந்த புத்தகம்.

காடும் காடு சார்ந்த வாழ்க்கையும், அதையொட்டிய மனிதர்களும் எப்படி இருந்தார்கள் என்பதை இதில் அறியலாம், மிக முக்கியமாக வீரப்பனுக்கே தெரியாமல்
வீரப்பனை பற்றிய புனைவுகள் எப்படி உரு கொள்கிறது என்பது பட்டவர்த்தனமாக இதில் தெரியும், இந்த புத்தகத்தை படித்தவர் இதன் கண்கள் வழியே தான் 1000 பக்கத்திற்கு டிஜிபி விஜயகுமார் வீரப்பன் பற்றி எழுதப்போகும் புத்தகத்தை அனுகுவர். எது எப்படியோ வரலாற்றை எழுதும் போது வீரப்பனுக்கான பக்கத்தின் கணம் அதிகம் இருக்கும், அது தேவையும் கூட.

Advertisements
பின்னூட்டங்கள்
 1. N.Rathna Vel சொல்கிறார்:

  வீரப்பன் பிடியில் 14 நாட்கள் = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி நிலன் பக்கங்கள்

  Like

 2. rathnavelnatarajan சொல்கிறார்:

  வீரப்பன் பிடியில் 14 நாட்கள் = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி நிலன்
  பக்கங்கள்

  2016-06-08 21:10 GMT+05:30 “நிலன் பக்கங்கள்” :

  > நிலன் posted: ” கர்நாடகாவை சேர்ந்த பிரபல வனவிலங்கு புகைப்படக்காரர்களான
  > கிருபாகர் – சேனானி இருவரையும் அரசு உயர் அதிகாரிகள் என நினைத்து வீரப்பன்
  > கடத்திவிடுகிறார். தன்னார்வ வனவிலங்கு புகைப்படக்காரர்கள் எனத் தெரிய வந்ததும்
  > வீரப்பனுக்கும் இருவருக்கும் நட்பு உருவாகிறது. கா”
  >

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s