கற்பனைக்கு எட்டாத சிறுமி

Posted: பிப்ரவரி 5, 2019 by நிலன் in கவிதை, நிலன்
குறிச்சொற்கள்:, , , , ,

நான்கு டிகிரியில் ஹாங்காங் உறைந்து கொண்டிருந்தது. ஒரு கவிதையை படிக்க குளிரும், தூவானமும், கருப்பு தேனீரைவிட வேறெதேனும் சிறந்த மனநிலையை தந்து விட முடியுமா என்ன?  நீண்ட நாள்கள் கழித்து ஒரு கவிதை புத்தகத்தை படிக்கிறேன். ராஜேஷ் வைரபாண்டியனின் “ வேனிற் காலத்தின் கற்பனை சிறுமி” . ராஜேஷின் கவிதைகளில் நீண்ட நாட்கள் பயணிப்பதால் அவர் உருவாக்கும் சித்திரங்களின் ஜாலம் எனக்கு அத்துப்படி. நட்சத்திரங்களும், கனவுகளும், கற்பனை சிறுமிகளும், தேவதைகளும்,இரவும் , வண்ணத்துபூச்சிகளும், ஜூலியும் இல்லாமல் நிலாவின் கவிதைகள் இல்லையென்பேன்.

Image result for வேனிற் காலத்தின் கற்பனை சிறுமி

வித்தைகள் செய்து ஜாலம் உருவாக்குவதுபோல வார்த்தைகள் கொண்டு  கவிதை ஜாலம் செய்கிறீர்கள் நிலா. ஜாலங்களில் தொலைந்து போகாமல் இருக்க வார்த்தை சரடுகளை கணக்கிட்டு முடிக்கும் போது நாம் ஒரு கவிதைக்குள் கட்டுண்டிருப்போம்.

என்னை கவர்ந்த ஒரு கவிதை. ” இழப்பின் பொத்தல்கள் “

கைகள் நிறைய நட்சத்திரங்களை

அள்ளிக்கொண்டு

உனக்காக நின்றிருந்தேன்.

அன்று வராத நீ,

கைகள் கட்டப்பட்டு

கண்கள் நீர் கசிய நிற்பவனிடம்

கைகள் நிறைய கனவுகளை

ஏந்தியபடி மிகத்தாமதமாக வருகிறாய்.

பழுத்த இலையொன்றை காற்று

மெல்ல புடட்டிப் போடுகிறது.

இலையில் அடிப்பாகமெங்கும்

நம் இழப்பின் பொத்தல்கள்

இப்படி ஒரு மென் கவிதைகளில் தொலைந்து போகாமல் இருக்க கல் நெஞ்சம் வேண்டும் 😉 . தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் நம் மனதில் உருவாக்கும் பிம்பத்தை கலைத்து ஒழுங்கு படுத்தி நேராக்கி பார்க்கும் போது , கவிதையின் பிரம்மாண்டத்தை காண்பீர்கள்.  நிச்சம் இத்தொகுப்பு தமிழ் பின்நவீன கவிதைகளில் ஒரு அங்கம் . கவிதைகள் ஆசிர்வதிக்கப்பட்டது. கவிஞர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், கவிஞனின் காதலிகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நிலா ஆசிர்வதிக்கப்பட்டவர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s